Ayodhya verdict Explained : அயோத்தி வழக்கின் தீர்ப்புகள் இன்று வெளியானது. ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பினை ஒரு மனதாக இன்று அறிவித்தது. இஸ்லாமியர்கள் இந்த நிலத்தின் மீதான தங்களின் உடைமையை இழக்கவில்லை. மாறாக பாதகமான வகையில் கைப்பற்றப்பட்ட நிலத்தின் ( adverse possession) மீது உரிமை கொண்டாட அவர்களால் இயலாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் சன்னி வக்பு வாரியத்திடம் மிக முக்கியமான கேள்வி ஒன்றை முன்வைத்தது. பாதகமான முறையில் கைப்பற்றபட்ட நிலத்தின் மீது உரிமை கோரி தான் நீங்கள் இந்த வழக்கினை தொடுத்துள்ளீர்களா என்று? பாதகமான முறையில் கைப்பற்றபட்ட நிலம் என்பது விரோதமாக கைப்பற்றப்பட்ட நிலமாகும் என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க, இஸ்லாமியர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்தனர்.
400 வருடங்களுக்கு முன்பு இந்த பாபர் மசூதி கட்டப்பட்டது. கோவில் இருந்த இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது என்று பலரும் கருதி வந்தாலும் கூட, மசூதி கட்டப்பட்ட நாளில் இருந்தே இந்த மசூதி இஸ்லாமியர்களுக்கான சொத்தாகவே பார்க்கப்படுகிறது என்று கூற, இது இந்த வழக்கின் முடிவை வேறொரு விதமாக மாற்றியுள்ளது. மேலும் அந்த நிலம் பாதகமான முறையில் கைப்பற்றப்பட்டது என்ற முடிவுக்கு எடுத்துக் கொள்ள்ளப்பட்டு இந்த விவாதத்தை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பிலும் இது போன்ற கருத்துகளை இரண்டு நீதிபதிகளை பதிவு செய்தனர். நீதிபதி டி.வி.ஷர்மா இஸ்லாமியர்கள் பாதகமான முறையில் கைப்பற்றப்பட்ட சொத்திற்கு உரிமை கோர இயலாது. அது ஒரு திறந்த இடவெளியாக இருந்தது. அனைவரும் வந்து செல்வதைப் போலவே அங்கும் இஸ்லாமியர்களும் வந்து சென்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.