Advertisment

நாட்டின் 60% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் ஏன் எண்ணுகிறது?

Corona Update : ஒரு நோய்க்கு எதிராக ஏராளமான மக்கள் தடுப்பாற்றல் பெறும் போது, மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றனர் என்பதே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, covid 19

corona virus, covid 19

கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க பிரிட்டன் வேறு யுக்தியை அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் பேட்ரிக் வலன்ஸ் கூறுகையில், வைரஸ் பரவுவதை அதிகாரிகள் கையாள்வார்கள், ஆனால் "அதை முழுமையாக அடக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

ஏனெனில், "60 சதவிகித தொற்று விகிதம்" நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என்று வாலன்ஸ் கூறுகிறார்.

கொரோனாவும் விளையாட்டு உலகமும்

ஹெர்ட் இம்மியூனிட்டி என்றால் என்ன?

ஹெர்ட் நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு நோய்க்கு எதிராக ஏராளமான மக்கள் தடுப்பாற்றல் பெறும் போது, மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றனர் என்பதே. மக்கள் தொகையில் போதுமான சதவீத மக்கள், நோய் தடுப்பாற்றலை பெறும் போது, அது நோய் பரவுவதை குறைக்கிறது. இது சமூகத்தில் நிலவும் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது ஹெர்ட் பாதுகாப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த அணுகுமுறை மூலம், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகும். மனிதனுக்கு மனிதனுக்கு வைரஸ் பரவுதலும் தடுக்கப்படும். இந்த முறை, வைரஸ் அதன் பரவலை நிறுத்திவிடும் என்று நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸுக்கு பிரிட்டனின் அணுகுமுறை

கொரோனா வைரஸுக்கு மென்மையான அணுகுமுறையால் பிரிட்டன் விமர்சனங்களை எதிர்கொண்டது. விஞ்ஞான ஆலோசகரின் அறிக்கையும் மருத்துவ வல்லுநர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது.

எவ்வாறாயினும், வாலன்ஸ் தனது அறிக்கையில் கூறுகையில், "நீங்கள் எதையாவது தொடங்கும்போது, நீங்கள் அதை எவ்வாறு செயல்தவிர்க்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழும்... நீங்கள் செயல்தவிர்க்கும்போது, நீங்கள் அதை சரியாகப் செய்யாவிட்டால், அது மீண்டும் உங்களை நோக்கி எதிரொலிக்கும்" என்றார்.

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பரிசோதனை மையங்கள் போதுமானவையா?

ஹெர்ட் இம்மியூனிட்டி: இது வேலை செய்யுமா?

தி லான்செட்டின் ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன் இந்த யுக்தியை "ஒரு பெரிய பிழை" என்று அழைக்கிறார். அவர், “கோவிட் -19 க்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் பதில் குறித்து எனக்கு நெருடல் என்னவென்றால் அதன் யுக்தியின் நோக்கமே. குறிக்கோள் ஹெர்ட் இம்மியூனிட்டி என்று தெரிகிறது. இதன் நோக்கம், ஒரு தொற்றுநோயை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குப் பாதிக்க வைக்கப்படுகிறது. அவசர நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகிறது. ஆனால், உயிரைக் காப்பாற்றுவதே குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். இது ஒரு ஒரு பெரிய பிழை" என்கிறார்.

"பொதுமக்களின் உயிருடன் விளையாடுவதாக அரசாங்கத்தை அவர் விமர்சித்தார்.

இந்த மாத தொடக்கத்தில், COVID-19 வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கானது" என்று WHO கூறியது. "அதாவது அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் சிலர் கடுமையான நோயால் பாதிக்கப்படுவார்கள்" என்று அது மேலும் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment