Advertisment

உபா சட்டத்தின் பிரிவு 43D(5): ஜாமீன் மறுக்கப்படுவது ஏன்?

1967-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உபா சட்டம் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தால் பலப்படுத்தப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UAPA Act

ஸ்டேன் ஸ்வாமி தான் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 43டி(5) ஐ எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார். UAPA சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவது சாத்தியமற்றது. என்ஐஏ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாகூர் அஹ்மத் ஷா வட்டாலி, வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிணை வழங்கும் அணுகுமுறையை உச்சநீதிமன்றம் ’பொருத்தமற்றதாக’ பார்த்தது. விசாரணையால் வழங்கப்பட்ட பொருளை முழுவதுமாக நீதிமன்றம் பார்ப்பதைவிட, வழக்கில் முகாந்திரம் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டது. எனினும் தீர்ப்புகளின் தொடர்ச்சியாக, நீதிமன்றங்கள் விரைவான விசாரணைக்கான உரிமையை வலியுறுத்துகின்றன. உபா சட்டத்தின் கீழ் ஒரு நபரை கைது செய்வதற்கான தடையை அதிகரிக்கின்றன.

Advertisment

சட்டம் என்ன சொல்கிறது?

1967-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உபா சட்டம் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தால் பலப்படுத்தப்பட்டது. பிறகு பாஜக அரசு உபா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. வழக்கு நாட்குறிப்பு அல்லது குற்றப்பத்திரிகை மூலமாகக் குற்றம்சாட்ட முகாந்திரம் உள்ளது என நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் காட்ட முடிந்தால் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிணையில் விடுவிக்கக் கூடாது. பிணை விடுதலைப் பற்றிப் பரீசிலிக்கப் படுவதற்கே கூட, மேற்கண்ட நிபந்தனையைக் குற்றம் சாட்டியவர் வெளிப்படுத்த முடியவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். நீதிமன்றங்கள் சான்றுகள் அல்லது சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்யக்கூடாது, ஆனால் அரசு முன்வைத்த “வழக்கின் முழுமையை” கவனிக்க வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டில் முகாந்திரம் குறுகியதாக உச்சநீதிமன்றம் வரையறுத்தது.

உபாவின் பிரிவு 43 டி (5), உபா(பயங்கரவாதம் மற்றும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தது)வின் அத்தியாயங்கள் IV மற்றும் VI இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, வழக்கு நாட்குறிப்பு மற்றும் காவல்துறை அறிக்கையை ஆராய்ந்த பின்னர், ‘அத்தகைய நபருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்மையானது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று கருதும்பட்சத்தில்’ பிணையில் நீதிமன்றம் விடுவிக்காது.

நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியபோது

2019ஆம் ஆண்டு போடப்பட்ட ஒரு வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் 2019ஆம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்டவரை பிணை விடுதலை செய்ததற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீட்டை செய்திருந்தது. மத்திய அரசுக்கும், கே.ஏ.நஜீப் என்பவருக்கும் இடையிலான இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, உபாவின் கீழ் ஜாமீன் வழங்குவதை உறுதி செய்தது.

தீர்ப்பில், சிறப்பு சட்டங்களின் கீழ் பிணை வழங்குவது வேறுபட்டது என்றும், சந்தேகப்படும் நபர் அந்த நோக்கத்தில் குற்றம் செய்துள்ளார் என நம்பும்போது பிணையை மறுக்க கடமைப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளனர். நீடித்த சிறைவாசம் பதிலளிப்பவரின் விரைவான விசாரணை மற்றும் நீதிக்காக அணுகுவதை மீறுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரது நீண்ட கால சிறைவாசத்தையும் விரைவில் விசாரணை முடிவடைவதற்கான சாத்தியம் இல்லாத நிலையையும் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை விடுதலை அளித்துள்ளது.

பிப்ரவரியில், எல்கர் பரிஷத் வழக்கில் சுவாமியுடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்ட தெலுங்கு கவிஞர் வரவர ராவிற்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அந்த உத்தரவில் மனுதாரருக்கு 82 வயதாவதால் அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் அவர் காவலில் இருந்தால் அவருக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் 6 மாதங்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவிட்டது. இதே வழக்கில் கடந்த ஆண்டு கைதான 84 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி பார்கின்சன் நோயால் அவதிப்பட்டிருந்தார். மேலும் கொரேனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது உயிரிழந்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு கிழக்கு பெங்களூரு கலவரத்திற்காக UAPA கீழ் குற்றம் சாட்டப்பட்ட 115 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜூன் 17 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. என்ஐஏ நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கேட்காமல் விசாரணைக்கு நேரம் நீட்டித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டத்தின் கீழ் நியாயமான முறையில் நடத்தப்படுவதற்கான அடிப்படை உரிமை ஜாமீன் வழங்குவதற்கான காரணமாக மீறப்பட்டதாக நீதிமன்றம் மேற்கோளிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு

டெல்லி கலவரம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களான நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா மற்றும் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மூவருக்கும் ஜுன் 15ஆம் தேதி ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், "அரசியலமைப்பு அளித்துள்ள போராட்ட உரிமைக்கும், தீவிரவாத செயல்பாட்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது. கருத்து வேறுபாட்டை நசுக்குவதற்கான அரசின் கவலையில், அதன் மனதில் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள போராட்ட உரிமைக்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையிலான கோடு மங்கிவருவதாகத் தெரிகிறது. இந்த மனநிலை தொடர்ந்து நீடித்தால், அது ஜனநாயகத்திற்கு சோகமான நாளாக மாறிவிடும்" எனவும் தெரிவித்திருந்தது.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்த நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டம் இதுவாகும் .எனவே டெல்லி உயர் நீதிமன்றம் கூறிய இந்தக் கருத்துக்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் எந்த ஒரு மனுதாரரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் மூன்று பேரும் ஜாமீனில் இருக்க அனுமதித்தது.

2018-ம் ஆண்டில், என்ஐஏ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாகூர் அஹ்மத் ஷா வட்டாலி, அவருக்கு எதிரான மேலோட்டமான ஆதாரங்களால் பிணை பெற முயன்ற வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி எஸ். முரளிதர் தலைமையிலான டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், விசாரணை நீதிமன்றங்கள் "விசாரணை நிறுவனத்தின் தபால் நிலையமாக" செயல்படக்கூடாது, ஆனால் "பொருளை ஆராய வேண்டும்". வட்டாலி, மற்றவர்களுடன் சதித்திட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத நிதியுதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோது, ​​விசாரணை அமைப்பின் பொருள் கவனமாக ஆராயப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2019ல் நிராகரித்தது. ஏஜென்சியின் வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய நீதிமன்றங்களுக்கு இது தடை விதித்தது, வழக்கு விசாரணையின் போது சாட்சியங்களில் அனுமதிக்கப்படாவிட்டாலும், வழக்கு ஆவணங்களை நம்புவதன் மூலம் ஜாமீன் மறுக்கப்படலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uapa Stan Swamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment