அன்புள்ள வாசகர்களே,
ExplainSpeaking: High unemployment, a common factor in poll-bound states: உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, மக்களின் வருமானம், வேலையின்மை, சுகாதாரம் போன்ற பல்வேறு பொருளாதார அளவுருக்களில் இந்த மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க இது ஒரு நல்ல நேரம்.
சில மாதங்களுக்கு முன்பு, இந்த மாநிலங்களில் தனிநபர் வருமானம் பற்றி ExplainSpeaking-ல் எழுதப்பட்டிருந்தது. அவை சமீபத்திய RBI தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. https://indianexpress.com/article/explained/uttar-pradesh-uttarakhand-punjab-goa-manipur-per-capita-incomes-explained-7520742/ என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் விரிவான பகுப்பாய்வைப் படிக்கலாம், ஆனால் இந்த பகுப்பாய்வின் கண்டுபிடிப்புகளை சுருக்கமாகக் கூறும் இரண்டு விளக்கப்படங்கள் இங்கே உள்ளன.
விளக்கப்படம் 1 ஒவ்வொரு ஐந்து மாநிலங்களுக்கும் தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை வரைபடமாக்கி தேசிய சராசரியுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இதில், உ.பி.யின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் விட பெரியதாக இருந்தாலும், தனிநபர் அடிப்படையில், அது மிகவும் பலவீனமாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது. கோவா அப்படியே தலைகீழாக உள்ளது.
ஆனால் வாக்காளர்களின் கண்ணோட்டத்தில், மிக முக்கியமான கேள்வி: கடந்த 5 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் எப்படி வளர்ந்தது?
விளக்கப்படம் 2 இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், இந்த விளக்கப்படம் மூன்று தரவு புள்ளிகளை வழங்குகிறது. ஒன்று, நீல நிற பட்டையில் காட்டப்பட்டுள்ளது, அது FY13 மற்றும் FY17 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் வருமானம் வளர்ந்த விகிதம். இரண்டு, சிவப்பு நிறப் பட்டையானது கொரோனாவுக்கு முன் தனிநபர் வருமானம் எந்த அளவில் வளர்ந்தது என்பதைக் காட்டுகிறது. கடைசியாக, ஆரஞ்சு நிறப் பட்டை கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமானம் எப்படி வளரும் என்பதைக் காட்ட முயற்சிக்கிறது. அதாவது FY18 முதல் FY22 வரை. ஆரஞ்சு பட்டை கணக்கீடுகள் தனிநபர் வருமானம் FY22 இல் முழுமையாக மீண்டு வரும் என்ற நம்பிக்கையான அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், FY22க்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் நம்மிடம் இருப்பதால் இது இப்போது நடக்க வாய்ப்பில்லை. ஒட்டுமொத்த GDP கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் அதே வேளையில், தனிநபர் வருமானம் மற்றும் செலவுகள் கொரோனாவுக்கு முந்தைய நிலைகளை விட கணிசமாகக் குறைவாகவே இருக்கும் என்று சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.
உத்தரகாண்ட், அதன் மக்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்தும் போது, தேசிய சராசரியை கடக்க முடியாத நிலையில், மற்ற அனைத்து தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களும் தேசிய சராசரியை விட மிகக் குறைவாகவே செயல்பட்டுள்ளன என்பதை விளக்கப்படம் 2 காட்டுகிறது. தனிநபர் வருமானம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கோவா மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறது.
இப்போது, இந்த மாநிலங்களில் வேலையின்மை நிலை குறித்து பார்ப்போம். தரவுகளுக்கு, இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) சமீபத்திய மதிப்பீடுகளை எடுத்துக் கொள்வோம். ஆனால் மணிப்பூருக்கான தரவை CMIE வழங்காததால், இந்த பகுப்பாய்வு நான்கு மாநிலங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
வேலையின்மையை எவ்வாறு அளவிடுவது?
ஒவ்வொரு மாநிலத்தின் தரவையும் எடுப்பதற்கு முன், அதை எவ்வாறு படிப்பது என்பது பற்றிய சுருக்கமான அறிமுகம்.
பொதுவாக, வேலையின்மை விகிதத்தின் (அல்லது UER) அடிப்படையில் வேலையின்மை கண்காணிக்கப்படுகிறது. UER என்பது தொழிலாளர் படையில் உள்ளவர்கள் வேலை கோரியும், ஆனால் அது கிடைக்காதவர்களின் சதவீதமாகும்.
சாதாரண சூழ்நிலையில், UER என்பது வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கண்காணிப்பதற்கான மிகச் சிறந்த அளவீடு ஆகும், ஆனால் இந்தியாவின் விஷயத்தில், குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில், வேலையின்மை துயரத்தின் உண்மையான அளவை துல்லியமாக மதிப்பிடுவதில் UER பயனற்றதாகி வருகிறது. ஏனென்றால், தொழிலாளர் சக்தியே வேகமாகச் சுருங்கி வருகிறது.
தொழிலாளர் படையில் வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆனால் அதைப் பெற முடியாதவர்கள் (அதாவது வேலையில்லாதவர்கள்) உள்ளனர்.
ஆக, கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) குறைந்து கொண்டே வருகிறது. இதுபோன்று, அடிக்கடி UER வீழ்ச்சியடைந்ததாகத் தோன்றுவது, அதிக வேலைகள் உருவாக்கப்பட்டதால் அல்ல, மாறாக குறைவான மக்கள் வேலைகளைக் கோருவதால், வேறுவிதமாகக் கூறினால், LFPR வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒப்பிடக்கூடிய பிற நாடுகளில், LFPR 60% முதல் 70% வரை உள்ளது. இந்தியாவில், இது 40% ஆக உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், மற்ற நாடுகளில் பணிபுரியும் வயதினரைச் சேர்ந்த 60% பேர் (அதாவது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) வேலை கேட்கிறார்கள், இந்தியாவில் 40% பேர் மட்டுமே வேலை தேடுகிறார்கள்.
20 சதவீத புள்ளி வேறுபாடு என்பது, அதுவும் இந்தியாவின் மக்கள்தொகையை கருத்தில் கொள்ளும் போது, எந்த வேலையும் இல்லாத பெரும் எண்ணிக்கையிலான (மில்லியன் கணக்கான) மக்களைக் குறிக்கிறது. ஆனால் மில்லியன் கணக்கானவர்கள் முறையாக வேலை “கேட்க” தவறியதால், இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால்தான் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை போதுமான அளவில் கண்டறிய UER தவறிவிட்டது.
இந்த காரணத்திற்காகவே, CMIE இன் CEO மகேஷ் வியாஸ், இந்தியாவில் வேலையின்மைக்கு என்ன நடக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு “வேலைவாய்ப்பு விகிதத்தை” (அல்லது ER) பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
வேலைவாய்ப்பு விகிதம் என்பது பணிபுரியும் வயதுடையவர்களில் வேலையில் உள்ளவர்களின் சதவீதமாகும். வரையறையின்படி, இது LFPR இல் உள்ள இயக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இதைப் பற்றி மேலும் விரிவாகப் படித்து, இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் (அரசு) வேலையில்லாத் திண்டாட்டத்தை எப்படித் தவறாகப் படிக்கிறார்கள் என்பதை https://indianexpress.com/article/explained/uttar-pradesh-jobs-india-unemployment-explainspeaking-7658103/ என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஐந்து முக்கிய மாறிகள்
ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஐந்து முக்கிய மாறிகள் உள்ளன. இவை:
மொத்த வேலை செய்யும் வயது மக்கள் தொகை (அதாவது 15 வயதுக்கு மேல்); (ஆயிரங்களில்)
மொத்த வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை (15 வயதுக்கு மேல்); (ஆயிரங்களில்)
வேலை வாய்ப்பு விகிதம் (உழைக்கும் வயது மக்கள் தொகையில் % ஆக மொத்தம்)
தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (உழைக்கும் வயது மக்கள் தொகையில் தொழிலாளர் படை)
வேலையின்மை விகிதம் (தொழிலாளர்களில் வேலையற்றோர்களின் சதவீதம்)
நீங்கள் அட்டவணையைப் படிக்கும் போது, UER அடிக்கடி வீழ்ச்சியடைவதை நீங்கள் கவனிப்பீர்கள், ஏனெனில் அதிகமான மக்கள் வேலை பெறுவதால் அல்ல (#2 மேலே) ஆனால் குறைவான நபர்கள் வேலை கோருவதால் (#4 மேலே).
வேலையின்மை துயரத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள, ERக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் (மேலே #3).
டிசம்பர் 2016 முதல் டிசம்பர் 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான தரவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
கோவா
கோவா மாநிலம் அதிக வேலையின்மை விகிதத்தைக் கண்டு வருகிறது, ஆனால் UER மட்டும் வேலையின்மை துயரத்தின் ஆழத்தைப் பிடிக்கவில்லை, ஏனெனில் LFPR கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேற்கண்ட படத்தின் முதல் மூன்று நெடுவரிசைகள் வேலையின்மையை பற்றி சிறப்பாக உங்களுக்கு கூறுகின்றன.
சதவீத அடிப்படையில், கோவா வேலைவாய்ப்பு விகிதத்தில் மிகவும் அற்புதமான சரிவைக் கொண்டுள்ளது. 2016 டிசம்பரில் 49.31% ஆக இருந்தது, ஆனால் தற்போது 32% ஆக குறைந்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவாவின் உழைக்கும் வயதுடைய ஒவ்வொரு இரண்டாவது நபருக்கும் வேலை இருந்தது, ஆனால் இப்போது அந்த விகிதம் மூன்றில் ஒருவராக குறைந்துள்ளது.
முழுமையான எண்கள் வேலையின்மை துயரத்தின் சரியான அளவைக் காட்டுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில், கோவாவின் உழைக்கும் வயது மக்கள் தொகை 12.29 லட்சத்தில் இருந்து 13.13 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், வேலை வாய்ப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 6.06 லட்சத்தில் இருந்து 4.20 லட்சமாக குறைந்துள்ளது.
விந்தை என்னவென்றால், 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஜனவரி-ஏப்ரல் 2019 காலகட்டத்தில் தான் ER இன் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டது.
பஞ்சாப்
பஞ்சாபிலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று குறைவான ஆட்களே வேலை செய்கிறார்கள். டிசம்பர் 2016 இல், அதன் மொத்த உழைக்கும் வயது மக்கள் தொகை 2.33 கோடியாக இருந்தபோது, அவர்களில் 98.37 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை பெற்றனர். டிசம்பர் 2021 இல், அதன் உழைக்கும் வயது மக்கள் தொகை 2.58 கோடியாக வளர்ந்தபோது, அதில் வெறும் 95.16 லட்சம் பேர் மட்டுமே வேலை செய்து வருகின்றனர்.
இந்த பகுப்பாய்வில் உள்ள அனைத்து மாநிலங்களும் ER மற்றும் LFPR ஆகிய இரண்டிலும் தேசிய சராசரிக்குக் கீழே விழுந்தாலும், பஞ்சாப் தேசிய சராசரிக்கு மிக அருகில் இருப்பது மட்டுமல்லாமல், கடந்த 5 ஆண்டுகளில் ER இல் மிகச்சிறிய சரிவை மட்டுமேக் கண்டுள்ளது.
உத்தரப்பிரதேசம்
UER ஏன் வேலையின்மை அளவை சரியாகக் கண்டறியாமல் கொள்கை வகுப்பாளர்களை (அரசாங்கத்தை) தவறாக வழிநடத்துகிறது என்பதற்கு UP ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
வெளிப்படையாக, UP வேலையின்மை விகிதம் 4.83. அதாவது பஞ்சாப் மற்றும் கோவாவை விட மிகக் குறைவு. இன்னும் UER ஆனது LFPR இன் வீழ்ச்சியை மறைக்கிறது.
முதல் மூன்று நெடுவரிசைகளைப் பார்த்தால் உண்மையான நிலை தெரியும்.
டிசம்பர் 2016 இல், உ.பி.யில் 5.76 கோடி பேர் வேலை பார்த்தனர். அப்போது அதன் மொத்த உழைக்கும் வயது மக்கள் தொகை 14.95 கோடி. மற்ற மாநிலங்கள் மற்றும் தேசிய சராசரியுடன் (அந்த நேரத்தில் 43%) ஒப்பிடும்போது அதன் ER ஏற்கனவே மிகவும் குறைவாக இருந்தது.
ஐந்து ஆண்டுகளில், அதன் ER மேலும் சரிந்து 33%க்குக் கீழே உள்ளது.
இதன் விளைவாக, உ.பி.யின் மொத்த உழைக்கும் வயது மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடிக்கு மேல் அதிகரித்துள்ள போதிலும், வேலை வாய்ப்புள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 16 லட்சமாக சுருங்கிவிட்டது.
உத்தரகாண்ட்
இங்கு பகுப்பாய்வு செய்யப்பட்ட நான்கு மாநிலங்களிலும் உத்தரகாண்ட் மாநிலம் மிகக் குறைந்த UER ஐக் கொண்டுள்ளது. ஆனால் மீண்டும், UP போலவே, அதன் குறைந்த UER உண்மையான வேலையின்மை துயரத்தை மறைக்கிறது, ஏனெனில் இது நான்கு மாநிலங்களிலும் மிகக் குறைந்த LFPR மற்றும் குறைந்த வேலைவாய்ப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
ஐந்தாண்டுகளில், அதன் உழைக்கும் வயது மக்கள் தொகை சுமார் 11.5 லட்சமாக வளர்ந்துள்ளது, ஆனால் வேலைகள் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 4.5 லட்சமாக குறைந்துள்ளது.
பகுப்பாய்வின் சுருக்கமான விவரம்
நான்கு மாநிலங்களிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. அதாவது, உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தாலும், அதேநேரம் உ.பி.யில் கோடிக்கணக்கிலும் அதிகரித்தாலும், வேலை வாய்ப்புள்ளவர்களின் எண்ணிக்கை, மேலே செல்வதற்குப் பதிலாக, உண்மையில் குறைந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, உ.பி. தனது வேலைவாய்ப்பு விகிதத்தை டிசம்பர் 2016 முதல் (ஏற்கனவே மிகக் குறைவாக இருந்தது) தொடர்ந்திருந்தால், 2021 டிசம்பரில் மாநிலத்தில் மொத்தப் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.59 கோடிக்குப் பதிலாக 6.57 கோடியாக இருந்திருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், டிசம்பர் 2016 இல் இருந்த அதே சதவீத மக்கள் (உழைக்கும் வயது மக்கள்தொகையின் விகிதத்தில்) 2021 டிசம்பரில் உ.பி.யில் வேலை செய்திருந்தால், உழைக்கும் வயதினரைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1 கோடி பேர் இன்று உ.பி.,யில் வேலையில் இருப்பர்.
கடைசியாக, இந்த மாநிலங்கள் அனைத்தும் தேசிய சராசரிக்குக் கீழே இருந்தபோதும், ஒட்டுமொத்த இந்தியாவின் LFPR மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பதே உண்மை. டிசம்பர் 2016 மற்றும் டிசம்பர் 2021 க்கு இடையில், இந்தியாவின் LFPR 46% இலிருந்து 40% ஆகவும், வேலைவாய்ப்பு விகிதம் 43% இலிருந்து 37% ஆகவும் குறைந்துள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவின் மொத்த உழைக்கும் வயது மக்கள் தொகை 96 கோடியில் இருந்து 108 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், மொத்த வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை 41.2 கோடியிலிருந்து 40.4 கோடியாகக் குறைந்துள்ளது.
இக்கட்டுரை தொடர்பான உங்கள் பார்வைகள் மற்றும் கேள்விகளை udit.misra@expressindia.com இல் பகிரவும்
முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்.
உதித்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil