37 ஆண்டுகளில் முதல் முறையாக, பிரிட்டிஷ் பாராளுமன்றம் கடந்த சனிக்கிழமையன்று ( அக்டோபர் 19) கூடியது. பிரதமர் போரிஸ் ஜான்சனின், யுனைடெட் கிங்டம் வரும் அக்டோபர் 31ம் தேதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் (பிரெக்ஸிட் ) வாக்களிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடினர்.
ஆனால், பிரெக்ஸிட் குறித்த முடிவிற்கு ஒத்துக்கொள்ள வில்லை பிரதமர் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்த எம்.பி.ஆலிவர் லெட்வின் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை முன் மொழிந்தார். இந்த திருத்த மசோதாவிற்கு அதிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்து வெற்றியடைய வைத்தனர் ( 322 ஆதரவு - 306 எதிர்ப்பு). லெட்வின் திருத்த மசோதாவால் ஜான்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
அடிப்படையில், இதன் பொருள் என்னவென்றால், ஃ பென் (ஐரோப்பிய ஒன்றியம் (திரும்பப் பெறுதல்) எண் 2 சட்டம் 2019 ) சட்டத்தின் கீழ் பிரெக்சிட் மீதான ஓட்டெடுப்பை நீட்டிக்க முறைப்படி ஐரோப்பிய ஒன்றியத்திடம், பிரிட்டிஷ் பிரதமர் ஜான்சன் அனுமதி வாங்க வேண்டும்.
ப்ரெக்ஸிட் மீதான ஒப்பந்தத்தை மேலும் நீட்டிப்பது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் ஜான்சன் உறுதியாகவே உள்ளார். அக்டோபர் 19ம் தேதி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஜான்சனுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த செயல்முறையை நாம் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதன்மூலம் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், இனி வரும் நாட்களில் அண்டை நாடுகளாக இருந்து, நமக்குள் இருக்கும் நீண்ட வரலாற்றின் அஸ்திவாரங்களில் மூலம் நமக்கான உறவை உருவாக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
பிரெக்சிட் வாக்கெடுப்பு, சட்டப்பிரிவு 50 போன்ற முக்கிய பின்னணி:
2016ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைத்திருப்பதா ? அல்லது விலகுவதா ? என்ற வாக்கெடுப்பு நடந்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 52 சதவீத மக்கள் விலகவேண்டும் என்று வாக்களித்தனர். வாக்கெடுப்பு நடந்த அடுத்த நாளே, டேவிட் கேமரூன் பதவியில் இருந்து விலகினார். இந்த வாக்கெடுப்பு சட்டப்பூர்வமாக அரசை பிணைக்கப்படவில்லை என்றாலும், பொது மக்களின் பிரதிபலிப்பாகவே பிரிட்டிஷ் அரசாங்கம் நினைத்தது.
டேவிட் கேமரூனுக்கு பின்வந்த தெரசா மே, லிஸ்பன் ஒப்பந்தத்தில் உள்ள சட்டபிரிவு 50 ஐ கையில் எடுத்தார். பிரிவு 50 ல் ஒரு உறுப்பு நாடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாய் இருந்தால், செய்யப்பட வேண்டிய சட்ட வழிமுறையைப் பற்றி பேசுகிறது. சட்டப்பிரிவு 50 தெரசா மே பயன்படுத்தியதில் இன்னொரு சூச்சமம் என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறோம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த நாட்டின் அரசாங்காத்தால் (பிரதமர்) மட்டுமே சொல்ல முடியும். தெரசா மே சட்டப்பிரிவு 50 பயன்படுத்திய போது 2019 மார்ச் 29 ல் பிரெக்ஸிட் முழுமையாக முடிந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் என்ன நடக்கும்?
ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரெக்ஸிட் ஒப்பந்தம் முடிவானதும், அது இங்கிலாந்தின் பாராளுமன்றத்தின் ஒப்புதலை வாங்கப்படவேண்டும். அந்த ஒப்புதலுக்காகத் தான் பிரெக்ஸிட் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது. பிரெக்ஸிட் ஒப்பந்தம் இதுவரை அந்நாட்டின் பாராளுமன்றத்தில் மூன்று முறை தோற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஐரிஷ் பேக்ஸ்டாப்.
இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இருக்கும் வடக்கு அயர்லாந்துக்கும் , அயர்லாந்து குடியரசுக்கும் (தனி நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகவும் உள்ளது) இடையில் இருக்கும் எல்லையை நிர்வகிப்பதில் தான் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது . தற்போது வரையில், வடக்கு அயர்லாந்துக்கும், அயர்லாந்து குடியரசுக்கும் இடையில் எந்த விதமான தடுப்புகளும் இல்லை. மக்கள் நினைத்த நேரத்தில் நாடுகளைத் தாண்டலாம்.
வடக்கு அயர்லாந்துக்கும், அயர்லாந்து குடியரசுக்கும் இருக்கம் எல்லையில் வர்த்தக ரீதியான கட்டுபாடுகள் தேவைப்படுகிறது என்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இங்கிலாந்தின் பிரதான எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்து வருகின்றது. ஆளும் கட்சியாக இருக்கும் கன்சர்வேடிவ் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சிக்கும் இடையில் கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த ஐரிஷ் பேக்ஸ்டாப் சிக்கலைத் தீர்க்க முடியாமல் தான் தெரசா மே தனது பிரதமர் பதவியைத் துறந்தார். அவருக்குப் பின்வந்த பிரதமர் ஜான்சனாளும் ஐரிஷ் பிரச்சனைகளுக்கு பலமுயற்சிகளை மேற்கொண்டார்.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் - வீடியோ
கடந்த வியாழக்கிழமை ( அக்டோபர் 17 ) நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, வடக்கு அயர்லாந்து தொடர்ந்து இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு இடையில் இருக்கும் வரத்தக உறவுகள் சில ஐரோப்பிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும் என்று தீர்மானித்து இருந்தனர்.
இந்த பிர்க்சிட் ஒப்பந்தம் தான் கடந்த சனிக்கிழமை நடந்த வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் தோல்வியைத் தழுவியது.
அடுத்து என்ன?
பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கான காலஅளவை நீட்டிப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கையில் தான் உள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒப்பந்தத்தை தாக்கல் செய்தால் தான் ஐரோப்பிய ஒன்றியம் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும். அடுத்த வாரமே , ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றக் கூட்டம் நடை பெற விருப்பதால், பிர்க்சிட் ஒப்பந்தம் வரும் அக்டோபர் 31க்குள் நிறைவேற்றப்படாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
பிர்க்சிட் ஒப்பந்தம் என்றுமே சாத்தியப்பட இல்லை என்றால் , அதன் எதிர் வினைகள் பல வகையாக இருக்கலாம். எந்த வித ஒப்பந்தம் இல்லாமலே பிரிட்டிஷ், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியே வந்துவிடும் ( நோ டீல் ) , அல்லது மீண்டும் பிர்க்சிட் வாக்கெடுப்பு நடத்தப்படும் , அல்லது சிறுபான்மை அரசை நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆட்சியைக் கலைத்து முன்கூட்டியே தேர்தல் வைக்கலாம். ஏனெனில், தேர்தலில் பெரும்பான்பை பெற்றால் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை கன்சர்வேட்டிவ் கட்சியால் எளிதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்.
&nbs
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.