Advertisment

உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு ஏன் மறுசீராய்வுக்கு செல்கிறது?

மறுசீராய்வு மனுக்களை மிகவும் அரிதாகவே ஏற்றுக் கொள்கிறது உச்ச நீதிமன்றம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme court hears Ayodhya verdict review petition today

Apurva Vishwanath

Advertisment

Ayodhya babri masjid ram temple review petition : பாபர் மசூதி தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று டெலிகாம் வருமானம் தொடர்பான தீர்ப்பின் மீதும் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றமோ சபரிமலை தீர்ப்பின் மறுசீராய்வு மனுக்களை மட்டுமே பரீசிலனைக்கு எடுத்துக் கொண்டது. ரஃபேல் வழக்கின் மறுசீராய்வு மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை உச்ச நீதிமன்றம்.

மறுசீராய்வு மனுக்கள் என்றால் என்ன அது எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது தான் இந்த நிலத்தின் சட்டமாகும். அதுவே இறுதியானதும் கூட. ஆனாலும் இந்திய அரசியல் சாசனம் 137ன் படி, உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது. எனவே ஒரு தீர்ப்பில் மறுபரிசீலனை மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது, அந்த வழக்கினை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து துவங்கமாட்டார்கள். மாறாக கடந்த தீர்ப்பில் கொடுக்கப்பட்ட உத்தரவில் ஏதேனும் பிழைகள் இருக்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்பதை மட்டுமே மறுபரிசீலனை செய்வார்கள்.

இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட தீர்ப்பில் ஏற்பட்ட பிழையை சரிசெய்ய நீதித்துறைக்கு மறுசீராய்வு மனுக்கள் வழி வகை செய்கிறது. ஆனால் தொடர் தவறுகளுக்கு அல்ல. 1975ம் ஆண்டு நீதிபதி கிருஷ்ணா அய்யர் “குறிப்பிட்ட அம்சம் விடுபடுதல், பிழைகள், மற்றும் பெரும்பிழைகள் ஆகியவை நீதிமன்ற குறைப்பாட்டால் தீர்ப்பில் இடம் பெற்றிருப்பின் மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியிருந்தார். மறுசீராய்வு மனுக்களை மிகவும் அரிதாகவே ஏற்றுக் கொள்கிறது உச்ச நீதிமன்றம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் சபரிமலை விவகாரத்தில் வெளியிட்ட தீர்ப்பை மட்டும் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால் நவம்பர் 14ம் தேதி உச்ச நீதிமன்றம் ரபேல் விவகாரத்தின் மறுபரிசீலனை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.  கடந்த ஆண்டு 2018ம் ஆண்டு பட்டியல் இன, பழங்குடி மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்து போக செய்த 2018ம் ஆண்டு மார்ச் மாத தீர்ப்பின் மீது போடப்பட்ட மறுசீராய்வு மனுவை ஏற்றுக் கொண்டது உச்ச நீதிமன்றம்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

எதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோருகிறார் மனுதாரர்?

2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், மூன்று முக்கிய காரணங்களின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு விடாமுயற்சிகளுக்கு பிறகு மிக முக்கியமான ஆதாரங்கள் அடிப்படையில், வெளிப்படையான காரணங்கள் அடிப்படையில், வழக்கின் தன்மை குறித்து போதுமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.  2013ம் ஆண்டு மற்றொரு வழக்கின் தீர்ப்பில் (Union of India v. Sandur Manganese & Iron Ores Ltd) உச்ச நீதிமன்றம் 9 முக்கிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு மறுபரிசீலனை தாக்கல் செய்யலாம் என்று கூறியது உச்ச நீதிமன்றம். ஒரு தீர்ப்பு குறித்து இரு வேறான பார்வைகள் இருப்பின், அதனை அடிப்படையாக கொண்டு மறுபரிசீலனை மனுவை ஏற்றுக் கொள்ள இயலாது.

யார் மறுபரிசீலனை மனுக்களை தாக்கல் செய்யலாம் ?

ஒரு குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனுவை வழக்கின் மனுதாரர்கள் மட்டுமே தர வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. சிவில் ப்ரோசிஜர் கோட் மற்றும் சுப்ரீம் கோர்ட் ரூல்ஸ் படி யார் வேண்டுமானாலும் மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்யலாம். ஆனால் அனைத்து மனுக்களும் அடுத்தக்கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்லப்படாது.

மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய என்ன நடைமுறைகள் நிலவி வருகின்றன?

1996ம் ஆண்டு மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய சில விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் நிறுவியது. ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒரு தீர்ப்பு என்பது ஒரு வழக்கின் இறுதி முடிவு என்றாலும், ஒரு உத்தரவு என்பது அதன் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்ட இடைக்கால தீர்ப்பாகும். சில நேரங்களில் மனுதாரர் முறையான காரணங்களை கொண்டு தாமதமாக ஒரு தீர்ப்பின் மீது மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தால் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்.

வழக்கறிஞர்கள் விவாதங்கள் மூலமாக இந்த மறுபரிசீலனை மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது. மாறாக அந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் மட்டுமே தீர்ப்பின் மறுசீராய்வு குறித்து அவர்களின் சாம்ப்பரில் விவாதிப்பார்கள். அந்த அமர்வில் இருந்து ஒரு நீதிபதி ஓய்வு பெற்றிருந்தாலோ அல்லது நீதிபதி வேறு வேலையில் மிகவும் பிஸியாக இருந்தாலோ சீனியாரிட்டி அடிப்படையில் ஒரு நீதிபதி மறுசீராய்வு பரிசீலனையில் இணைத்துக் கொள்ளப்படுவார். மரண தண்டனை தொடர்பான மறுசீராய்வு பரிசீலனையில் 2014ம் ஆண்டு திறந்த நீதிமன்றத்தில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அயோத்தி தீர்ப்பின் மீது மறுபரிசீலனை வைக்கப்படும்?

இதுவரை அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் மட்டுமே மறுஆய்வு கோரியுள்ளது. உத்திரபிரதேசம் சன்னி மத்திய வக்ஃபூ வாரியம் மற்றும் இதர மனுதாரர்கள் இது குறித்து இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. எதன் அடிப்படையில் மறுபரிசீலனை முன்வைக்கப்படும் என்று இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் பாபர் மசூதிக்கு மாற்றாக 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து மறுபரிசீலனை முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment