அரசின் வங்கி டெபாசிட் காப்பீட்டுத் திட்டம் எப்படி செயல்படுகிறது? நிதியை பெற விதிகள் என்ன?

வங்கிகள் ரிசர்வ் வங்கி விதித்த தடையின் கீழ் வரும் பட்சத்தில், அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் தங்களின் காப்பீடு செய்யப்பட்ட தொகையை பெற முடியும் என்பதை உறுதி செய்ய இந்த சட்டத்தில் ஆகஸ்ட் மாதம் திருத்தம் கொண்டு வந்தது இந்திய அரசு.

 Aanchal MagazineKarunjit Singh 

Bank deposit insurance programme : தங்கள் வங்கிகள் சந்தித்து வரும் நிதி சுமை காரணமாக தங்களின் சேமிப்பை எடுக்க முடியாமல் போன 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,300 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் தங்களின் வங்கிகளில் சிக்கிக் கொண்டுள்ள பணத்தை 3 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற உள்ளனர்.

ரூ. 76 லட்சம் கோடி மதிப்பிலான டெபாசிட்கள் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) சட்டத்தின் கீழ் 98 சதவீத வங்கி கணக்குகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

வங்கிகள் ரிசர்வ் வங்கி விதித்த தடையின் கீழ் வரும் பட்சத்தில், அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் தங்களின் காப்பீடு செய்யப்பட்ட தொகையை பெற முடியும் என்பதை உறுதி செய்ய இந்த சட்டத்தில் ஆகஸ்ட் மாதம் திருத்தம் கொண்டு வந்தது இந்திய அரசு.

டெபாசிட் காப்பீடு குறித்து பிரதமர் என்ன கூறினார்?

எந்தவொரு நாடும் பிரச்சனைகளை சரியான நேரத்தில் தீர்த்து வைப்பதன் மூலம் மட்டுமே பிரச்சனைகளை மேலும் மோசமடையாமல் காப்பாற்ற முடியும் என்றார் பிரதமர். முன்னதாக, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ரூ.50,000 மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பிறகு அது ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினரின் நிலையை புரிந்து கொண்டு தற்போது இந்த தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்துகிறோம் என்று மோடி குறிப்பிட்டார்.

நாட்டிற்கும், வங்கித் துறைக்கும், கோடிக்கணக்கான வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இன்று மிக முக்கியமான நாள் என்று நிதி நெருக்கடியை சந்தித்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பணத்திற்கான காப்பீட்டு காசோலையை வழங்கும் போது குறிப்பிட்டார்.

ஒரு வங்கி பலவீனமாக இருந்தால் அல்லது திவாலாகும் நிலையில் இருந்தால், வாடிக்கையாளர்கள் 90 நாட்களில் ரூ. 5 லட்சம் வரை தங்களின் பணத்தைப் பெறுவார்கள் என்று மோடி கூறினார். இதற்கு முன்பு இப்படியான சூழலில் 8 முதல் 10 வருடங்கள் ஆனாலும் பணமே கிடைக்காத நிலை நிலவியது என்று கூறிய மோடி, இந்த காப்பீடு வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதோடு நாட்டின் வங்கி மற்றும் நிதி அமைப்பும் பலமடையும் என்று கூறினார்.

டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன?

பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி, யெஸ் வங்கி மற்றும் லக்ஷ்மி விலாஸ் வங்கி போன்ற வங்கிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தங்களின் நிதியை அணுகுவதில் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் மீது கவனம் திருப்பியது அரசு. அதன் பிறகு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை நிதியை, 90 நாட்களுக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

பொதுவாக இப்படி நிதி நெருக்கடியை சந்திக்கும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களின் நிதியை சுமார் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் பெறவே முடியும். ஆனால் தற்போது சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இனி வங்கிகளில் இருந்து நிதியைப் பெறும் வரை காத்திருக்காமல் 90 நாட்களில் தங்களுக்கான இன்ஸ்யூரன்ஸ் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஏற்கனவே தடையின் கீழ் உள்ள வங்கிகள் மற்றும் தடையின் கீழ் வரக்கூடிய வங்கிகளுக்கும் இது பொருந்தும்.

வங்கி தடை விதிக்கப்பட்ட முதல் 45 நாட்களுக்குள், டிஐசிஜிசி டெபாசிட் கணக்குகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிக்கும். அடுத்த 45 நாட்களில், அது தகவலை மதிப்பாய்வு செய்து, 90வது நாளுக்கு அருகில் டெபாசிட் செய்பவர்களுக்கு காப்பீட்டு தொகையை திருப்பி செலுத்தும்.

டெபாசிட் இன்ஸ்யூரன்ஸிற்கான முந்தைய விதிமுறைகள் என்ன?

முன்னதாக வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் கடன் தொகையை திரும்பப் பெற பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை ஏற்படும். கடந்த ஆண்டு ரூ. 1 லட்சத்தில் இருந்து காப்பீட்டுத் தொகை 5 லட்சமாக அறிவிக்கப்பட்டது. தற்கு முன்பு, DICGC 1993ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி அன்று டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் தொகையை ரூ. 1 லட்சமாகத் திருத்தியது. 1980 முதல் இந்த தொகை ரூ. 30 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரு வங்கி தோல்வியுற்றால், ஒரு டெபாசிட்டருக்கு ஒரு கணக்கிற்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) மூலம் ஒரு டெபாசிட்டருக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. 5 லட்சத்திற்கு மேல் தங்கள் கணக்கில் டெபாசிட் செய்தவர்களுக்கு தங்களின் வங்கிக் கணக்கை திரும்பப் பெற சட்டப்பூர்வமாக வழியில்லை.

பங்கு மற்றும் பத்திர முதலீட்டாளர்களைப் போலல்லாமல், வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள தங்களின் பணத்திற்கான மிக உயர்ந்த பாதுகாப்பை அனுபவிக்கும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் அதே நேரத்தில், வங்கிகள் சரிந்தால் அவர்களின் முதலீடு அபாயத்தில் சிக்கும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bank deposit insurance programme and norms to access funds

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express