சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு முக்கிய காரணங்களின் கீழ் எதிர்க்கப்பட்டது. இது குடிமகனின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது, அத்தகைய கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிடப்பட்டது.
பிகார் மாநில அரசால் அம்மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு திங்கள்கிழமை (அக்டோபர் 2) வெளியிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இ.பி.சி) பீகார் மக்கள்தொகையில் 63%-க்கும் அதிகமாக உள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Bihar caste survey data out: Why it was legally challenged — and why the court found it ‘perfectly valid’
இந்த எண்ணிக்கையானது 27% இடஒதுக்கீட்டிற்கு முரணாக உள்ளது. இந்த இடஒதுக்கீடு ஓ.பி.சி மக்கள் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கு வழி செய்கிறது. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிகார் மாநிலம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் அரசியல் லாபத்துக்காக இந்த தரவுகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
“இன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு வெளியிடப்பட்டுள்ளது. சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.” என்ற் நிதிஷ்குமார் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் பயணம் சுமூகமாக இல்லை. அதன் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கிய உடனேயே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாநிலத்திற்கு உரிமை இல்லை என்று கூறி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை பாட்னா உயர்நீதிமன்றம் மே மாதம் நிறுத்தி வைத்தது. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதே நீதிமன்றம் கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பு சரியானது என்று கூறியது. இது ஏன் எதிர்க்கப்பட்டது, பாட்னா உயர்நீதிமன்றம் ஏன் இறுதியில் அதை அனுமதித்து உறுதி செய்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எதிர்க்கப்பட்டதற்கான காரணங்கள்
சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு முக்கிய காரணங்களின் கீழ் எதிர்க்கப்பட்டது. இது குடிமகனின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது, அத்தகைய கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
தனியுரிமை வாதம்: மனுதாரர்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எதிர்த்தனர். இதற்கு காரணம், கணக்கெடுக்கப் படுபவர்களின் தனியுரிமை உரிமை அவர்களின் மதம், சாதி மற்றும் மாத வருமானம் தொடர்பான கேள்விகளால் மீறப்படுவதாகக் கூறினர்.
ஆனால், 2017-ம் ஆண்டு 'நீதிபதி கே.எஸ். புட்டாசாமி எதிர் இந்திய அரசு வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று-தேவை சோதனையை நீதிமன்றம் குறிப்பிட்டது, மாநிலத்தின் நியாயமான நலன்களின் அடிப்படையில், அவை விகிதாசாரமாகவும் நியாயமானதாகவும் இருந்தால், அடிப்படை உரிமையின் மீது அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று மீண்டும் வலியுறுத்தியது.
இடைக்கால உத்தரவில் எழுப்பப்பட்ட பாதுகாப்புக் கவலைகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது. பின்னர், பிகார் அரசாங்கத்தின் எதிர்-பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த சாதிவரி கணக்கெடுப்பில் எந்தவிதமான தரவு கசிவும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியது.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பு “தன்னார்வ” மற்றும் “அடையாளம் காணப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வருவதை” நோக்கமாகக் கொண்டவை என்று கூறிய நீதிமன்றம், சேகரிக்கப்பட்ட தரவு “வரி விதித்தல், முத்திரை குத்துதல், முத்திரையிடுதல் அல்லது தனிநபர்கள் அல்லது குழுக்களை ஒதுக்கி வைப்பதற்காக” அல்ல, ஆனால் “அடையாளம் காண்பதற்காக” என்று தெளிவுபடுத்தியது. பல்வேறு சமூகங்கள்/வகுப்புகள்/குழுக்களின் பொருளாதாரம், கல்வி மற்றும் பிற சமூக அம்சங்கள், அவர்களின் மேம்பாட்டிற்காக அரசின் மேலும் நடவடிக்கை தேவை என்று கூறியது.
அதிகாரம்: மத்திய அரசு மட்டுமே "மக்கள் தொகை கணக்கெடுப்பு" நடத்த முடியும் என்று மனுதாரர்கள் கூறினர். அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் காணப்படும் மத்திய மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற, மற்றும் நீட்டிப்பு, நிறைவேற்று, அதிகாரங்கள் மூன்று பட்டியல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், மத்திய அரசு பட்டியலில் உள்ள நுழைவு 69, “மக்கள் தொகை கணக்கெடுப்பு” நடத்துவதற்கு மத்திய அரசு பிரத்யேக அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்று மனுதாரர்கள் தெரிவித்தனர். அவர்கள் "ஏழாவது அட்டவணையில் பட்டியல் I-ல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விஷயத்திலும்" பிரத்தியேகமாக சட்டமியற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கையாளும் பிரிவு 246 ஐயும் நம்பியுள்ளனர்.
பீகார் சாதி கணக்கெடுப்பு எக்ஸ்பிரஸ் கிராஃபிக்
இதற்கிடையில், பிகார் அரசாங்கம் 2011-ல் கூட, மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று வாதிட்டது. இது சட்டப்பிரிவு 73-ன் கீழ், நாடாளுமன்றத்திற்கு சட்டங்களை இயற்றும் அதிகாரம் உள்ள விஷயங்களுக்கு மத்திய அரசின் அதிகாரம் நீட்டிக்கப்படுகிறது என்று கூறுகிறது.
மத்திய மற்றும் மாநிலங்கள் சட்டமியற்றக்கூடிய பாடங்களைக் கொண்ட பொதுப்பட்டியல் 45-வது நுழைவு, மத்திய அரசின் பட்டியலின் நுழைவு 94-ஐப் போன்றது, பொருளாதாரத்தை அடைவதற்கு விவரங்களைச் சரிபார்ப்பதற்காக புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் அதிகாரங்களை இரண்டுக்கும் வழங்குகின்றன. சமூக திட்டமிடல் இலக்குகள் பொதுப்பட்டியல் நுழைவு 20ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
பாட்னா உயர்நீதிமன்றம் அதன் இறுதி உத்தரவில் குறிப்பிட்டது: "நீதியுடன் கூடிய வளர்ச்சியை' வழங்குவதற்கான நியாயமான நோக்கத்துடன், உரிய திறனுடன் தொடங்கப்பட்ட அரசின் நடவடிக்கை முற்றிலும் செல்லுபடியாகும் என்பதை நாங்கள் காண்கிறோம்; இரு அவைகளின் முகவரியிலும் உண்மையான கணக்கெடுப்பிலும் பிரகடனப்படுத்தப்பட்டபடி, விவரங்களை வெளியிட எந்த வற்புறுத்தலோ அல்லது சிந்திக்கவோ இல்லை, விகிதாசார தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இதனால் தனிநபரின் தனியுரிமை உரிமைகளை மீறவில்லை. ஒரு 'நிர்பந்தமான பொது நலன்' இது 'சட்டபூர்வமான மாநில நலன்' ஆகும்.” என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.