காத்திருக்கும் சவால்கள்: பீகாரில் புதிய அரசு செய்ய வேண்டியவை என்ன?

வேளாண் பொருள்கள் உற்பத்தியில் சில முன்னேற்றங்கள் தென்பட்டாலும், வேளாண்மை வளர்ச்சி மக்களின் நல்வாழ்வுக்கு சிறந்த பாதையை அமைத்து தரவில்லை.

வேளாண் பொருள்கள் உற்பத்தியில் சில முன்னேற்றங்கள் தென்பட்டாலும், வேளாண்மை வளர்ச்சி மக்களின் நல்வாழ்வுக்கு சிறந்த பாதையை அமைத்து தரவில்லை.

author-image
WebDesk
New Update
காத்திருக்கும் சவால்கள்: பீகாரில் புதிய அரசு செய்ய வேண்டியவை என்ன?

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவரான யு கே சின்ஹா, பீகார் தேர்தல் வாக்குறுதிகள் மாநிலத்தின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்று கருதுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அடிப்படை புள்ளிவிவரங்கள் நாம் சற்று ஆராய வேண்டும். உதாரணமாக, 2019-20 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு வெறும் 46,664 ரூபாயாக உள்ளது. 1,34,226 ரூபாய்  என்ற இந்தியாவின் சராசரி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், 34.7 சதவீத விழுக்காடை தான் பீகார் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Advertisment

வேளாண் பொருள்கள் உற்பத்தியில் சில முன்னேற்றங்கள் தென்பட்டாலும், வேளாண்மை வளர்ச்சி மக்களின் நல்வாழ்வுக்கு சிறந்த பாதையை அமைத்து தரவில்லை. வறுமையில் தள்ளப்படுபவர்களின் போக்கு அதிகரித்து வருகிறது மற்றும் வேலையின்மை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

மாநில பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை, தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது வெறும் 8.7 சதவீத விழுக்காடாக உள்ளது .

2017-18 ஆம் ஆண்டிற்கான தரவில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் வெறும் 1.5 சதவீத மட்டும் பீகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று  தெரிய வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, மாநிலத்தின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 0.6 சதவீதமாக உள்ளது.

Advertisment
Advertisements

2019-20 நிதியாண்டில், மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீடு தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது வெறும் 0.01 சதவீதமாக இருந்தது.  மேலும்,  வணிகம் செய்வதை எளிதாக்கும் தரவரிசைப் பட்டியலில், பீகார் 26 வது இடத்தில் உள்ளது. தொழில்முனைவு ஆசையில் இருப்பவர்கள் அங்கு தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

2017 நிதியாண்டில், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்கு சந்தைகளில் பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு நிறுவனம் வர்த்தகம் செய்ய வில்லை. மாநிலத்தில் பிரைவேட் ஈக்விட்டி, வென்ச்சர் கேபிடல் கிட்டத்தட்ட பூஜ்யமாக உள்ளது.

"ஆனால், இந்த தேர்தலில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்  நம்மை முற்றிலும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது" என்று சின்ஹா ​​கூறுகிறார்.

கோவிட் தடுப்பு மருந்து இலவசமாக தரப்படும், 19 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று  பாஜக உறுதியளித்தது. இதில், அரசுப் பணிகளில்  4 லட்சம்  பேர் என்றும் தெரிவித்தது.

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ்,  அரசுப் பணிகளில் 10 லட்சம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும், விவசாயக் கடன் தள்ளுபடி, வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை ஆகியவற்றை உறுதியளித்தார்.

காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தன. லோக் ஜன சக்தி  சீதாவுக்கு கோவிலைக் கட்டுவதாக வாக்குறுதியளித்தது.

"கோயில்கள், கடன் தள்ளுபடி, வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை? இதுதான் பீகார் மக்களுக்கு நாம் செய்யக்கூடிய வளர்ச்சி நடவடிக்கைகள் இதுதானா? எதிர்கால பிகாரி மக்களைப் பற்றிய கற்பனை இவ்வளவு தானா?  என்று சின்ஹா கேள்வி எழுப்பினார்.

துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் கொள்கை ரீதியான சீர்திருத்தங்களை கொண்டுவருவதில் தான் பீகார் மாநிலத்தின் எதிர்காலம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

India Bihar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: