ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் ஒரு நல்ல யோசனை உத்தியுடன் காணப்படுகிறார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு (சி.ஏ.பி) ஆதரவு அளித்தபோதிலும், ஐக்கிய ஜனதா தளம் தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் எனத் தெரிவித்த பாஜகவின் முதல் கூட்டணி கட்சியாக மாறியிருப்பது மூலம், நிதிஷ் குமார் பலதரப்பட்ட மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக பல முனை உத்திகளுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
பிரசாந்த் கிஷோரால் கூறிய தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமைத் திருத்த மசோதாவும் ஆபத்தானது பாகுப்பாடானது என்ற ஐக்கிய ஜனதாதளத்தின் புதிய நிலைப்பாடு என்பதை சனிக்கிழமை இரவு ஐக்கிய ஜனதாதளத்தின் செய்தித்தொடர்பாளர் கே.சி.தியாகி உறுதி செய்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மதச்சார்பற்ற கட்சி என்ற நற்பெயர் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதால் பாதிக்கப்படும். அதனால், பீகாரில் 17% முஸ்லீம் வாக்குகளுக்கு லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனி உரிமை கோருபவர்களாக மாற அனுமதிக்க முடியாது.
பாஜக கூட்டணியில் இருந்தபோதிலும், 2009 மக்களவைத் தேர்தலிலும், 2010 சட்டமன்றத் தேர்தலிலும் முஸ்லிம்களில் சில பிரிவினர் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு வாக்களித்தனர் என்பது நிதிஷ் குமாருக்கு தெரியும். அந்த நாட்களில், பாஜக ஜே.டி.யுவுக்கு பின்னால் இருந்தது. பாஜக கிட்டத்தட்ட பீகாரில் அதன் பி-டீம்மாக இருந்தது.
நரேந்திர மோடியின் கீழ் எழுந்த பாஜகவுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸின் 2015 சட்டமன்றத் தேர்தல் வெற்றி சாத்தியமானது. அதற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஈபிசி), பிற பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் தலித் வாக்குகளைத் தவிர முஸ்லிம்களின் பெரும் ஆதரவும் காரணமாகும்.
இதைத்தான் பிரசாந்த் கிஷோர் நிதிஷுக்கு நினைவுபடுத்துகிறார். ஐக்கிய ஜனதாதளம் அதன் முக்கிய கொள்கையாக மதச்சார்பின்மையை சிந்திக்க முடியாது என்று அவர் தொடர்ந்து நிதிஷிடம் கூறி வருகிறார். குறிப்பாக அதன் கருத்தியல் நிலைப்பாடு 370 வது பிரிவை ரத்து செய்தல், முத்தலாக் குற்றமாக்குதல் மற்றும் அயோத்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி மற்றும் உபேந்திர குஷ்வாவின் ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி) இருவரும் ஒருபுறம் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதாதளம் தனது ஆதரவை அளிப்பது என்பது அதன் இரட்டை நிலைப்பாடு உத்தியின் ஒரு பகுதியாக உள்ள்தாக சந்தேகிக்கின்றனர். மறுபுறம் அதன் தலைவர்கள் பிரசாந்த் கிஷோர், பவன் கே வர்மா, குலாம் ரசூல் பால்யாவி இதை எதிர்க்கின்றனர்.
இந்த வெளிப்படையான எதிர்ப்பாளர்கள் யாரும் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையையும் எதிர்கொள்ளவில்லை என்பது நிதிஷின் நிலைப்பாட்டைப் பற்றிய சந்தேகங்களை உருவாக்குகிறது. மேலும், அவர் இரு தரப்பிலும் நல்லவர் என்ற அரசியலில் ஈடுபடுகிறாரா என்பது பற்றியும் சந்தேகங்களை உருவாக்குகிறது. அதோடு, நிதிஷுக்கு பிரசாந்த் கிஷோர் தேவை. இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
முதலாது, பாஜக, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கான சிறந்த சாதனையுடன் கிஷோரின் பயன்பாடு மிகவும் புத்திசாலித்தனமான தேர்தல் உத்தியாக இருப்பதால், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய ஜனதாதளம் அவரைத் தவிர்க்க முடியாது. கிஷோர் மற்றொரு நிதிஷைப் பெற முடியும். நிதிஷுக்கு மற்றொரு கிஷோர் கிடைக்காமல் போகலாம். ஐக்கிய ஜனதாதளத்தின் மாநிலங்களவை எம்.பி. ஆர்.சி.பி சிங் கட்சியில் உண்மையான நம்பர் 2 ஆக இருக்கலாம், ஆனால் நிதிஷால் கிஷோரை விட முடியாது.
இரண்டாவது, கிஷோர் ஒரு கலகக்காரர் உருவத்தை தனக்காக உருவாக்கியுள்ளார். அதில் இருந்து நிதிஷ் பயனடைந்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு குடியுரிமை திருத்த மசோதா மீது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிலைப்பாடு திட்டமிடப்பட்டதானாலும் அதைப்பற்றி இன்றைய தினம் கவலைப்படவில்லை. இப்போது நிதிஷ் ஸ்கோர் செய்ததாகத் தெரிகிறது. பாஜக மௌனமாக உள்ளது. ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் அதன் உத்தி நிதிஷுக்குத் தெளிவாகத் தெரியும்.
மூன்றாவது, காங்கிரஸ், ஆர்.ஜே.டி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நல்லுறவைக் கொண்ட கிஷோர், பீகாரில் அல்லது தேசிய அளவில் எதிர்கால அரசியல் மறுசீரமைப்பில் முக்கிய பங்கு வகிக்க முடியும். இந்த நேரத்தில் அந்த வாய்ப்பு தொலைவில் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நேரத்தில் அசௌகரியமான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனாலும், அது தேசிய குடிமக்கள் பதிவேடு மீதான ஐக்கிய ஜனதாதளத்தின் நிலைப்பாட்டிற்கு பாஜக இறுதியில் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்தது.
மகாராஷ்டிராவில் பாஜக பட்ட காயங்கள் இன்னும் ரணமாக இருப்பதை நிதிஷ் அறிவார். பீகார் 2020 ஐக்கிய ஜனதாதளத்தைப் போலவே பாஜகவுக்கும் முக்கியமானது என்பதை அவர் அறிவார். பீகார் முடிவுகளுக்குப் பிறகு பாஜக அவருக்கு சிவசேனாவைப் போல செய்ய முடியாது என்பதை உறுதிசெய்தால் மட்டுமே கிஷோர் நிதிஷின் திட்டங்களில் பொருத்தமானவராக இருப்பார்.