scorecardresearch

ஏ.எஸ்.டி.ஆர்: அரசாங்கத்தின் ஏ,ஐ, முகம் அடையாளம் காணும் கருவி எவ்வாறு போன் மோசடிகளைக் கண்டறியும்?

ASTR: சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஏ.எஸ்.ஐ.ஆர் – ஏ,ஐ, முகம் அடையாளம் கண்டறிவது அடிப்படையிலான கருவியை பயன்படுத்த உள்ளது.

ASTR Tool
ASTR Tool

தொலைத் தொடர்புத் துறை (DoT) செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) அடிப்படையிலான முக அடையாளக் கருவியை உருவாக்கியுள்ளது, இது தொலைத் தொடர்புத் துறையின் சந்தாதாரர்கள் தரவுகளை ஆராய்ந்து ஒரு நபரின் பெயரில் பல இணைப்புகள் கொண்டிருக்கிறதா என்பதைக் கண்டறியும்.

Artificial Intelligence and Facial Recognition powered Solution for Telecom SIM Subscriber Verification (ASTR) எனப்படும் கருவி போலி மொபைல் இணைப்புகளைக் கண்டறிந்து தடுப்பதன் மூலம் சைபர் குற்றங்களை குறைக்க உதவுகிறது.

ஏ.எஸ்.டி.ஆர் தொடக்கம்

2012-ம் ஆண்டில், அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் தங்கள் பயனர்களின் படங்கள் உட்பட தரவுகளை அரசின் தொலைத் தொடர்புத் துறை (DoT) உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஏ.எஸ்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்தி பயனர்களின்
முக அங்கீகார வழிமுறையை இயக்கும் முக்கிய தரவுத்தளமாக இந்தப் படங்கள் அமைகின்றன. ASTR திட்டம் ஹரியானாவில் உள்ள DoT இன் பிரிவால் ஏப்ரல் 2021 மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

ஏ.எஸ்.டி.ஆர் சோதனை முயற்சி ஹரியானாவின் மேவாட் பகுதியில் ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டது. ASTR பைலட் திட்டத்திற்கு முன்பு, மேவாட்டில் தோராயமாக 16.69 லட்சம் சிம்கள் இருந்தன, அவற்றில் அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடமிருந்து மொத்தம் கிட்டத்தட்ட 5 லட்சம் சிம்கள் மோசடியானது என கண்டறியப்பட்டது.

ASTR எவ்வாறு செயல்படுகிறது?

தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த நவீன் ஜாகர் ஆய்வுக் கட்டுரையின்படி, சந்தாதாரர்களின் படங்களில் உள்ள முகங்கள், முகத்தின் சாய்வு மற்றும் கோணம், ஒளிபுகாநிலை மற்றும் படங்களின் இருண்ட நிறம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்காக கன்வல்யூஷனல் நியூரல் நெட்வொர்க் (CNN) மாதிரிகளைப் பயன்படுத்தி குறியாக்கம் செய்யப்படுகின்றன.

அதன் பிறகு, தரவுத்தளத்தில் உள்ள அனைத்து முகங்களுக்கும் எதிராக ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு முக ஒப்பீடு மேற்கொள்ளப்படுகிறது, மேலும் ஒரே மாதிரியான முகங்கள் ஒரு கோப்பகத்தின் கீழ் தொகுக்கப்படும். இரண்டு முகங்கள் குறைந்தபட்சம் 97.5 சதவிகிதம் வரை பொருந்தினால், ASTR ஆல் ஒரே மாதிரியாக இருக்கும். ஜாக்கரின் அறிக்கையின்படி, ASTR ஆனது 1 கோடி படங்களின் தரவுத்தளத்திலிருந்து 10 வினாடிகளுக்குள் சந்தேகத்திற்குரிய முகத்திற்கு எதிரான அனைத்து சிம்களையும் கண்டறியும் திறன் கொண்டது.

முகங்கள் பொருந்தியவுடன், ASTR இன் அல்காரிதம், சந்தாதாரர் பெயர்களுக்கு ஒற்றுமை அல்லது தோராயமான பொருத்தங்களைக் “fuzzy logic” என்று விவரிக்கும் ஒன்றைப் பயன்படுத்துகிறது. உதாரணமாக, ஒருவர் “Apple Inc” எடுத்துக்கொண்டால், “Apple Incorporated”, “Apple Park”, “iPhone” போன்ற தொடர்புடைய முடிவுகளை அல்காரிதம் உருவாக்கும். இது ஏதேனும் அச்சுக்கலைப் பிழைகளுக்கும் காரணமாகும். சந்தாதாரர் கையகப்படுத்தல் படிவம் நிரப்பப்படும் போது அது நிகழ்ந்திருக்கலாம்.

ஒரு அடையாளச் சான்றிதழைப் பயன்படுத்தி 9 மொபைல் சிம் கார்டுகள் பெற தொலைத் தொடர்புத் துறை அனுமதியளிக்கிறது.
ஏ.எஸ்.ஐ.ஆர் முதலில் 1. ஒருவரின் புகைப்படத்தில் எத்தனை இணைப்புகள் இருக்கிறது என்பதை பார்க்கும். 2. ஒரே நபர் வெவ்வேறு பெயர்களில் சிம்களை எடுத்தாரா என்பதை அறிய தரவுத்தளத்தின் மூலம் தேடலை இயக்குகிறது.

செவ்வாய்கிழமை (மே 16) செய்தியாளர் சந்திப்பின் போது, ​​தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ஒரே நபர் வெவ்வேறு பெயர்களில் 6,800 சிம் இணைப்புகளை வைத்திருந்ததை ஏ.எஸ்.டி.ஆர் கண்டறிந்துள்ளது. மேலும், மற்றொரு வழக்கில், ஒரே நபர் 5,300 இணைப்புகளை வைத்திருந்ததை கண்டறிந்துள்ளது என்றார்.

அடுத்து என்ன?

மோசடி செய்து சிம் வாங்கப்பட்டது என்பதை DoT தீர்மானித்தவுடன், அந்த சிம் இணைப்புகளை துண்டிக்க சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு துறை பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்.

தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, முதல் கட்டத்தில் ASTR ஐப் பயன்படுத்தி 87 கோடிக்கும் அதிகமான மொபைல் இணைப்புகளின் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது, இதில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மொபைல் இணைப்புகளைப் பெற ஒரு புகைப்படத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டது. சரிபார்ப்புக்குப் பிறகு, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களால் 36 லட்சத்திற்கும் அதிகமான இணைப்புகள் நிறுத்தப்பட்டன.

மேலும் இதே பட்டியல் வங்கிகள், பேமெண்ட் வாலட்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் இந்த எண்களை அந்தந்த தளங்களில் இருந்து துண்டிக்கப் பகிரப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Astr how govts ai and face recognition tool will detect phone frauds