பீகார் வாக்கு எண்ணிக்கை: அதிக தாமதத்திற்கு என்ன காரணம்?

வழக்கமாக 25 முதல் 26 சுற்றுக்களாக எண்ணப்படும் வாக்குகள் இம்முறை 35 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன

Bihar elections result tamil
Bihar elections result tamil

Bihar elections result tamil : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மூன்று கட்டங்களாகளாக நடைபெற்று முடிந்தது.

அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் கிழக்கு சாம்பரான், கயா, ஷிவான், பெகுசாரை ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் தலா 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வழக்கமாக பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய தெரிந்துவிடும். ஆனால், பீகார் சட்டமன்ற தேர்தலில் குறைந்த அளவு சுற்றுக்களே எண்ணப்பட்டுள்ளன.

ஆனால், இந்த தேர்தலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. குறிப்பாக அதிகபட்சமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. கூடுதல் எந்திரங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகும் என தேர்தல் அதிகாரிகள் முன்பே கூறியிருந்தனர்.

இதற்கிடையே, மாநில தேர்தல் அதிகாரி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். “ பீகாரில் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதம் ஆகும் என்றார். மேலும், பதிவான 4.10 கோடி வாக்குகளில் வெறும் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. வழக்கமாக 25 முதல் 26 சுற்றுக்களாக எண்ணப்படும் வாக்குகள் இம்முறை 35 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. எனவே வாக்கு எண்ணும் பணி முடிய இரவு வரை ஆகலாம்” என்றார்

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bihar elections result tamil bihar elections news tamil bihar elections results tamil news

Next Story
கொரோனா 2-வது அலை: அடுத்து என்ன?Covid 19 corona virus Pandemic second wave expert opinion explained Tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com