19 பிப்ரவரி 2023, ஞாயிற்றுக்கிழமை, பிரேசிலின் சாவ் பாலோவில் கார்னிவல் அணிவகுப்பின் போது Dragoes da Real samba பள்ளியின் நடனக் கலைஞர்கள் நடனமாடுகிறார்கள். (AP Photo/Andre Penner)
வண்ணங்கள், இசை மற்றும் வாழ்வியல் நிறைந்த பிரேசிலின் ரியோ கார்னிவல் 2023 வருடாந்திர திருவிழா, பிப்ரவரி 17 அன்று தொடங்கியது. "உலகின் மிகப்பெரிய விழா" என்று விவரிக்கப்படும் இதில், உள்ளூர் அதிகாரிகளின் மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
இந்த விழாவின் தோற்றம் மற்றும் அதன் ஒரு பகுதியாக என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
கார்னிவலின் தோற்றம் மற்றும் வரலாறு
பிரேசிலில் உள்ள ரியோ நிச்சயமாக பிரகாசமான கொண்டாட்டங்களில் ஒன்றைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், திருவிழா இப்பகுதிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.
ஆன்லைன் Etymology Dictionary படி, " Carnival என்ற வார்த்தை போர்த்துகீசிய மொழியான ' Carne Vale' என்பதிலிருந்து உருவானது, இது 'இறைச்சிக்கு விடை கொடுத்தல் என்று பொருள்படும்.”
உரத்த கொண்டாட்டங்கள் அதைக் குறிப்பிடவில்லை என்றாலும், அணிவகுப்புகள் மற்றும் நடனங்கள் உண்மையில் கிறித்தவர்களால் 'தவக்காலம்' என்று அழைக்கப்படும் உண்ணாநோன்பு காலத்திற்கு முன்னர் களியாட்டங்கள் மற்றும் இன்பம் நிறைந்த கடைசி கொண்டாட்டம் ஆகும். இந்த காலம் ஈஸ்டர் விடுமுறை வரை நீடிக்கும். தவக்காலம் பொதுவாக 40 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. ரியோ கொண்டாட்டம் 'சாம்பல் புதனுக்கு' ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்குகிறது மற்றும் டிசம்பரில் பார்ட்டிகள் தொடங்கும்.
பிப்ரவரி 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாவ் பாலோவில் நடந்த திருவிழா அணிவகுப்பின் போது Mancha Verde samba பள்ளியைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் ஆடுகிறார்கள். (AP Photo/Andre Penner)
தவக் காலத்தின் முதல் நாள், சாம்பல் புதன் இந்த ஆண்டு பிப்ரவரி 22 அன்று ரியோவில் கார்னிவல் முடிவடையும் போது வருகிறது.
ரீடர்ஸ் டைஜஸ்ட் படி, பல தேவாலயங்கள் சாம்பல் புதன் ஆராதனையை நடத்துகின்றன, இதன் போது பாதிரியார் விரலை சாம்பலில் தோய்த்து, ஒவ்வொருவர் நெற்றியிலும் சிலுவை இடுவார்கள், நீங்கள் தூசி என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் மண்ணுக்குத் திரும்புவீர்கள் என்று கூறுவார்கள்.
40 நாள் தவக் காலம், இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் உண்ணாவிரதம் இருந்த கதையின் பிரதிபலிப்பு, அங்கு பிசாசு அவரை பலமுறை சோதித்தது. தவக்காலம் கிறிஸ்தவர்கள் சில பொருட்கள் அல்லது செயல்பாடுகளை, ஒருவேளை சாக்லேட்டுகள் அல்லது பிற ஆசைகளை கைவிடுவதையும், ஆன்மீகத்தில் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு வகையான தனிப்பட்ட சோதனையாக பார்க்கிறது.
தி எகனாமிஸ்ட் கருத்துப்படி, 'கார்னிவல்' தோற்றம் முன்பே இருந்தது – எகிப்தில் உள்ள Pagans குளிர்காலத்தை வெளியேற்ற மற்றும் வசந்தத்தை வரவேற்பதற்கும் இதைக் கொண்டாடினர்.
அலெக்சாண்டர், எகிப்தைக் கைப்பற்றியவுடன், இந்த யோசனை ஐரோப்பாவிற்குச் சென்றது, அப்போதுதான் கிறிஸ்தவ சங்கங்கள் மேலெழுந்தன. தென் அமெரிக்காவின் ஐரோப்பிய காலனித்துவத்துடன், பாரம்பரியங்கள் ஒன்றிணைந்து பிரேசிலில் இன்று நாம் காணும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு வழிவகுத்தன.
சுமார் 50 நாடுகள் இந்த திருவிழாவை கொண்டாடுகின்றன. போர்த்துகீசியர் வருகைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பண்டிகை கோவாவிலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் பாஞ்சிமில் உள்ள மண்டோவி ஆற்றின் அருகே கொண்டாட்டங்கள் நடந்தன. கோவா சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்தில், கார்னிவல் குளிர்காலத்தின் முடிவையும் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறித்தது.
கார்னிவல் கொண்டாட்டங்களில் என்ன இருக்கிறது?
blocos எனப்படும் தெரு பார்ட்டிகள் மற்றொரு முக்கியமான அம்சம். பின்னர் ஆப்ரோ-பிரேசிலிய மரபுகளின் கலவையான சம்பா நடனம் உள்ளது. இந்த நேரத்தில் நடனம் கற்பதற்காக பல சம்பா பள்ளிகள் தோன்றும்.
ரியோ மட்டுமே அதன் கொண்டாட்டங்களைக் கொண்ட நகரம் அல்ல, பல்வேறு பிரேசிலிய நகரங்கள் தங்கள் சொந்த அணிவகுப்புகளைக் கொண்டுள்ளன. பல லத்தீன் கார்னிவல்களில் திருவிழா அணிவகுப்பை வழிநடத்தும் பெரிய மனிதரான கிங் மோமோ முடிசூட்டுவது ஒரு சிறப்பம்சமாகும்.
கோவா சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, கிங் மோமோ அல்லது ராஜா கேயாஸ், நையாண்டியின் கடவுளான கிரேக்க கடவுளான மோமுஸிடமிருந்து பெறப்பட்ட ஒரு பாத்திரம்.
கோவாவில் உள்ள கிங் மோமோவின் கோர்ட், பொதுவாக நெருப்பு சாகசம் செய்பவர்கள், நையாண்டி கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்குழுக்களால் நிரம்பி வழியும்.
கிங் மோமோவாக இருக்க விரும்பும் பெரிய உள்ளம் கொண்ட, ஜாலியான, வேடிக்கையாக விரும்பும் கோவா மக்களிடமிருந்து சுற்றுலாத் துறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பப் படிவம், அவர்கள் தங்களைப் பற்றி விவரித்து, அவர்கள் ஏன் கௌரவமான இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பதைக் குறிப்பிடும்படி கேட்கிறது.
இதனிடையே கொரோனா தொற்றுநோய் காரணமாக, இதுபோன்ற பல பார்ட்டிகளும் திருவிழாக்களும் கட்டுப்பாடுகளுடன் மிகவும் அடக்கமாக இருந்தன. 2021 இல், நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
மற்ற இடங்களை போலவே, அதிகரித்த சுற்றுலா மற்றும் கொள்முதல் காரணமாக, பல பிரேசிலியர்கள் எதிர்பார்க்கும் பொருளாதார தாக்கம் இதில் உள்ளது, ரியோ அதன் பார்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சுமார் 1 பில்லியன் டாலர் வருவாயை எதிர்பார்க்கிறது என்று நகரின் சுற்றுலா ஏஜென்சியின் தலைவர் ரோனி கோஸ்டா AP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“