கோவிட் -19 தடுப்பூசியின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், குழந்தைகளில் கோவாக்சினை சோதிக்க இந்தியா அரசு பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
கோவாக்சின் என்றால் என்ன?
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பு மருந்துகளில் ஒன்று இந்த கோவாக்சின். இந்த கோவாக்சின் தடுப்பு மருந்தை ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தடுப்பூசி தயாரிப்பாளர் பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐ.சி.எம்.ஆர்) இணைந்து உருவாக்கியுள்ளது.
இது ஒரு 'செயலற்ற' தடுப்பூசி ஆகும். இது இறந்த SARS-COV-2 வைரஸைப் பயன்படுத்தி, மனிதர்களில் வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. கொரோனா வைரஸ் இன்றுவரை இந்தியாவில் 2.3 கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதித்து கிட்டத்தட்ட 2.6 லட்சம் நோயாளிகளைக் கொன்றுள்ளது என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை, கோவாக்சின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதன் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் திறன் குறித்து 12 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு சோதிக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசியின் புதிய மேம்பாடு என்ன?
நாட்டின் உயர்மட்ட மருந்து ஒழுங்குமுறை அமைப்பின் தலைவரான இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் கோவாக்சின் 2/3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த பாரத் பயோடெக்கிற்கு அனுமதி அளித்துள்ளது. அத்தகைய அனுமதியை வழங்க மே 12 அன்று ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரையைப் பின்பற்றுகிறது.
தடுப்பூசியின் செயல்பாடு எப்படி?
நாடு முழுவதும் பல்வேறு தளங்களில் 525 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் இந்த சோதனை நடத்தப்படும். இந்த தளங்களில் எய்ம்ஸ், டெல்லி மற்றும் எய்ம்ஸ், பாட்னா மற்றும் நாக்பூரில் உள்ள மெடிட்ரினா மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் பாதுகாப்பு, அது ஏற்படுத்தும் பாதகமான எதிர்விளைவுகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் தடுப்பூசியின் திறன் போன்ற அம்சங்களை இந்த சோதனை ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் 28 நாட்கள் இடைவெளியில் உள்தசைப் பாதை வழியாக செலுத்தப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.