Advertisment

வங்கி லாக்கர் ஒப்பந்தம்: ரிசர்வ் வங்கி காலக்கெடுவை ஏன் நீட்டித்தது?

அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க முடியவில்லை. அதை செயல்படுத்துவதில் சிரமும் ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Bank Locker Agreements Why did RBI extend the deadline

இந்திய ரிசர்வ் வங்கி லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் செயல்முறையை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திங்களன்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஏற்கனவே உள்ள லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் செயல்முறையை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்தது.

மேலும், லாக்கர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து பிப்ரவரி 28, 2023க்குள் வங்கிகளுக்கு அனுப்புமாறு இந்திய வங்கிகள் சங்கத்தை (ஐபிஏ) ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

வாடிக்கையாளர்கள் தங்களின் தற்போதைய ஒப்பந்தங்களை எப்போது புதுப்பிக்க முடியும்?

இந்திய ரிசர்வ் வங்கி தற்போதுள்ள வங்கி லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை படிப்படியாக டிசம்பர் 31, 2023 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே உள்ள அனைத்து லாக்கர் வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 30, 2023க்குள் புதுப்பித்தல் தேவை குறித்து வங்கிகள் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், வங்கிகள் தங்களது தற்போதைய லாக்கர் வாடிக்கையாளர்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் ஜூன் 30ஆம் தேதிக்குள் ஒப்பந்தங்களைப் புதுப்பித்துள்ளதையும், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 75 சதவீதம் பேர் ஒப்பந்தங்களைப் புதுப்பித்திருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எப்படி உதவும்?

முத்திரைத் தாள்களை ஏற்பாடு செய்தல், ஃபிராங்கிங் செய்தல், ஒப்பந்தங்களை மின்னணு முறையில் செயல்படுத்துதல் மற்றும் இ-ஸ்டாம்பிங் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் புதிய/துணை முத்திரையிடப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் , இந்த ஒப்பந்தத்தின் நகலை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கும்.

ரிசர்வ் வங்கி ஏன் காலக்கெடுவை நீட்டித்தது?

ஆகஸ்ட் 2021 இல், ரிசர்வ் வங்கி, ஒரு சுற்றறிக்கையில், இந்த ஒப்பந்தங்களை ஜனவரி 1, 2023க்குள் புதுப்பிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டது.

இருப்பினும், சமீபத்திய மதிப்பாய்வில், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் லாக்கர் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க முடியாமல் சிரமப்படுவதை ரிசர்வ் வங்கி கண்டறிந்தது.

மேலும், பல சந்தர்ப்பங்களில், ஜனவரி 1, 2023க்கு முன் லாக்கர் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், ஒப்பந்தம் முழுமையாக இணங்குவதற்குத் திருத்தம் தேவை என்று ரிசர்வ் வங்கி கருதியதால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

லாக்கர் ஒப்பந்தம் அளிக்காவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும்?

ஜனவரி 1, 2023க்குள் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களைச் செயல்படுத்தாத நிலையில், சில வங்கிகள் சில வாடிக்கையாளர்களின் லாக்கர் செயல்பாடுகளை முடக்கியுள்ளன. அத்தகைய லாக்கர்களுக்கான கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Bank Locker
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment