இந்த 21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பது குறித்து சீனா பல முறை பேசியிருந்தது. ஆனால், தற்போது, சீனாவின் நூற்றாண்டாக மாற்றுவதில் பெய்ஜிங் அதீத கவனம் செலுத்தி வருகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் பிரிவின் இயக்குநரும், தி இந்தியன் எக்ஸ்பிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பங்களிப்பு ஆசிரியருமான சி.ராஜா மோகன் தெரிவித்தார். மேலும்,“இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்தால, இந்த 21ம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டாகவோ, சீனா நூற்றண்டாகவோ மாறும் வாய்ப்புகள் மேலும் சிக்கலாக்கும் என்றும் நினைவுபடுத்துகிறார்.
தேசியவாதத்தை முதன்மைப்படுத்தும் சீனா, தனது அண்டை ஆசிய நாடுகளையும் தேசியவாத உணர்வை முன்னிலைப்படுத்த நிர்பந்திப்பதாக அவர் எச்சரிக்கிறார்
19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க சிந்தனையில் மத்தியில் தங்கள் அடையாளங்களை மீண்டும் கண்டறியும் நோக்கில் கிழக்கத்திய நாகரிகம் போராடியது. அந்த கால கட்டத்தில், தோன்றிய பல ஆழ்நிலை அரசியல் கருத்துக்களில் ஒன்று தான் ஒருங்கிணைந்த ஆசியா
"சீனாவின் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் கூட அவ்வப்போது ஒருங்கிணைந்த ஆசியாவைப் பற்றி பேசியதுண்டு. ஆனால், அவரின் நோக்கம் மிகவும் வித்தியாசமானது. முந்தைய அதிபர் டெங் ஜியாவ்பிங், சீனாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு மையப்புள்ளியாக ஒருங்கிணைந்த ஆசியாவை யூகித்தார். 1960-ன் நடுப்பகுதியிலிருந்து, 1970 வரை , மாவோவின் கீழ் நீடித்த சீனா பண்பாட்டுப் புரட்சியின் கீழ் வடிந்த இரத்தத்தை துடைப்பதில் அவர் தீர்க்கமாக இருந்தார். புரட்சியின் பெயரில் அண்டை நாடுகளின் சீர்குலைக்கும் வகையிலான மாவோவின் நடவடிக்கைளுக்கும் டெங் முற்றுப்புள்ளி வைத்தார்… பிற நாடுகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சீனா தன்னை நவீனமயமாக்கி கொள்ளும் என்பது டெங் ஜியாவ்பிங்-ன் அடிப்படை வாதம்" என்ற ஆசிரியர் தனது கட்டுரையில் தெரிவித்தார்.
ஜி ஜின்பிங்- ன் குறிக்கோள் மிகவும் மாறுபட்டது. மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள ஒரு நாட்டை அவர் வழிநடத்துகிறார்.( டெங் ஜியாவ்பிங் சீர்திருத்தங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை). அண்டை நாடுகள் சீனாவின் பிராந்திய முதன்மையை ஏற்றுக்கொள்வதையே 'ஒருங்கிணைந்த ஆசியா' என்பதற்கு அர்த்தம் என்று ஜின்பிங் கருதுவதாக ஆசிரியர் உணர்த்துகிறார்.
எவ்வாறாயினும், சீனாவின் தன்னிச்சையான வளர்ச்சியில் தான் ஆசிய நூற்றாண்டின் அழிவுக்கான நிலைமைகள் உருவாக்கியிருக்கலாம் என்பது இதிலுள்ள ஒரு துரதிர்ஷ்டவசமான முரண்பாடு. அவர், "அண்டைய நாடுகளை விட சீனா மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது என்பதற்கான பொருள், ஒருங்கிணைந்த ஆசியாவைப் பற்றிய கற்பனை இனி சீனாவுக்கு தேவையில்லை என்பதாகும்" என்றார்.
சீனாவின் சக்திவாய்ந்த தேசியவாதம் அண்டை நாடுகளில் தனது நிலப்பரப்பை விரிவாக்கம் செய்யவும், பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தவும் தூண்டினால், அதற்கு சமமான தீவிரமான தேசியவாத சக்திகள் சீனாவின் பொதுவுடைமைக் கட்சியின் உறுதியான கொள்கைகளுக்கு எதிராக செயல்படும், என்று வாதாடுகிறார்.
"பொருளாதார ரீதியாக பின்தங்கிய இடத்தில் இருக்கும் இந்தியா, சீனா நூற்றாண்டுக் கனவை முதல் நபராக கேள்வி கேட்கும் பட்சத்தில் சில பின்வ்விளைவுகளை சந்திக்கலாம். இருப்பினும், சீனா பொதுவுடைமைக் கட்சியால் அண்டை நாடுகளில் கட்டவிழ்த்து விடுகிற தேசியவாத உணர்வை புறந்தள்ளும் பெய்ஜிங்கிற்கு பாடம் புகட்ட புதுடெல்லி வலுவானதாக இருக்கலாம்,” என்று ஆசிரியர் கருதுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.