Bharti Airtel hikes tariffs prepaid plans impact Tamil News : தொலைத்தொடர்புத் துறையில் குறைந்த கட்டணம் முடிவுக்கு வருவதைக் குறிக்கும் வகையில், கடந்த திங்களன்று தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்துவதாக பார்தி ஏர்டெல் அறிவித்தது. இந்த நடவடிக்கையை மற்ற இரண்டு தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் பின்பற்றலாம்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களில் கட்டணத்தை ஏன் உயர்த்த முடிவு செய்துள்ளது?
முகேஷ் அம்பானி ஆதரவுடன் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நுழைந்ததிலிருந்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் டேட்டா பயன்பாட்டு விகிதங்களை ஒருவருக்கொருவர் குறைத்து வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் போட்டி மிகவும் தீவிரமாக உள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடையை மூடிவிட்டன. வோடபோன் மற்றும் ஐடியா போன்றவை, ரிலையன்ஸ் ஜியோவோடு கைகோர்க்க முடிவு செய்தன.
இதையடுத்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களுக்கு ஒரு தளம் இருப்பதை உறுதி செய்வதற்காக ஏதேனும் ஒரு வடிவத்தில் அரசாங்கத்தின் தலையீட்டை நாடின. அரசாங்கம் எந்த வகையிலும் தலையிடாத நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களே 2019 டிசம்பரில் ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் கட்டணங்களைக் கூட்டாக உயர்த்த முடிவு செய்தன.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில், பார்தி ஏர்டெல் தற்போது நிலையில்லாமல் இருக்கும் ரூ.100-150-க்கு எதிராக, ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (ARPU) ரூ.300-க்கு மீண்டும் எடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி குரல் கொடுத்து வருகிறது. ஒரு அறிக்கையில், இந்த கட்டண உயர்வு ரூ.200 ARPU-க்கு திரும்புவதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும், இது "நெட்வொர்க்குகள் மற்றும் ஸ்பெக்ட்ரமில் தேவைப்படும் கணிசமான முதலீடுகளை செயல்படுத்தும்" என்று டெல்கோ கூறியது.
பார்தி ஏர்டெல் ஏன் தொழில்துறைக்குக் கட்டணத்தை உயர்த்துகிறது?
மூன்று தனியார் டெலிகாம் நிறுவனங்களில், இரண்டு, அதாவது Vi மற்றும் பார்தி ஏர்டெல், உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதிக சுமையை சுமந்துள்ளன. அதாவது, முறையே ரூ.58,250 கோடி மற்றும் ரூ.43,890, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) நிலுவைத் தொகையாக அவர்கள் செலுத்த வேண்டும் என்கிற தகவல்தான் அது. இரு நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் மற்றும் ஏஜிஆர் நிலுவைத் தொகைகள் மீதான நான்கு ஆண்டு தடையைத் தேர்வு செய்திருந்தாலும், தடைக்காலம் முடிந்ததும் பணம் செலுத்துவதற்கான நிதியை அவர்கள் கொண்டு வர வேண்டும்.
கடந்த திங்களன்று பார்தி ஏர்டெல் கட்டண உயர்வு பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், "இத்துறையின் லாபம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் தேவையான படி இது" என்றனர்.
"ஒரு பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரால் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு, இத்துறையின் லாபம் மற்றும் வருவாய் விவரத்தை சீர்படுத்துவதற்கு மிகவும் தேவையான படி. இது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5G மொபைல் சேவைகளை நடுத்தர காலத்திற்குள் வெளியிடுவதில் முதலீடு செய்ய உதவும்” என்று ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் ரேட்டிங்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல்லின் திங்கட்கிழமை அறிவிப்பு அதன் மொத்த பயனர் தளத்தில் 95 சதவீதத்தை பாதிக்கும் என்பதால், தொழில்துறையில் உள்ள மற்ற இரண்டு நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது என்று இந்தியா ரேட்டிங்ஸ் நம்புகிறது.
பார்தி ஏர்டெல் அறிவித்துள்ள கட்டண உயர்வு சமீப காலங்களில் காணப்பட்ட கூர்மையான மற்றும் மிகவும் பரந்த அடிப்படையிலான (பல்வேறு கட்டணத் திட்டங்களில் பரவியுள்ளது) ஒன்று. மேலும், இது பார்தி ஏர்டெல்லின் மொத்த சந்தாதாரர்களில் 95 சதவீதத்தை உள்ளடக்கிய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும்” என இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
கட்டண உயர்வு யாரை அதிகம் பாதிக்கும்?
பார்தி ஏர்டெல் நுழைவு நிலை பிரிவுகளில் கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதால், வரும் நாட்களில் நிறுவனத்தின் பயனர்களின் இந்த பிரிவில் ஒருங்கிணைக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நிறுவனம், இந்த ஆண்டு ஜூலை மாதம், கார்ப்பரேட் மற்றும் நுழைவு-நிலை ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு சாதாரண கட்டண உயர்வை அறிவித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.