பெல்காம் எல்லை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் : மகாராஷ்டிரா – கர்நாடகா இடையே பதட்டம்

Belgaum tension between Karnataka – Maharashtra : மகாராஷ்டிரா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் பெல்காம் எல்லை பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, இருமாநில உறவில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

belgaum, karnataka maharashtra belgum tension, uddhav thackeray, b s yediyurappa, belgaum explained, express explained, indian express
belgaum, karnataka maharashtra belgum tension, uddhav thackeray, b s yediyurappa, belgaum explained, express explained, indian express, கர்நாடகா, மகாராஷ்டிரா, பெல்காம் எல்லைப்பிரச்சனை, எடியூரப்பா, உத்தவ் தாக்ரே, பஸ் நிறுத்தம், பரபரப்பு, மகாஜன் கமிஷன்

மகாராஷ்டிரா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் பெல்காம் எல்லை பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, இருமாநில உறவில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

கடந்த டிசம்பர் 29ம் தேதி, கோல்ஹாபூரில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் உருவப்பொம்மைகளையும், பெல்காமில் கன்னட அமைப்பினர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவின் உருவப்பொம்மைகளை எரித்ததை தொடர்ந்து அங்கு பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. இதனையடுத்து கோல்ஹாபூர் – பெல்காம் இடையே இயக்கப்பட்டு வந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே நீண்ட நெடுங்காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பெல்காம் எல்லைப்பிரச்னை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

பெல்காம் எல்லை பிரச்னை – கடந்துவந்த பாதை

பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில், பாம்பே பிரசிடென்சி பகுதியாக இருந்தபோது, தற்போது கர்நாடகாவில் உள்ள பிஜாபூர், பெல்காம், தர்வார் மற்றும் உத்தர கன்னடா பகுதிகள் ஒரே மாகாணத்தின் கீழ் இருந்தன.

1948ம் ஆண்டில், பெல்காம் நகராட்சியில் மராத்தி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தனால், அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பெல்காம் மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

1956ம் ஆண்டில் மாநில மறுசீரைமப்பு சட்டத்தின் கீழ், மொழிவாரி மற்றும் நிர்வாக வசதிகளுக்காக பிரிக்கப்பட்டபோது, பெல்காம் மைசூரு ஸ்டேட்டில் ( 1973ல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் பெற்றது) இணைக்கப்பட்டது.

பெல்காம் பகுதியை மீண்டும் மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் வலியுறுத்தி 1957ம் ஆண்டு மகாராஷ்டிர அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.இந்த விவகாரம் தொடர்பாக பெரும்போராட்டங்கள் நடந்த நிலையில், இந்த முன்னாள் நீதிபதி மேஹர் சந்த் மகாஜன் தலைமையில், 1966ம் ஆண்டு மகாஜன் கமிஷன் அமைக்கப்பட்டது.

மகாஜன் கமிஷன், 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதன்படி, மகாராஷ்டிரா – கர்நாடகா எல்லைப்பகுதியில் உள்ள 264 கிராமங்கள் மகாராஷ்டிராவுக்கும், பெல்காம் உள்ளிட்ட 247 கிராமங்கள் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்டவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகாஜன் கமிஷனின் இந்த அறிக்கையை ஏற்காத மகாராஷ்டிரா அரசு, இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

தற்போதைய நிலை

கர்நாடகாவில் உள்ள பெல்காம் உள்ளிட்ட எல்லைப்பகுதியில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிரா அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. மகாராஷ்டிராவில் அமையும் அடுத்தடுத்த அரசாங்கங்களும் இதேநிலையை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. மகாராஷ்டிராவின் இந்த நடவடிக்கைக்கு, கர்நாடகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மகாராஷ்டிராவில், சிவசேனா தலைமையில் அமைந்துள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சி, இந்த விவகாரத்தில் தீர்வுகாணும் பொருட்டு, முதல்வர் உத்தவ் தாக்ரே, அமைச்சர்கள் ஷகன் பூஜ்பால் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்த எல்லைப்பிரச்னை குறித்த நீண்ட, விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ள இந்த குழு, விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Belgaum issue maharashtra karnataka belgaum tension flares again

Next Story
Explained: நிலையான அபிவிருத்தி இலக்கு அட்டவணை (SDG Index) என்றால் என்ன?Kerala’s Andhra Pradesh,Tamil Nadu and Telangana tops in NITI latest SDG India Index 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express