Ayodhya Title Dispute Case: 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு சென்ற ராம ஜென்மபூமி-பாப்ரி மஸ்ஜித் வழக்கை உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தம் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது .
ஆனால், மத்தியஸ்தம் குழு ஒரு சமரச முடிவிற்க்கு வராத காரணத்தால் ஆகஸ்ட் 6-ம் தேதியில் இருந்து தினசரி விசாரணை வழக்காக இதை எடுத்துக்கொண்டது .
2010-ல் அலஹாபாத் உயர்நீதிமன்றம் அப்படி என்ன தான் தீர்ப்பு வழங்கியது?
அயோத்தியில் சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அகாரா பிரிவு, சன்னி மத்திய வக்ஃப் வாரியம் உத்தரபிரதேசம், மற்றும் ராம் லல்லா விராஜ்மான் ஆகிய மூன்று கட்சிகளிடையே சமமாக நிலத்தை பிரிக்க வேண்டும் என்பதை உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
தீர்ப்பால் என்னானது?
தீர்ப்பையும் அந்த நியாய தர்க்கங்களையும் எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
உச்சநீதிமன்றத்திற்கு வந்த பிறகு...
2019 பிப்ரவரி 26-ம தேதியன்று வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் கடுமையான வாக்குவாததின் பின் வழக்கை ஒரு வாரத்திற்கு பின் மார்ச் 5-ம் தேதி விசாரிப்பதாக சொல்லியது .
இருந்தாலும், பிப்.26-ல் ஒரு கருத்தையும் உச்சநீதிமன்றம் முன்னவைத்தது. சர்ச்சையைத் தீர்ப்பதற்கான சாத்தியத்தை ஆராய இந்த ஒரு வாரத்தை பயணப்படுத்தி பாருங்கள். நீதிமன்றம் கண்காணிக்கும் மத்தியஸ்த செயல்முறையின் மூலம் இந்த சமரசம் நடக்கட்டும் .தீர்வு வருவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் அதை நாம் முயற்சி செய்து பார்ப்போம். சமரசம் ஒன்றும் தவறில்லை, சமரசத்தால் தான் பழைய காகாயங்களுக்கு மருந்தாய் இருக்க முடியும் . உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதம்,கருத்து பலபேரை யோசிக்க வைத்தது.
இதில், நீங்கள் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இது உச்சநீதிமன்றத்தின் கருத்து,ஆசை அவ்வளவு தான்.
மார்ச் 6-ல் என்ன நடந்தது?
மார்ச் 6-ல் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு புது திருப்பத்தைக் கொண்டு வந்தது . சிவில் நடைமுறைகளின் விதி பிரிவு 89-ஐ பயன்படுத்தி, இந்த வழக்கை உச்சநீதிமன்றமே ஒரு சமர குழுவிற்கு அனுப்பலாமா? என்ற கோணத்தில் கொண்டு போனது.
மார்ச் 8-ம் ஒட்டு மொத்த இந்தியாயவும், ஏன்? இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஒரு கட்டளை இட்டது.
நீதிபதி பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் அந்த சமர குழு கூட்டப்பட்டது. அதில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் மற்ற இரண்டு உறுப்பினர்களாய் நியமித்தது. இந்த குழு 8 வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் முழு அறிக்கையை சமர்பிக்க கோரியது.
ஆகஸ்ட் 1-ல் என்ன நடந்தது: முழு அறிக்கையை சமர்பித்தது.அயோத்தி விவகாரத்தில் சரியான தீர்வை எட்ட முடியவில்லை என மத்தியஸ்தர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்தியஸ்தர்கள் மூலமாக இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னாளில் இந்த மாதிரி சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?
பேச்சுவார்த்தைகளில் தீவிர முயற்சிகள் 1992 டிசம்பர் 6 அன்று இந்துத்துவா ஆர்வலர்களால் பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. ராம்ஜன்மபூமி போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விஸ்வ இந்து பரிஷத்துக்கும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கும் பல வகைகளில் சமரசத்திற்க்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் இந்த முயற்சிகளை குறைந்தது மூன்று பிரதமர்களாவது மேற்பார்வை இட்டிருந்துப்பார்கள். பாபரி மஸ்ஜித் இடிப்பு எல்லாவற்றிற்கும் முற்று புள்ளி வைத்தது.