Big picture: Booster shot for BJP and the national rise of Kejriwal: தற்போதைய நிலவரப்படி, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாறு படைக்கும். பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது மாநிலத்தை வென்ற முதல் பிராந்தியக் கட்சியாக மாறுகிறது, மேலும் உத்தரப் பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் முழு ஐந்தாண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வரும் முதல் முதல்வராகப் போகிறார். இந்தத் தேர்தல் முடிவுகள், வரும் நாட்களில் தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றங்களையும் உணர்த்துகின்றன.
நாட்டில் பொதுநல அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு ஜாதி மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து, நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயனுள்ள விநியோக முறைகள் காரணமாக இருக்கலாம், கெஜ்ரிவாலின் அரசியல், மக்கள் நலன் சார்ந்த அம்சங்களில் கவனம் செலுத்துவதால் வாக்காளர்களால் வரவேற்கப்படுகிறது.
பஞ்சாபில் ஆம் ஆத்மியின் தோற்றம் ஒரு அற்புதமான செயல்திறனுடன் தேசிய அளவிலும் மறுசீரமைப்புகளுக்கு வழிவகுக்கும் அலைகளை உருவாக்கப் போகிறது. ஆம் ஆத்மியை உன்னிப்பாகக் கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள், இந்தச் செயல்பாட்டை பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வருங்கால தேசியத் தலைவராக கெஜ்ரிவாலின் ஒப்புதலாகக் கருதுகின்றனர்.
பஞ்சாபின் தற்போதைய நிலவரங்கள் காங்கிரஸின் மேலும் சிதைவு மற்றும் தேசிய அளவில் காந்திகளின் தலைமையின் சரிவு ஆகியவற்றைக் குறிக்கிறது, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பைக் கட்டியெழுப்பக்கூடிய கட்சியாக காங்கிரஸை எதிர்பார்த்தவர்களுக்கு தோல்வியை அளித்துள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு முந்தைய சில நாட்களில் ஆம் ஆத்மிக்கு எதிராக மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்த நிலையிலும், அனைத்து முரண்பாடுகளையும் மீறி எல்லை மாநிலமான பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று வருவது, தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் மற்ற மாநிலங்களில் முன்னிலைப் பெற்று வரும் பாஜக உட்பட நிறுவப்பட்ட தேசியக் கட்சிகளுக்கு நம்பகமான மாற்றாக அரவிந்த் கெஜ்ரிவால் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது என்பதை நிரூபிக்கிறது.
இதையும் படியுங்கள்:
பஞ்சாபில் கிடைத்த அற்புதமான வெற்றி, கெஜ்ரிவாலின் கவனத்தை இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவிருக்கும் குஜராத்திற்கு நகர்த்தலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற காந்திநகர் மற்றும் சூரத் உள்ளாட்சித் தேர்தல்களில் ஆம் ஆத்மி ஏற்கனவே கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.
கோவாவில் ஆம் ஆத்மி கட்சி மூன்று இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, மேலும் உத்தரகாண்டிலும் வாக்குப் பங்கைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் இந்தத் தேர்தல் செயல்திறன் அக்கட்சி, தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெறுவதை நெருங்கச் செய்யும்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் உள்ள தேர்தல் முடிவுகள், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மற்றும் பாஜகவின் ஆட்சி சாதனைக்கான வாக்கெடுப்பாகக் கருதப்படுவதால், தேர்தல் முடிவுகள் பாஜகவை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் வருவது கட்சிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும். கடந்த ஆண்டு இறுதியில் உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா கூறியதாவது: 2024 லோக்சபா தேர்தலில் மோடியின் தலைமையில் நாம் வெற்றி பெற வேண்டும், அதன் அடித்தளம் உத்தரபிரதேச 2022 சட்டமன்றத் தேர்தல் மூலம் அமைக்கப்படும்.
எது எப்படியிருந்தாலும், சுமார் 32% வாக்குகளைப் பெற்றிருக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் செயல்பாடு, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் இந்து பெரும்பான்மை வாக்குகளை மத அடையாளக் கொடியின் கீழ் வைத்திருக்கும் முயற்சிகளை மேற்கொண்ட பாஜகவுக்கு நல்ல செய்தி அல்ல. 2014ல் இந்து அடையாளத்தின் கீழ் கொண்டு வர முடிந்த பாஜகவின் ஆதரவு தளத்தை அகிலேஷ் உடைத்து, அதை 2017 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தலிலும் தொடரச் செய்து, யாதவ் அல்லாத OBC சமூக ஆதரவுத் தளத்தின் ஒரு பகுதியைப் பறிக்க முடிந்தது என்று தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, பாஜகவுக்கு பெரிய வாக்கு வங்கி இல்லாத பஞ்சாப்பைத் தவிர, மற்ற நான்கு மாநிலங்களிலும் அதன் “வளர்ச்சி சார்ந்த திட்டங்கள்” அற்புதமாகச் செயல்பட்டதாக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், உத்தரபிரதேசத்தின் நிலவரம், சாதி ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு நல்ல செய்தி, தலித்துகள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு தளம் மேலும் சிதைவதற்கான அறிகுறிகளாகும். மாயாவதி மாநிலத்தில் உள்ள மொத்த பட்டியலிடப்பட்ட சாதிகளில் 54 விழுக்காட்டினராக உள்ள, தனது ஜாதவ் சமூக வாக்குகளை பெற்றிருக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தலித் வாக்குகளில் ஒரு பகுதி பாஜகவுக்கு சென்றிருக்கிறது என்பதை இதுவரையிலான முடிவு சுட்டிக்காட்டுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil