united arab emirates, dubai, saudi arabia, yemen, immigration, ஐக்கிய அரபு நாடுகள், துபாய், சவுதி அரேபியா, யேமன், குடியேற்றத்துறை
ஓம் மராத்தே
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் பெண்கள் இப்போது தங்கள் கணவர், தந்தை மற்றும் பிள்ளைகளுக்கு வேலை செய்வதற்கான அனுமதியை பெற முடியும் என்று துபாயிலிருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இது வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் மக்களை வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு நகர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அந்த செய்தியின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனிதவள மற்றும் எமிரேஷன் அமைச்சகம், சனிக்கிழமை வெளியிட்ட புதிய விதிகளின் கீழ் தகுதியுள்ள ஆண்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் நிறுவனங்களுக்கு குடும்பத்துக்கு வழங்கப்படும் பணி அனுமதியை வழங்கத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
விதிகளில் மாற்றம்
அபுதாபியிலிருந்து வெளியாகும் தி நேஷனல் செய்தித்தாள் குறிப்பிடுகையில், பணி அனுமதி (தொழிலாளர் அட்டை என்றும் கூறப்படுகிறது) ஒரு முழு வேலைவாய்ப்பு விசாவுடன் ஒப்பிடும்போது குறைந்த விலை மாற்றாகும். ஏனென்றால், பிந்தையதில் மருத்துவக் காப்பீடு இணைக்கப்பட வேண்டும்.
இதனால், சம்பளத்துக்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் கிடைப்பதால் புதிய விதிகள் முதலாளிகளுக்கு பயனளிக்கும். ஏனெனில் அவர்கள் முழு விசாவின் செலவை ஏற்காமல் உள்ளூர் சந்தையிலிருந்து பணிக்கு ஆட்களை சேர்க்க முடியும். இந்த நடவடிக்கை வெளிநாட்டினர் குடும்பங்களின் வீட்டு வருமானத்தை அதிகரிக்கும்.இந்த நகர்வுக்கு முன்பு, பெண்கள் மட்டுமே குடும்பத்துக்கு வழங்கப்படும் பணி அனுமதிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் நிதியுதவி செய்ய முடியும்?
முதன்முதலில் ஏப்ரல் மாதத்தில் விதிகள் தளர்த்தப்பட்டதிலிருந்து, குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட வருமானம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பணி அனுமதிக்காக குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவி செய்ய அனுமதிக்கப்படுகிறது. தி நேஷனல் செய்தித்தாள் குறிப்பிடுகிறபடி, ஒரு தொழிலாளிக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதத்திற்கு 4000 அரபு எமிரேட்ஸ் திராமும் (சுமார் ரூ.75,000) அல்லது 3000 அரபு எமிரேட்ஸ் திராமும் வழங்க பரிந்துரைக்க விரும்புகிறது. இதனால், நிர்வாக விதிகள் கைவிடப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு நிதியுதவி செய்வதற்கான குறைந்தபட்ச சம்பளம் இரண்டு படுக்கைஅறை தங்குமிடம், செலவுகள் உள்பட மாதத்திற்கு 20,000 அரபு எமிரேட்ஸ் திராம் (ரூ.3.56 லட்சம்) அல்லது 19,000 திராம் தேவை உள்ளது. பெற்றோர்களும் அவசியம் நிதியுதவி செய்யப்பட வேண்டும். மேலும், அவர்கள் தொழிலாளி அவன்/அவள் தங்களின் ஒரே நிதி வழங்குனர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
ஒற்றைத் தாய்மார்கள் குறைந்தபட்சமாக மாதம் 10,000 அரபு எமிரேட்ஸ் திராம் சம்பாதித்தால் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிதியுதவி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், தி நேஷனல் செய்தி குறிப்பிடுகையில், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்களுக்கு செல்லுபடியாகும் வசிப்பிட விசா, பாஸ்போர்ட், உடல்நல சான்றிதழ், வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் நகல், நிதியுதவி செய்யும் நிறுவனத்தின் செல்லுபடியாகும் வர்த்தக உரிமம், கல்வி சான்றிதழ்கள் மற்றும் தொழில் தகுதிக்கான பிற சான்றுகள் தேவைப்படும் என்று கூறியுள்ளது.
யார் தகுதியானவர்கள்
சட்டப்பூர்வமாக வசிக்கும் அனைத்து ஆண்களும் (ஏற்கெனவே நிதியுதவி பெற்ற உறுப்பினர்கள்) அவர்களுடைய தொழிலைப் பொருட்படுத்தாமல் தகுதியுடையவர்கள். ஜூலை 28 முதல் தகுதிவாய்ந்த நபர்களின் பட்டியலில், தங்கள் மனைவியால் நிதியுதவி செய்யப்பட்ட கணவர், பிள்ளைகளால் நிதியுதவி செய்யப்படும் தந்தையர், மற்றும் பதின்பருவ மாணவர்கள் உள்பட வருகின்றனர். இவர்கள் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பணி அனுமதி பெற முடியும். மேலும், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட பயிற்சி மாணவர்களுக்கும் பணி அனுமதி பெற முடியும்.
இந்த பணி அனுமதி, தாஸ்-ஹீல், தத்பீர், தவாஃபுக் மற்றும் தவ்ஜீஹ் ஆகிய எமிரேட்ஸின் மனிதவள அமைச்சகத்தின் அனைத்து கிளைகளின் மையங்களிலும் பெறலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியர்கள்
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியர்களின் மக்கள்தொகை இந்தியாவுக்கு வெளியே ஐக்கிய அரபு எமிரேட்ஸில்தான் மிகப்பெரிய அளவில் 33 லட்சம் மக்களுக்கு மேல் செறிவாக காணப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறது. இந்த குழுவில் தொழில்முறை தகுதி வாய்ந்த பணியாளர்கள் சுமார் 15% பேர் உள்ளனர், அதைத் தொடர்ந்து, வெள்ளை காலர் தொழில் வல்லுநர்கள் அல்லாத பணியாளர்கள் (எழுத்தர்கள், கடைநிலை உதவியாளர்கள், விற்பனையாளர் ஆண்கள், கணக்காளர்கள் போன்றவர்கள்) 20% உள்ளனர். மீதம் 65% பேர் ப்ளூ காலர் தொழிலாளர்களாக உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சமீபத்திய நகர்வு
இந்த மத்திய கிழக்கு நாடு சமீப காலங்களில் அதன் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு உதவுவதற்காக கொள்கைகளை உருவாக்கும் வேகத்தை அதிகரித்துள்ளது. முன்னதாக ஜூலை மாத தொடக்கத்தில், 145 சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு பணி அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 50% முதல் 94% வரை குறைத்தது. ஒரு திறமையான அல்லது வரையறுக்கப்பட்ட திறமையான தொழிலாளிக்கு இரண்டு ஆண்டு பணி அனுமதி பத்திரத்திற்கான கட்டணம் அனைத்து வகை நிறுவனங்களுக்கும் 300 அரபு எமிரேட் திராமாக (ரூ.5,600) குறைக்கப்பட்டது. இதற்கு முன்பு, நிறுவனங்களின் வகை மற்றும் பணியாளர்களின் திறன் நிலைகளைப் பொருத்து 300 அரபு எமிரேட் திராம் முதல் 5000 திராம் வரை (ரூ.5,600 – ரூ.94,000) கட்டணமாக இருந்தது.
இது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச ஆய்வுப் பள்ளியின் மேற்காசிய நிபுனர் பேராசிரியர் ஏ.கே.பாஷா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிக வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஈர்ப்பதற்கான இந்த முயற்சிகள், இப்பகுதியில் ஐக்கிய அரபு அமீரகம் எதிர்கொள்ளும் தலைகீழ் மாற்றங்களில் ஒரு பகுதியாக உள்ளது. சவூதி அரேபியாவுடன் இணைந்து யேமனில் செய்த அதனுடைய தீவிர பிரசாரம் விரும்பிய முடிவுகளை வழங்கவில்லை. கூடுதலாக, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக முக்கிய வர்த்தக கூட்டாளியான ஈரானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விலகி நிற்கிறது. இந்த நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீடுகளில் சரிவைக் கண்டது. அதன் தற்போதைய நகர்வுகள் 2008 ஆம் ஆண்டு அதன் பொருளாதாரத்தை பாதித்த மந்தநிலை மீண்டும் வருவதை தவிர்ப்பதற்கு அதன் போக்கை சரிசெய்வதாக உள்ளது” என்று கூறினார்.