கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட் படைப்புகள் மற்றும் இந்தியாவுடனான அவரது தொடர்பு ஆகியவற்றின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசாக வழங்கினார்.
கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட்டின் படைப்புகளின் முதல் பதிப்பை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தது அமெரிக்க இலக்கிய உலகில் கவிஞரின் அந்தஸ்தின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனக்கு பிடித்தமானவராக ராபர்ட் ஃபிராஸ்ட்டைக் கண்டறிந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் அமெரிக்க பயணத்தின் போது பெற்ற பல பரிசுகளில், ஹென்றி ஹோல்ட் அண்ட் கம்பெனியால் 1930 இல் வெளியிடப்பட்ட ராபர்ட் ஃபிராஸ்ட் கையொப்பமிட்ட அவருடைய கவிதைகளின் முதல் பதிப்பு உள்ளது.
ராபர்ட் ஃபிராஸ்ட் யார்?
நான்கு புலிட்சர் பரிசுகள் (1924, 1931, 1937, 1943 இல்) பெற்ற ஒரே எழுத்தாளர் ராபர்ட் ஃபிராஸ்ட், 20-ம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவர். சிறந்த அமெரிக்க வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கவிஞராக அங்கீகரிக்கப்பட்ட அவரது கவிதை, காதல் மற்றும் நவீனத்துவத்தின் கூறுகளை ஒருங்கிணைத்தது. 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையில், ராபர்ட் ஃபிராஸ்ட் இயற்கையைப் பற்றியும் மனித நிலையின் தனிமையைப் பற்றியும் எழுதினார். செப்டம்பர் 1994-ல் தி நியூ யார்க்கரில் ஒரு கட்டுரையில், நோபல் பரிசு பெற்ற ஜோசப் ப்ராட்ஸ்கி எழுதினார், “அவர் பொதுவாக கிராமப்புறங்கள், கிராமப்புற சூழல்களின் கவிஞராகக் கருதப்படுகிறார் - ஒரு நாட்டுப்புற, மேலோட்டமான, புத்திசாலித்தனமான பழைய ஜென்டில்மேன் விவசாயி, பொதுவாக நேர்மறையான மனநிலை கொண்டவர். சுருக்கமாக, ஆப்பிள் பை போன்ற அமெரிக்கர் போல… அவர் உண்மையில் ஒரு சிறந்த அமெரிக்க கவிஞர்…” என்று கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட்டை ப்ராட்ஸ்கி ஒரு சிந்தனைமிக்க ‘விர்ஜிலியன் கவிஞராக’ நிறுவினார். அவருடைய கவிதைகள் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் ராபர்ட் பிரவுனிங் ஆகியோரின் தாக்கங்களால் மென்மையாக்கப்பட்டன.
1874-ல் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த ராபர்ட் ஃப்ரோஸ்ட் தனது குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியை நியூ இங்கிலாந்தில் கழித்தார். அவர் டார்ட்மவுத் கல்லூரி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அவரது முதல் கவிதைப் புத்தகம், ‘ஒரு சிறுவனின் விருப்பம்’ (A Boy's Will) 1913-ல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அங்கே அவர் முந்தைய ஆண்டு தனது குடும்பத்துடன் சென்றார். அது அவருக்கு உடனடி விமர்சனப் பாராட்டுகளைப் பெற்றது. 1914 ஆம் ஆண்டில், மற்றொரு கவிதைத் தொகுதி, பாஸ்டனின் வடக்கு (North Of Boston) இங்கிலாந்தில் வெளிவந்தது. இது ஒரு இலக்கியக் குரலாக அவரது நிலையை உறுதிப்படுத்தியது. அப்போது ராபர்ட் ஃபிராஸ்ட்டுக்கு வயது 40.
1915-ம் ஆண்டில், முதல் உலகப் போரின் பின்னணியில், ராபர்ட் ஃபிராஸ்ட் அமெரிக்காவிற்குத் திரும்பினார். அங்கே அவர் நியூ ஹாம்ப்ஷயரில் ஒரு இல்லத்தை அமைத்து, பல்வேறு பல்கலைக்கழகங்களில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடர்ந்தார். ப்ராட்ஸ்கியுடன் இணைந்து ராபர்ட் ஃபிராஸ்ட்டுக்கு மரியாதை (1996) என்ற கட்டுரைகளில் பின்னர், நோபல் பரிசு பெற்ற சீமஸ் ஹீனி மற்றும் டெரெக் வால்காட் ஆகியோர் ராபர்ட் ஃபிராஸ்ட்டின் மரபு மற்றும் அவர்களின் படைப்பின் மீதான அவரது தாக்கத்திற்கு அஞ்சலி செலுத்தினர். ‘யாங்கி மதிப்புகளின் சின்னம்’ என வால்காட் எழுதினார், ராபர்ட் ஃபிராஸ்ட்டின் கவிதைகள், “மர புகையின் வாசனை, பனியின் பிரகாசம், பண்ணை வீட்டில் சாணத்தின் யதார்த்தம், ஒரு மாமாவின் நகைச்சுவையான நேர்மை” ஆகியவற்றால் நிரப்பப்பட்டது. இ.இ. கம்மிங்ஸ் மற்றும் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் கவிதை புதுமையை முன்வைத்தது.
ராபர்ட் ஃபிராஸ்ட் 1963-ல் தனது 88 வயதில் இறந்தார்.
ராபர்ட் ஃபிராஸ்ட்டின் குறிப்பிடத்தக்க படைப்புகள்
சீர்செய்யப்படும் சுவர் (Mending Wall) (1914), பயன்படுத்தப்படாத சாலை (The Road Not Taken) (1916), ஒரு பனி பொழியும் மாலையில் வூட்ஸ் நிறுத்தம் (Stopping by Woods on a Snowy Evening) (1923) போன்ற ராபர்ட் ஃபிராஸ்ட்டின் மிகவும் பிரபலமான சில கவிதைகளை ஆங்கில இலக்கிய மாணவர்களின் தலைமுறைகள் ஒப்புக்கொள்வார்கள்.
ராபர்ட் ஃபிராஸ்ட் தனது முதல் புலிட்சர் பரிசை 1924-ல் நியூ ஹாம்ப்ஷயர்: கிரேஸ் குறிப்புகளுடன் கவிதை (New Hampshire: A Poem With Notes and Grace Notes),என்ற நூலுக்காகவும் இரண்டாவது முறை, அவருடைய கவிதை தொகுப்புகளுக்காகவும் மூன்றாவது முறை 1937-ல் A Further Range நூலுக்காகவும் இறுதியாக 1943-ல் A Witness Tree நூலுக்காகவும் புலிட்சர் பரிசை வென்றார்.
இந்தியா உடனான ராபர்ட் ஃபிராஸ்ட்டின் தொடர்பு
ராபர்ட் ஃபிராஸ்ட் படைப்பின் முதல் பதிப்புத் தொகுப்பை பிரதமர் மோடிக்கு பரிசளிப்பது அமெரிக்க இலக்கிய வாழ்வில் கவிஞரின் அந்தஸ்தின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அபிமானியாக ராபர்ட் ஃபிராஸ்ட்டைக் கண்டறிந்தார். நேருவின் நண்பர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளின் நிகழ்வுகள், ஸ்டாப்பிங் பை வூட்ஸ் ஆன் எ ஸ்னோவி ஈவினிங் என்ற கவிதையின் மீது அவருக்கு இருந்த குறிப்பிட்ட விருப்பத்தை குறிப்பிடுகின்றன. அவரது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், உடல்நலப் பிரச்சினைகளால் சூழப்பட்டு, சீன-இந்தியப் போரின் (1962) விளைவால் சிரமப்பட்ட நேரு, ராபர்ட் ஃபிராஸ்ட்டின் கவிதைகளின் நகலை தனது படுக்கையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்டாப்பிங் பை வூட்ஸ் என்ற கடைசி சரணத்துடன்… அதில், “காடுகள் அழகானவை, இருண்ட காடுகள் ஆழமானவை / ஆனால் நான் கடைப்பிடிப்பேன / நான் தூங்குவதற்கு முன் பல மைல்கள் செல்ல வேண்டும் / நான் தூங்குவதற்கு முன் பல மைல்கள் செல்ல வேண்டும்” என்ற வரிகள் பெரிதும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
நேருவின் நண்பர், கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன், ஹிந்தியில் இந்த கவிதையை வழங்கியதாக அறியப்படுகிறது, நேருவின் விருப்பமான கடைசி வரிகளும் இதுதான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.