Breathing Rate and Virus Tamil News : மெதுவாக சுவாசிப்பது பல்வேறு சுகாதார நன்மைகளைத் தரும். ஆனால், காற்றுவழி நோயைப் பரப்புவதைப் பொருத்தவரை அப்படியல்ல. அமெரிக்க இயற்பியல் நிறுவனத்தின் இதழான Physics of Fluids-ல் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த சுவாச அதிர்வெண் மற்றும் ஒருவரின் சுவாசத்தை நீண்ட நேரம் பிடித்து வைத்திருப்பது – வைரஸ் நிறைந்த நீர்த்துளிகள் ஆழமான நுரையீரலை அடையும் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
சிக்கலான நுரையீரல்
உட்புற நுரையீரலில் ஏரோசால்கள் தங்களைத் தாங்களே டெபாசிட் செய்வதற்கு முன்பு நாம் சுவாசிக்கும் பெரும்பகுதியை நம் உடல்கள் எதிர்த்துப் போராடுகின்றன. எக்ஸ்ட்ராடோராசிக் பகுதி மற்றும் நுரையீரலின் இப்படிப்பட்ட சிக்கலான வடிவமைக்க நன்றிதான் கூறவேண்டும். ஏரோசோல்களின் ஒரு பகுதி சளி வடிவில் வெளியேற்றப்படுகிறது, அதே நேரத்தில் நாசி வழியைக் கடக்கும் கிருமிகள் நுரையீரலை வரையறுக்கும் சிக்கலான கிளை கட்டமைப்பிற்குச் செல்கின்றன.
இதுபோன்ற மைக்ரோ சேனல்கள் மூலம் நுரையீரல் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் மைக்ரோமீட்டர் அளவிலான நீர்த்துளிகளின் இயக்கவியல் குறித்து ஆய்வு செய்தது. “ஆழமான நுரையீரலில் (நாம் அசினஸ் அல்லது இரத்தத் தடையை அணுகும்போது) பொருள், துகள்கள் அல்லது வாயுக்கள் முற்றிலும் பரவக்கூடியது. இந்த பரவலான தன்மை வாயுக்கள் துகள்களை விட மிக வேகமாகப் பரவுவதை உறுதி செய்கிறது. இது இரத்தத்தை அடையும் ஏரோசால் துகள்களுக்கு எதிரான உடலின் சொந்த பாதுகாப்பின் ஒரு பகுதி” என்று மெட்ராஸ் ஐஐடியின் பயன்பாட்டு இயக்கவியல் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறினார்.
“வெவ்வேறு நபர்களுக்கு மாறுபட்ட நுரையீரல் உருவமைப்பு (மூச்சுக்குழாய்களுடன் தொடர்புடைய பரிமாணங்கள்) இருக்கக்கூடும் என்பதால், அவர்களின் இன்ஹெரென்ட் பாதுகாப்பு வேறுபட்டிருக்கக்கூடும்” என்று பஞ்சக்னுலா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். பேராசிரியர் பஞ்சக்னுலா மற்றும் அவருடைய நண்பர்கள் ஏரோசோல் தனிநபரிடமிருந்து தனிநபருக்கு மாறுபடுவதை முன்னிலைப்படுத்தி வேலைகளைச் செய்துள்ளனர். சிலர் மற்றவர்களை விட காற்றுவழியே நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆய்வுகளின் மாதிரி
மூச்சுக்குழாய்கள் எனப்படும் நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளுக்கான ப்ராக்ஸியாக, ஆராய்ச்சியாளர்கள் 0.3 முதல் 2 மிமீ வரையிலான விட்டம் கொண்ட மைக்ரோ கேபில்லரிகளைப் பயன்படுத்தினர். ஓர் சிரிஞ்ச் பம்ப், இந்த மைக்ரோகபில்லரிகளில் சுவாசத்தை உருவகப்படுத்தியது. ஃப்ளோரசன்ட் துகள்களுடன் கலந்த நீரிலிருந்து உருவாக்கப்படும், ஏரோசால்கள் நகர்ந்து கேபிலரிகளில் வைப்பதால் அவற்றைக் கண்காணிக்க முடியும். ஏரோசால்களின் படிவுகளை அளந்தபின், ஆராய்ச்சியாளர்கள் அதன் பரிமாணங்களின் செயல்பாடாக மூச்சுக்குழாயில் டெபாசிட் செய்யப்படும் ஏரோசாலின் அளவை வகைப்படுத்தினர்.
கண்டுபிடிப்புகள்
இந்த சோதனைகள் குறைந்த சுவாச அதிர்வெண், நிமிடத்திற்கு சுவாசங்களின் எண்ணிக்கை, வைரஸ் உள்ளே இருக்கும் நேரம், அதனால் ஏற்படும் படிவு மற்றும் அதன் விளைவாகத் தொற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பதை சுட்டிக்காட்டின.
இந்த ஆராய்ச்சியானது படிவுக்கும், நுண் குழாய்களின் விகிதத்திற்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்தது. நீர்த்துளிகள் நீண்ட மூச்சுக்குழாய்களில் டெபாசிட் செய்யக்கூடும் என்று கூறுகின்றன.
ஏரோசால் இயக்கத்தின் ஓட்டம் சீராக இருப்பதாகவும், டிஃப்யூஷன் வழியாகத் துகள்கள் பரவல் இருப்பதாகவும் அளவீடுகள் காட்டின.
பரவல் மற்றும் தாக்கம் ஆகியவை நுரையீரலின் பல்வேறு பகுதிகளில் ஏரோசால்கள் டெபாசிட் செய்யப்படும் மூன்று வழிமுறைகளில் இரண்டு வகைகள். மூன்றாவது வகை செடிமென்டேஷன் (ஈர்ப்பு விளைவின் கீழ்). நீர்த்துளிகள் மிக வேகமாக நகரும் போது அவை காற்றைப் பின்பற்றுவதில்லை. அதற்கு பதிலாக மூச்சுக்குழாயின் சுவர்களை “பாதிக்கின்றன”. “பரவல் என்பது சிறிய நீர்த்துளிகள் மூச்சுக்குழாய்களின் சுவர்களை நோக்கி‘ சீரற்ற நடை’ மூலம் கொண்டு செல்லப்படும் ஒரு விளைவு. இது காற்றின் ஏற்ற இறக்கங்களால் உதவுகிறது. இதனால் நீர்த்துளிகள் மூச்சுக்குழாய் சுவர்களை நோக்கி நகரும்” என்று பேராசிரியர் பஞ்சக்னுலா கூறினார்.
Turbulence அதாவது தாக்கத்தால் படிவுடன் தொடர்புடைய ஆய்வு. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் மேல் மூச்சுக்குழாயில் படிவு செய்வதற்கான முதன்மை முறை. ஆனால் காற்று ஆழமான நுரையீரலை அடைந்தவுடன், அது கணிசமாகக் குறைகிறது. இதன் விளைவாக வாயுப் போக்குவரத்து முதன்மையாகப் பரவுவதன் மூலம் உதவுகிறது எனப் பேராசிரியர் பஞ்சக்னுலா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:Breathing rate and risk of virus infection explained in tamil
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி