Advertisment

இங்கிலாந்து செல்ல அதிஷிக்கு அனுமதி: மாநில அமைச்சர்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்; ஏன்?

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் அரசியல் அனுமதி பெற வேண்டும்.

author-image
WebDesk
New Update
Atishi cleared to fly to UK

Atishi cleared to fly to UK

டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி அடுத்த வாரம் இங்கிலாந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூன் 7) மத்திய அரசு தெரிவித்தது.

Advertisment

ஜூன் 15-ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அதிஷிக்கு அழைப்பு வந்த நிலையில் தனது அரசியல் அனுமதியை தாமதிக்கமால் உடனே வழங்கும் படி அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி செவ்வாயன்று நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் மத்திய அரசிடம் அரசியல் அனுமதி (Political Clearance) பெற வேண்டும்.

ஜூலை 2022-ல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்தியதால், சிங்கப்பூரில் நடந்த உலக நகர உச்சி மாநாட்டில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு பின்பற்ற வேண்டிய செயல்முறை என்ன?

மே 6, 2015 தேதியிட்ட சுற்றறிக்கையில், கேபினட் செயலகம் கூறுகையில், மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் உத்தேச வெளிநாட்டுப் பயணம் குறித்து, அதிகாரப்பூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ அமைச்சரவை செயலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், முன் அரசியல் அனுமதி மற்றும் FCRA (வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்) அனுமதி கட்டாயமாகும்.

விண்ணப்பத்தின் நகலை பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.

அதிஷியின் வழக்கில், அரசியல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒப்புதலுக்காக இந்த திட்டம் DEA க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது ஒரு "சம்பிரதாயம்" என்று மட்டுமே நீதிமன்றம் கூறியது. மேலும் அரசியல் அனுமதி வழங்கப்பட்டவுடன் எந்தத் துறையும் வழியில் வரமுடியாது என்று வழக்கறிஞர் கூறினார்.

"அரசியல் அனுமதி" என்றால் என்ன?

இது வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இது அமைச்சர்கள், முதல்வர்களுக்கு மட்டுமல்ல

வெளிநாடு செல்ல விரும்பும் எந்தவொரு அரசாங்க ஊழியருக்கும் தேவைப்படுகிறது. இந்த அனுமதி இல்லாமல், எந்த ஒரு அரசு ஊழியரும் வெளிநாடு செல்ல முடியாது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு ஒவ்வொரு மாதமும் இந்த அரசியல் அனுமதி கோரி நூற்றுக்கணக்கான கோரிக்கைகள் வருகிறது. 2016 முதல் epolclearance.gov.in என்ற அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படுகிறது.

நிகழ்வின் தன்மை, பிற நாடுகளின் பங்கேற்பு நிலை, அழைப்பின் தன்மை மற்றும் பிற நாட்டுடனான இந்தியாவின் உறவுகள் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் அரசியல் அனுமதி குறித்த முடிவு எடுக்கப்படுகிறது. அமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குப் பிறகு விண்ணப்பங்கள் செயலாக்கப்படுகிறது.

அரசியல் அனுமதிக்கான முதல்வர்கள் (மற்றும் அமைச்சர்கள்) கோரிக்கைகள் அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதா?

அக்டோபர் 11, 2019 அன்று கெஜ்ரிவால் டென்மார்க் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்ததை அடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். முன்னதாக காங்கிரஸ் அரசு, அசாமின் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோய்க்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஜார்கண்டின் பாஜக முதல்வர் அர்ஜுன் முண்டா தாய்லாந்துக்கும் செல்ல அரசியல் அனுமதியை வழங்க மறுத்துவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment