ஐரோப்பாவை அச்சுறுத்தும் ஒமிக்ரான்… பூஸ்டர் டோஸ் தடுக்கும் என ஆய்வில் கண்டுபிடிப்பு
இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வரும் நாள்களில் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரமாக இருக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வரும் நாள்களில் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரமாக இருக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் கணிக்கின்றனர்.
தென் ஆப்பரிக்காவில் முதன்முதலாக தென்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு, கடந்த இரண்டு நாள்களாக ஐரோப்பியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் மற்றும் இங்கிலாந்தில் அதிகளவிலான ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
Advertisment
டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிட்யூட்டின் அறிக்கைபடி, அங்கு மட்டும் சுமார் 1280 ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த ஒமிக்ரான் பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. வரும் நாள்களில் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரமாக இருக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சராசரியாக இங்கிலாந்தில் 50 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாகுகிறது. நேற்று தான், மொத்தம் 58,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன, இது ஜனவரிக்குப் பிறகு மிக அதிகமாகும். இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 100,000 ஐ எட்டும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
Advertisment
Advertisements
அதே போல், அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு தினந்தோறும் 1 லட்சம் வழக்குகள் பதிவாகிறது. தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில் நாட்டில் 43 ஓமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரானை எதிர்க்கும் பூஸ்டர் டோஸ்
இங்கிலாந்தின் புதிய பகுப்பாய்வு படி, ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசிகள் பலவீனமான பாதுகாப்பை வழங்குகிறது என்றும், பூஸ்டர் டோஸ் செலுத்தியிருந்தால் கொரோனா அறிகுறிகளுக்கு எதிராக 75 விழுக்காடு பாதுகாப்பு இருப்பதாக கண்டறியந்துள்ளனர்.
ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட 581 நோயாளிகள் மற்றும் டெல்டாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு தரவின்படி, ஒமிக்ரான் முதன்முதலாக தென்பட்ட தென் ஆப்பிரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகும்.கிடைத்த தரவுகளில், ஒமிக்ரான் குறைவான அளவிலே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 4 க்கு இடையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் தரவு 6.3 விழுக்காடு ஆகும். இது ஜூலை மாதத்தில் டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.
ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 1200 பேரிடம் கணக்கிடுகையில், அதில் 98 பேர் மட்டுமே ஆக்சிஜன் சப்ளையும், 4 பேர் வென்டிலேஷனிலும் இருந்தனர். அதில், பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் தான். வரும் காலத்தில் பாதிக்கப்படும் நோயாளிகளின் வயது மாறும் பட்சத்தில், அதன் விளைவுகள் மாறக்கூடும்" என தெரிவிக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil