எடியூரப்பாவின் புதிய அரசுக்கு ஆயுள் எப்படி ?

B.S. Yediyurappa : என்னதான் காங்கிரஸ்-மஜத கூட்டணியை ஓரங்கட்டினாலும், சட்டசபையில் பெரும்பான்மையை தக்கவைப்பது அவருக்கு பெரிய சவாலாகவே இருக்கும் .

By: Updated: July 27, 2019, 06:10:52 PM

Johnson T A

காங்கிரஸ்-மதச்சர்பற்ற ஜனதா தள கூட்டணியை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடித்ததன் விளைவாக, கர்நாடக மாநில பிஜேபி தலைவரான பி.எஸ்.எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 26) கர்நாடக முதல்வராக பதவியேற்றார் .மே 2018-ல் கூட்டப்பட்ட 15-வது கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா-வை அரசமைக்க  ஆளுநர் அழைப்பது இது இரண்டாவது முறையாகும் .

முன்னதாக மே 2018-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் 105 தொகுதிகளில் வெற்றிபெற்று தனி பெரும் கட்சியாக வந்த பிஜேபியை ஆட்சியமைக்க ஆளுநரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார். 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைத்த இரண்டே நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது , அதே நேரத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைத்து , 116 என்ற பெரும்பான்மையை அடைந்தது .

தற்போது, நான்காவது முறையாக பதவியேற்ற எடியூரப்பாவிற்கு கடந்த முறை இரண்டே நாளில் ஆட்சி கவிழ்ந்ததை போன்றே நடக்க வாய்ப்புள்ளதாக  உள்ளது . என்னதான் காங்கிரஸ்-மஜத கூட்டணியை ஓரங்கட்டினாலும், சட்டபேரைவயில் பெரும்பான்மையை தக்கவைப்பது அவருக்கு பெரிய சவாலாகவே இருக்கும் .

12 காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் 3 மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத ஒரே காரணத்தினால் தான் எடியூரப்பாவால் பதவிக்கு வரமுடிந்தது . இந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றால் எடியூரப்பா அரசு குறைந்தபட்சம் ஆறு மாதமாவது  தாக்குப்பிடிக்கும் .

அதற்கு மாறாக,கடந்த வியாழனன்று ரமேஷ் ஜார்கிஹோளி , மகேஷ் குமட்டள்ளி மற்றும் ஷங்கர் போன்றோரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார் போல் மீதமுள்ள 14 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யலாம் என்று எடியூரப்பாவிற்கு ஒரு யோசனையும் உண்டு .

17 பேரை தகுதிநீக்கம் செய்தாலும் அல்லது 15  பேரின் ராஜினாமாவை ஏற்றாலும் எடியூரப்பா ஆட்சிக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை .இரண்டு செயல்முறைகளின் விளைவாய் காங்கிரஸ்-மஜத கூட்டணியின் எண்ணிக்கை 99 அல்லது  101 ஆக வலுவிழக்கும் . பி.ஜே.பிக்கு ஒரு சுயேட்சையின் ஆதரவைக் கூட்டினால் 106 ஆக அதிகரிக்கும்.

கர்நாடக சட்டசபையின் சாதாரண வலிமை 224 உறுப்பினர்கள்.மே,2018-ல் நடந்த  15 வது சட்டமன்றத் தேர்தல் முடிவில்  – பாஜக 105, காங்கிரஸ் 79, மஜத 37, பகுஜன் சமாஜ் கட்சி 1 மற்றும் இரண்டு சுயேட்சைகள் கொண்டவைகளாக இருந்தது .

ஆனால் இன்று மொத்தம் 206 எண்ணிக்கையை கொண்ட முழுமையடையாத சபையாக உள்ளன . இந்த சபையில் 104-தான் பெரும்பான்மை விகுதிகளாக உள்ளன .106 உறுப்பினர்கள் கொண்ட பிஜேபிக்கு  இது எளிய இலக்கு என்று கருதப்பட்டாலும் அடுத்த ஆறு மாதங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் வரும் வரைதான் எடியூரப்பாவால் அதிகாரத்தை எந்த தங்கு தடையுமின்றி அனுபவிக்க முடியும். பின்,மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:B s yediyurappa new government is stable or not

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X