அயோத்தி தீர்ப்பு: புதிய ராமர் கோயிலை அறக்கட்டளை நிர்வகிக்கும்
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக அளித்த தீர்ப்பில், அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் ராமர் கோயிலை நிர்மாணிப்பதற்காக அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்று சனிக்கிழமை தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ஒருமனதாக அளித்த தீர்ப்பில், அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் ராமர் கோயிலை நிர்மாணிப்பதற்காக அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என்று சனிக்கிழமை தீர்ப்பளித்தனர்.
Advertisment
தீர்ப்பை வாசித்த இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அயோத்தியில் மாற்று இடத்தில் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று கூறினார்.
2010 இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் மூன்றில் ஒரு பங்கு நிலம் வழங்கப்பட்ட நிர்மோஹி அகாராவுக்கு நிர்வாக உரிமை உள்பட மற்ற உரிமைகள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. புதியதாக கட்டப்படும் கோயில் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் என்றும் கூறியது.
மசூதிக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கும், கோயில் அறக்கட்டளை அமைப்பதற்கும் மூன்று மாதங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுக்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ராம் லல்லா விரஜ்மான் தெய்வத்திற்கு சட்டரீதியாக ஒரு பாத்திரம் உண்டு என்பதை ஒப்புக் கொண்டாலும், ராமஜென்மபூமி (ராம் லல்லாவின் பிறப்பிடம்) சட்டப்பூர்வ தன்மையைக் கொண்டுள்ளது என்ற இந்துக்களின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
சர்ச்சைக்குரிய நிலத்தை முஸ்லிம்கள் ஒருபோதும் இழக்கவில்லை என்றாலும் அவர்களால் உடைமைகள் அவர்களுடையது என நிறுவ முடியவில்லை என்று நீதிமன்றம் விளக்கியது.
உச்ச நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வின் அறிக்கைகளை நம்பி, பாபரி மஸ்ஜித் ஒரு வெற்று நிலத்தில் கட்டப்படவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. கீழே உள்ள கட்டமைப்பு இஸ்லாம் அல்லாத ஒரு அடிப்படை கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்று கூறியது.