Advertisment

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா; மக்கள் தொகை எண்ணிக்கையின் சாதகங்களும் பாதகங்களும்

UNFPA அறிக்கையின் மக்கள்தொகை மதிப்பீடுகள் இந்தியாவின் மதிப்பீட்டை விட அதிகம். மக்கள்தொகை கணக்கெடுப்புப் பயிற்சிக்குப் பிறகுதான் ஒரு துல்லியமான விவரங்கள் வெளிவரும், கணக்கெடுப்பு நடத்துவதில் ஏற்படும் தாமதம் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Crowd-at-Mumbais-Dadar-station

மும்பை தாதர் ஸ்டேஷனில் கூட்டம். உலக மக்கள்தொகை நிலை அறிக்கை 2023 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள்தொகை 1,428 மில்லியனாக உள்ளது. (புகைப்படம் - எக்ஸ்பிரஸ் காப்பகம்)

Amitabh Sinha 

Advertisment

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றின் முதல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வழங்கியுள்ளது, அதாவது இந்தியாவின் மக்கள் தொகை இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதை உறுதி செய்துள்ளது. ஐ.நா மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) வருடாந்தர உலக மக்கள்தொகை அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியாவின் மக்கள்தொகை 1,428 மில்லியனாக உள்ளது, இது சீனாவின் 1,425 மில்லியனை விட சற்று அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு, இதே அறிக்கையானது 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவின் மக்கள்தொகை 1,448 மில்லியனாக இருக்கும் என மதிப்பிட்டது, இது இந்தியாவின் 1,406 மில்லியனை விட கணிசமாக அதிகம். இந்த ஆண்டு உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவானது, இது சீனாவின் மக்கள்தொகையில் ஒப்பீட்டளவில் கூர்மையான வீழ்ச்சியுடன் நிறைய தொடர்புடையது. சீனாவில் ஒரு வருடத்தில் 23 மில்லியன் (2.3 கோடி) அளவிற்கு மக்கள் தொகை குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்: தன் பாலின திருமணம்; நகர்ப்புற விஷயம் என்பதற்கு அரசிடம் எந்த தரவும் இல்லை; தலைமை நீதிபதி

நிச்சயமாக, இவை மறைமுக முறைகள் மற்றும் கருவுறுதல் மற்றும் இறப்பு விகிதங்கள் போன்ற பல்வேறு குறிகாட்டிகளைப் பயன்படுத்தி வந்த மதிப்பீடுகள் மட்டுமே. ஆனால் 1978 முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் UNFPA அறிக்கைகள் (UNFPA என்பது UN மக்கள்தொகை நிதியத்தின் அசல் பெயர் UN Fund for Population Activities) உலக மக்கள்தொகை போக்குகளின் நம்பகமான குறிகாட்டியாக கருதப்படுகிறது. எப்படியிருந்தாலும், மக்கள்தொகை அளவுகள் மாறும் மற்றும் எந்த நாளிலும் துல்லியமான எண்ணை மதிப்பிடுவது கடினம்.

இந்தியாவின் சொந்த மதிப்பீடுகளை விட வேகமான வளர்ச்சி

இந்தியாவின் மக்கள்தொகைக்கான மிகவும் நம்பகமான புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து வருகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது, மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்க வேண்டியிருந்தது. அதற்கான செயல்முறை இன்னும் தொடங்கப்படவில்லை.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 1,210 மில்லியனாக இருந்தது (121.08 கோடி, சரியாகச் சொன்னால் 1,210,854,977). ஜூலை 2020 இல், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் 2012-2036 ஆண்டுகளுக்கான மக்கள்தொகை கணிப்புகளை வெளியிட்டது, இவையே இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகையின் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளாக உள்ளன.

publive-image

2011 மற்றும் 2035 க்கு இடையில் இந்தியாவின் மக்கள்தொகை அதிகரிப்பைக் காட்டும் வரைபடம்
publive-image

2023 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணின் இந்திய கருவுறுதல் விகிதம் 2 ஆகவும், பெரும்பான்மையான மக்கள் பணிபுரியும் வயது வரம்பில் இருப்பதாகவும் கிராஃபிக் காட்டுகிறது

இந்த கணிப்புகளின்படி, 2023 இல் இந்தியாவின் மக்கள்தொகை 1,388 மில்லியனாக (சுமார் 139 கோடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இது UNFPA இன் உலக மக்கள்தொகை அறிக்கை மற்றும் பல மதிப்பீடுகள் பரிந்துரைப்பதை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. உண்மையில், இந்த கணிப்புகளின்படி, 2026 இல் கூட இந்தியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டின் நடுப்பகுதியில் UNFPA மதிப்பிட்டதை விட குறைவாக இருக்கும். ஆயுட்காலம் அதிகரிப்பு மற்றும் இறப்பு விகிதங்களில் சரிவு ஆகிய இந்த இரண்டு நேர்மறையான குறிகாட்டிகள், குறுகிய காலத்தில் மக்கள்தொகையில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சிக்கு சில முக்கிய காரணங்களாக இருக்கலாம்.

இந்தியாவின் மக்கள்தொகை தற்போதைய வேகத்தில், அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவில் வளர்ச்சியடைந்தால், மக்கள்தொகை அடுத்த 75 ஆண்டுகளில் தற்போதைய மதிப்பை விட இரட்டிப்பாகும் என்று UNFPA அறிக்கை கூறுகிறது. உலக மக்கள்தொகையிலும் இதே நிலையே காணப்படும், தற்போது உலக மக்கள்தொகை 8 பில்லியனுக்கு சற்று அதிகமாக உள்ளது. நிச்சயமாக, இந்தியா மற்றும் உலக மக்கள் தொகை இரண்டும் அதற்கு முன்னதாகவே ஸ்திரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 பயிற்சியை மேற்கொள்வதில் கொரோனா காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு தடைபட்டுள்ளது. தற்போது எந்தவொரு செயலையும் மேற்கொள்வதற்கு தொற்றுநோய் ஒரு தடையாக இல்லை, இயல்புநிலை மீட்டெடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியுள்ள நிலையில், கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. 1870களில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, இதுபோல் இவ்வளவு காலமாக தடைபட்டதில்லை.

2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான திட்டங்களை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டபோது, ​​மக்கள்தொகை கணக்கெடுப்பை சரியான நேரத்தில் நடத்த விரும்புவதாகவும், ஆனால் சூழ்நிலைகளால் அதைத் தள்ளிப்போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

“2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் மார்ச் 28, 2019 அன்று இந்திய அரசிதழில் (தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பு) அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குடியுரிமை விதிகளின் கீழ் மக்கள்தொகைப் பதிவேட்டைத் தயாரித்து, முதல் கட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அதாவது வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு எடுக்க ஒரு அறிவிப்பு இந்திய அரசிதழில் 31 ஜூலை, 2019 அன்று வெளியிடப்பட்டது. இருப்பினும், கோவிட் 19 தொற்றுநோய் அதிகரித்ததால், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் அது தொடர்பான கள நடவடிக்கைகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன, ”என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்தார்.

இது குறித்து மேலும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம், மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் படியான நிர்வாக எல்லைகளை முடக்குவதற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்கு தள்ளியிருந்தது. அதாவது ஜூன் இறுதி வரையாவது பணிகள் தொடங்க வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வேகமாக நடைபெற வாய்ப்பில்லை. பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை முடிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும். பல தரவுத்தொகுப்புகள் பயிற்சி முடிந்த பிறகு வெளிவர பல ஆண்டுகள் ஆகும்.

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை முடிப்பதில் தாமதம் பல்வேறு துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம், மேலும் இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளையும் பாதிக்கலாம். மக்கள்தொகை கணக்கெடுப்புப் பயிற்சியானது திட்டமிடல் மற்றும் கொள்கை அமலாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான குறிகாட்டிகளுக்கான அடிப்படை உள்ளீட்டுத் தரவை உருவாக்குகிறது. இந்த குறிகாட்டிகள் உலகளாவிய பங்குதாரர்களின் முதலீடு மற்றும் வர்த்தக முடிவுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பின் உறுதியான எண்களின் அடிப்படையில் நம்பகமான குறிகாட்டிகள் இல்லாத நிலையில், இந்த முடிவுகளின் தரம் பாதிக்கப்படலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment