/tamil-ie/media/media_files/uploads/2022/12/Rapido-Explain.jpg)
குற்றவியல் வழக்குகள் உள்ள ஒரு ஓட்டுநரை பணியமர்த்தியது குறித்து பெங்களூரு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வரும் நிலையில், ரேபிடோவின் செயல்பாடுகள், பைக் டாக்ஸி ஓட்டுநர்களை பணியமர்த்தும் செயல்முறை, அதில் கால்வதுறை கண்டறிந்த குறைபாடுகள் ஆகியவற்றைப் பார்ப்போம்.
பெங்களூருவில் நவம்பர் 25-ம் தேதி பைக் டாக்ஸி செயலி ஓட்டுநர் உட்பட 2 நபர்களால் கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் பாலிய வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த ரேபிடோ ஓட்டுநர் இந்த ஆண்டு தொடக்கத்தில் மிரட்டல், தாக்குதல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
குற்றவியல் வழக்குகளைக் கொண்ட ஒரு ஓட்டுநரை பணியமர்த்தியது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கும் பணியில் பெங்களூரு போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், ரேபிடோவின் செயல்பாடுகள், அதன் ஓட்டுநர்களை பணியமர்த்தும் செயல்முறை, அதில் காவல்துறையினர் கண்டறிந்த குறைபாடுகளைப் பற்றி பார்ப்போம்.
முதலில், இந்த சம்பவத்திற்கு ரேபிடோ எப்படி பதிலளித்தது?
ரேபிடோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், ஓட்டுநர் ரேபிடோ செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். “எங்கள் ரேபிடோ தளத்தில் பதிவுசெய்யப்பட்ட ஓட்டுநர்களில் ஒருவரின் இந்த நடவடிக்கையை ரேபிடோ கடுமையாக கண்டிக்கிறது. பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அந்த நபர் மீது காவல்துறையினர் வழகுப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான செயலால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆழ்ந்த மன்னிப்பு கோருகிறோம்.” என்று ரேபிடோ செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில், “இந்த விவகாரத்தில் நாங்கள் அனைத்து உதவிகளையும் காவல்துறையினருக்கு அளித்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய உதவியுள்ளோம். ரேபிடோ தனது முழு ஆதரவையும் காவல்துறைக்கு தொடர்ந்து அளிக்கும்… ரேபிடோ வாடிக்கையாளர் முதன்மையானவர்கள் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்” என்று அந்த கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் பீகாரைச் சேர்ந்தவர். அவர் பெங்களூருவில் தங்கியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், “ ரேபிடோவில் பைக் ஓட்டுநராக உள்ள நபரின் குற்றவியல் வழக்குகள் பின்னணியை நிறுவனத்தின் சரிபார்ப்பு செயல்முறை குறித்து கேள்விகளை எழுப்புகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் நீங்கள் 2019 முதல் ரேபிடோவில் பணியாற்றி வருகிறார். அவர், தண்ணீர் பிரச்னையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் ஒரு மாதத்திற்குள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்” என்று அந்த அதிகாரி கூறினார்.
பைக் ஓட்டுநர் தளத்தில் சேர்ப்பதில் சரியான நடைமுறையைப் பின்பற்ற ரேபிடோ தவறிவிட்டது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். “அந்த நபர் (ஓட்டுநர்) 2019 முதல் ரேபிடோவில் பணிபுரிந்து வருகிறார். இந்த ஆண்டு பெங்களூரு கிராமப்புற மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நிறுவனங்கள் ஒரு தடையில்லா சான்றிதழை பெறுவது அவசியம். ஆனால், ரேபிடோ அப்பட்டமாக இந்த விதிமுறையை புறக்கணித்துள்ளது. நாங்கள் விளக்கம் கேட்டு ரேபிடோவுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம்” என்று கூறினார்.
ஓட்டுநர்கள் ரேபிடோ தளத்தில் எப்படி உள்ளே நுழைகிறார்கள்?
நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் ரேபிடோ தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநர்களின் பதிவுடன் செயல்படுவதாக ரேபிடோ நிறுவனம் கூறுகிறது. ஆண்ட்ராய்டு பயன்பாடு மூலம் டிரைவர்கள் ரேபிடோவின் தளத்தில் பதிவு செய்து உள்ளே நுழையலாம். அதில் அவர்கள் பெயர், அவர்களின் முகத்தின் படம், அவர்களின் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் மற்றும் அவர்களின் பான் அட்டை போன்ற தனிப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய 3 ரேபிடோ ஓட்டுநர்களும் இந்த ஆவணங்களின் சரிபார்ப்புக்கு பொதுவாக 24-48 மணி நேரம் ஆகும் என்று கூறினார்கள்.
ரேபிடோ ஓட்டுநர்கள் குறித்து ஏதேனும் முழுமையான அவர்களின் பின்னணி பற்றி சோதனைகளை மேற்கொள்கிறதா என்றால் அதில் ரேபிடோ நிறுவனத்தின் வலைத்தளம் அமைதியாக இருக்கிறது. அவர்களின் பின்னணி சரிபார்ப்பு செயல்முறையைப் பற்றி ரேபிடோவிடம் கேள்வி எழுப்பி கேள்விகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஓட்டுநர் விவகாரத்தில் அத்தகைய சரிபார்ப்பு செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை.
இந்த தளத்தில் ஓட்டுநர்கள் உள்ளே நுழையும்போது, “மூன்றாம் தரப்பு வாகன ஓட்டுநர்கள் என்று பதிவு செய்கிறார்கள் மற்றும் சுயாதீன ஒப்பந்தக்காரர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்று ரேபிடோ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தெரிவித்துள்ளது. ஓலா மற்றும் உபெர் போன்ற தளங்களிலும் இதே மாதிரிதான். அதுமட்டுமில்லாமல், ஓட்டுநர்களை சுயாதீன ஒப்பந்ததாரர்களாக பணியமர்த்துகிறது, ஊழியர்களாக அல்ல, இதற்கு அர்த்தம், இந்த நிறுவனங்கள் அவர்களின் சமூக பாதுகாப்புக்கு பணம் செலுத்தக்கூடாது என்பதுதான்.
ரேபிடோ ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் செயல்களை எப்படி கையாள்கிறது?
அதன் விதிமுறைகளில், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களை ரேபிடோ சேவை விதிமுறைகளில், ரேபிடோ இரு தரப்பையும் இணைப்பதற்கான ஒரு தளம் என்றும், அவர்களின் நடத்தை மற்றும் செயல்களுக்கு ரேபிடோ பொறுப்பல்ல என்றும் கூறுகிறது. “நீங்கள் பயன்படுத்தக்கூடிய வாகனங்களின் ஓட்டுநர்கள், கேப்டன்கள் அல்லது வாகனத்தின் தரம் ஆகியவற்றின் நடத்தை, செயல்கள் அல்லது செயல்களுக்கு நிறுவனம் பொறுப்பல்ல. சேவைகளுக்காக ஒரு வாகனத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம் உங்களுக்கும் கேப்டனுக்கும் நிறுவனத்திற்கும் இடையில் முக்கியமானது” என்று பயணிகளுக்கான ரேபிடோ சேவை விதிகளில் கூறுகிறது.
ரேபிடோ முதலீட்டாளர்கள் யார்?
ரேபிடோ தற்போது 800 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் மதிப்பை கொண்டுள்ளது. ரேபிடோ கடைசியாக ஏப்ரல் மாதத்தில் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி மற்றும் ஷெல் வென்ச்சர்ஸ் போன்றவற்றிலிருந்து 180 மில்லியன் டாலர்களை திரட்டியது. கிரெட் நிறுவனத்தின் நிறுவனர் குனால் ஷா மற்றும் யமஹா ஆகியோர் தொடக்கத்தில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.