Shamik Chakrabarty
2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஷர்ஷிப்பை, பேன்டசி கேம்ஸ் நிறுவனமான டிரீம் 11 நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்திய - சீனா நாடுகளுக்கிடையே எல்லையில் மோதல் வலுப்பெற்ற நிலையில், சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசு தடைவிதித்ததையடுத்து, ஐபிஎல் தொடரின் முக்கிய ஸ்பான்ஷரான விவோ நிறுவனம் விலகிக்கொண்டது. இதனையடுத்து, பிசிசிஐ, புதிய ஸ்பான்சரை நியமிக்க முடிவு செய்து, அது தற்போது டிரீம் 11 நிறுவனத்தை ஸ்பான்சராக அறிவித்துள்ளது. டிரீம் 11 நிறுவனத்திலும் சீனாவின் தொடர்பு உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
ஸ்பான்சர்ஷிப் அமெளண்ட் மற்றும் காலம் எவ்வளவு?
2020 ஐபிஎல் தொடரின் முக்கிய ஸ்பான்சராக டிரீம் 11 நியமிக்கப்பட்டிருப்பதை, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு ஐபிஎல் நிர்வாக குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார். டிரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடி கொடுத்து ஸ்பான்சர்ஷிப் உரிமையை கையகப்படுத்தியுள்ளது. 2020, டிசம்பர் 31 வரை, இந்த ஸ்பான்சர்ஷிப் உரிமை டிரீம் 11 நிறுவனத்திடம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. எதிர்பாராாத காரணங்களினால், தொடர் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது தள்ளிவைக்கப்பட நிகழ்ந்தாலோ என்பதை முன்கூட்டியே தீர்மானித்தே, இந்தாண்டு இறுதிவரைக்கும் இந்த ஸ்பான்சர்ஷிப் உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற எந்தெந்த நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துகொண்டன?
ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை விவோ நிறுவனம் விலக்கிக்கொண்டதையடுத்து, பிசிசிஐ, புதிய ஸ்பான்சர்களை தேட, ஸ்பான்சர் ஆக விரும்பும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. டிரீம் 11, பைஜூ, உன்அகாடமி உள்ளிட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன.
பிசிசிஐக்கு எவ்வளவு நிதிப்பற்றாக்குறை?
2018ம் ஆண்டில், ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் உரிமையை, விவோ நிறுவனம் 5 ஆண்டுகள் கால அளவிற்கு ரூ.2,199 கோடி கொடுத்து தன்வசப்படுத்தியது. இதன்மூலம், விவோ நிறுவனம், ஆண்டு ஒன்றுக்கு பிசிசிஐக்கு ரூ.439.80 கோடி செலுத்திவந்தது. ஆனால், இந்தாண்டிற்கான ஐபிஎல் ஸ்பான்சர் உரிமையை டிரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன்மூலம், பிசிசிஐ அமைப்பிற்கு இந்தாண்டு ரூ.217.80 கோடிகள் குறைவாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ என்ன சொல்கிறது?
தாங்கள் இதை பாசிட்டிவ் அப்ரோச் ஆகவே ஏற்றுக்கொள்வதாகவே பிசிசிஐ தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டின் பொருளாதார நிலையில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் ஸ்பான்சர்ஷிப் உரிமம் ரூ.200 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஸ்பான்சர்ஷிப் உரிமம், டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இந்த ஏலம் தங்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பதாக படேல் தெரிவித்துள்ளார்.
டிரீம் 11 நிறுவனத்திற்கு சீன தொடர்பு உள்ளதா?
ஆம், சீனாவின் முன்னணி நிதிச்சேவை நிறுவனமும், இணையதள சேவை நிறுவனமுமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை டிரீம் 11 நிறுவனம் தன்னிடத்தே கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவில் இந்நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களவிலான முதலீட்டில், முதல் கேமிங் ஸ்டார்ட்அப்பை துவங்கியது. தற்போது இந்தியாவில் அதன் செயல்பாடுகள் உள்ளதால், பிசிசிஐ, டிரீம் 11 நிறுவனத்தை இந்திய நிறுவனமாக கருதி ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் உரிமையை வழங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.