Advertisment

ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும் இந்தியக் கல்விப் பட்டங்கள்: இதன் அர்த்தம் என்ன?

1990 களில் இருந்து பல அரசாங்கங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நுழைய அனுமதிக்கும் முயற்சியில் தோல்வியுற்றன. இது இப்போது இறுதியாக டீக்கின் நுழைவு மற்றும் வொல்லொங்காங் இன் வருங்கால நுழைவு மூலம் மாற்றப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india

வியாழக்கிழமை நரேந்திர மோடி மைதானத்தில் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ். (Express photo: Nirmal Harindran)

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் புதன்கிழமை (மார்ச் 8) இந்தியக் கல்விப் பட்டங்கள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும், என்று அறிவித்தார். இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் வரை படிக்கும் புதிய ‘மைத்ரி’ உதவித்தொகையைத் தவிர, இந்தியாவில் தனது கிளை வளாகத்தைத் திறக்கும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக, ஜீலாங்க் டீக்கின் பல்கலைக்கழகம் இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

Advertisment

அகமதாபாத்தில் ‘இந்தியா-ஆஸ்திரேலியா கல்வி உறவைக் கொண்டாடுதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஆஸ்திரேலியப் பிரதமர், சமீபத்திய அறிவிப்புகள், எந்தவொரு நாட்டுடனும் இந்தியா ஒப்புக்கொண்ட மிக விரிவான மற்றும் லட்சிய ஏற்பாடாகும், என்று கூறினார்.

ஆஸ்திரேலியா-இந்தியா கல்வித் தகுதி அங்கீகாரம்

புதிய வழிமுறையானது, ஆஸ்திரேலியாவில் பெற்ற பட்டங்கள் இப்போது இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் என்று அர்த்தம், அதேபோல, இந்தியாவில் பெற்ற பட்டங்கள் ஆஸ்திரேலியாவிலும் அங்கீகரிக்கப்படும்.

இந்த புதிய வழிமுறையின் அர்த்தம், நீங்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவராக இருந்தால் அல்லது படித்திருந்தால், நீங்கள் கடினமாக சம்பாதித்த பட்டம் நீங்கள் நாடு திரும்பியதும் அங்கீகரிக்கப்படும்  அல்லது நீங்கள் 8 லட்சமாக வளர்ந்து வரும், ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய இந்திய புலம் பெயர்ந்தோரில் உறுப்பினராக இருந்தால், உங்களின் இந்திய தகுதி ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும் என்பதில் நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கலாம், என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறினார்.

இந்த புதிய வழிமுறையை ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கடந்த வாரம் டெல்லிக்கு சென்றிருந்தபோது இறுதி செய்தனர். அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இந்தியா மற்ற ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை விட இது விரிவானது, ஏனென்றால், ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தக்கூடிய படிப்புகளைத் தவிர, ஆன்லைன் படிப்புகளும் அல்லது வொல்லொங்காங் பல்கலைக்கழகம் போன்ற ஒரு தனி வளாகம் அமைப்பதும் இதில் அடங்கும், என்று கிளேர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

இந்த ஒப்பந்தம் இந்தியர்கள் கல்வி மற்றும் வேலை ஆகிய இரண்டிற்கும் ஆஸ்திரேலியா செல்வதையும், அதேபோல் ஆஸ்திரேலியர்கள் இந்தியாவுக்கு வருவதையும் எளிதாக்கும்,  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த நடவடிக்கை இன்னும் தொழில்முறை தகுதிகளுக்கு பொருந்தாது. பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டப் பட்டதாரிகளின் தொழில்முறை பதிவுகள் இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்கு வெளியே இருக்கும்.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைப்பது பற்றி பிரதமர் அல்பானீஸ் என்ன சொன்னார்?

காந்திநகரின் GIFT சிட்டியில் அமைக்கப்படவுள்ள Geelong's Deakin பல்கலைக்கழகம், இந்தியாவில் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக இருக்கும் என்பதையும் ஆஸ்திரேலியப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.

டீக்கின் பல்கலைக்கழகத்தின் புதிய ஆஃப்ஷோர் வளாகத்தில் செயல்பாடுகள் அடுத்த ஆண்டு விரைவில் தொடங்கலாம், மாணவர்கள் சில முதுகலை படிப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மார்ச் 1 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் அறிவித்தது.

சைபர் செக்யூரிட்டி மற்றும் பிசினஸ் அனலிட்டிக்ஸ் படிப்புகளை வழங்க உள்ளது என்று பிரதமர் அல்பானிஸ் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் பிப்ரவரி 27 அன்று, உலகின் முதல் 300 இடங்களில் உள்ள இரண்டு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் சுதந்திரமான ஆஃப்ஷோர் வளாகங்களை அமைக்க மத்திய அரசை அணுகியுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்திய வளாகத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படும் மற்ற பல்கலைக்கழகம் வோலோங்கோங் பல்கலைக்கழகம் (UoW) ஆகும் - இது ஆஸ்திரேலியப் பிரதமர் உரையில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

நிச்சயமாக, மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் வந்து தங்குவதை நாங்கள் எப்போதும் வரவேற்போம்... ஆனால் அனைவருக்கும் வேறு நாட்டில் படிக்கும் வசதியோ திறமையோ இல்லை... இப்போது இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் இல்லாமல் ஆஸ்திரேலியக் கல்வியைப் பெற முடியும், என்று அவர் கூறினார்.

டீக்கின் பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (தெற்காசியா) ரவ்னீத் பாவ்ஹா கூறுகையில், இது இரு நாடுகளுக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும், மேலும் ஆஸ்திரேலியா-இந்தியா கல்வித் துறையில் ‘முதல்’ இரண்டு இடங்களில் பங்களித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டிற்குள் தொழில்துறையின் திறமையான பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலகத் தரம் வாய்ந்த முதுகலை கல்வியை வழங்குவதை கிளை வளாகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

1990 களில் இருந்து பல அரசாங்கங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நுழைய அனுமதிக்கும் முயற்சியில் தோல்வியுற்றன. இது இப்போது இறுதியாக டீக்கின் நுழைவு மற்றும் வொல்லொங்காங் இன் வருங்கால நுழைவு மூலம் மாற்றப்பட உள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிஃப்ட் சிட்டியில் உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்படும், இது நிதி மேலாண்மை, ஃபின்டெக், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய படிப்புகளை "உள்நாட்டு விதிமுறைகளிலிருந்து இலவசமாக வழங்கும் என்று அறிவித்திருந்தார்.

2007 இல் முதன்முதலில் கருத்தாக்கப்பட்ட, GIFT நகரம் காந்திநகரில் 887 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது மற்றும் பல சேவை சிறப்பு பொருளாதார மண்டலத்தை (SEZ) கொண்டுள்ளது, இது இந்தியாவின் முதல் சர்வதேச நிதி சேவை மையம் (IFSC) மற்றும் பிரத்தியேக உள்நாட்டு கட்டணப் பகுதி (DTA) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புதிய மைத்ரிஉதவித்தொகை

ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு புதிய உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டது. ‘மைத்ரி’ உதவித்தொகை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை நிதி உதவி அளிக்கும். இந்த உதவித்தொகைகள் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கலாச்சார, கல்வி மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்தும் பரந்த மைத்ரி (நட்பு) திட்டத்தின் ஒரு பகுதியாகும், என்று பிரதமர் அல்பானீஸ் கூறினார்.

பிப்ரவரி 14, 2022 அன்று ஆஸ்திரேலிய அமைச்சர்களின் கூட்டு ஊடக அறிக்கையில் ‘மைத்ரி’ உதவித்தொகை முதலில் குறிப்பிடப்பட்டது. 11.2 மில்லியன் டாலர் மைத்ரி உதவித்தொகை திட்டம், இந்திய மாணவர்களை ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்க ஊக்குவிக்கும். இது ஆஸ்திரேலியாவின் உலகளாவிய புகழ்பெற்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கும், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment