ரகுவேந்திர வர்மாவுக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது, அதில் அவர் ஒரு ஏக்கரில் நெல், கடலை ( கொண்டைக்கடலை) மற்றும் பட்டாணி பயிரிட்டுள்ளார். மீதமுள்ள 1.5 ஏக்கரில், சுற்றுச்சூழலால் கட்டுப்படுத்தப்படும் (EC) கோழிக் பண்னையில் முறையே 11,000 மற்றும் 9,000 பறவைகளைக் கொண்ட பிராய்லர் இறைச்சிக் கோழிகளை அவர் வளர்க்கிறார்.
சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் மாவட்டத்தின் டோன்கர்கர் தாலுகாவில் உள்ள தேவ்கட்டா கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான இவர், 35-45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுடைய குஞ்சுகள் (டி.ஓ.சி- day- old chicks) முதல் சுமார் 2.5 கிலோ எடையுள்ள கோழியாகும் வரை சுமார் 37 நாட்களுக்கு வளர்க்கிறார்.
வர்மா ஓராண்டிற்கு 6 முறை இவ்வாறு செய்கிறார், ஒவ்வொரு 60 நாட்களில் பண்ணையை சுத்தம் செய்கிறார். கடந்த ஆண்டு அவரது ஆறு சுழற்சிகள் (மே 2023 முதல் மே 2024 நடுப்பகுதி வரை) மொத்தம் 320,865 கிலோ எடையுடன் சந்தைப்படுத்தக்கூடிய கோழிகளை வளர்த்து விற்றுள்ளார்.
ஒப்பந்த விவசாயம்
வர்மாவின் பண்ணையில் உள்ள DOC-கள் டோங்கர்கர் தாலுகாவில் உள்ள முண்ட்கானில் உள்ள IB குழுமத்தின் பிராய்லர் கோழி வளர்ப்பகத்தில் இருந்து வந்தவை. இது ரூ. 11,000 கோடி டர்ன் ஓவர் பிசினஸ் ஆகும். ABIS Exports (India) Private Limited என்ற நிறுவனம் கோழிகளுக்கு தீவனம், பண்ணை சுத்தம் செய்யும் இரசாயனங்கள் (தாமிர சல்பேட், ஃபார்மலின், பிளீச்சிங் பவுடர் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்) ஆகியவற்றை வழங்குகிறிது.
கடந்த ஆண்டு, வர்மா சராசரியாக ரூ. 14.89 /கிலோவைப் பெற்றார், இது 320,865 கிலோவில் மொத்த வருவாயாக ரூ.47.78 லட்சமாக மாற்றுகிறது.
முக்கியமாக கூலி, மின்சாரம், டீசல் மற்றும் அரிசி, தீவன செலவுகளைக் கழித்து, ஒரு சுழற்சிக்கு ரூ. 2.5 லட்சம் அல்லது ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் லாபம் ஈட்டுகிறார். அவரின் நெட்வெர்த் ரூ. 32-33 லட்சம் வருகிறது.
முதலீடு ரூ.9 லட்சம்
திகேஷ்வர் சின்ஹா (30), ஐந்து ஏக்கர் விவசாயி, கைராகர்-சூய்காடன்-கண்டாய் மாவட்டத்தின் கைராகர் தாலுகாவில் உள்ள ஷிகாரி டோலா கிராமத்தைச் சேர்ந்தவர், 2,500 கோழிகளுக்கு 3,300 சதுர அடியில் "திறந்த" கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
கொட்டகை, ஃபீடர்கள், தண்ணீர், ஃபேன்கள், ஸ்பிரிங்க்லர்கள் மற்றும் சணல் திரைச்சீலைகள் கோடை வெப்பத்தைத் தணிக்க, கேஸ் ப்ரூடர்கள் ஆகியவை வைத்துள்ளார். இதில் அவரது முதலீடு ரூ.9 லட்சம் மட்டுமே.
இருப்பினும், சின்ஹா தனது சொந்த உழைப்பைக் கொண்டு பண்ணையை நன்றாக நிர்வகிக்கிறார். அவரது கடைசி சுழற்சியில், 2,520 பறவைகளில் 71 மட்டுமே இறந்தன. சந்தைப்படுத்தப்பட்டவை மொத்த எடை 5,954 கிலோ அல்லது சராசரியாக 2.43 கிலோ.
9,480 கிலோ தீவனத்தை உட்கொண்டதன் மூலம், அவரது மாற்று விகிதம் 1.59 EC வீடுகளுக்கு 1.45-1.6 வரம்பிற்குள் இருந்தது. திறந்த வீடுகளுக்கான அடிப்படை GC ரூ 8/கிலோவாக இருக்கும் போது, IB குழு அவருக்கு ரூ 13.25/கிலோ கொடுத்தது. மொத்த வருவாயில் 78,890 ரூபாய்க்கு 21,000 ரூபாய் செலவாகும், அந்தத் தொகுப்பிலிருந்து அவரது நிகர வருமானம் - 58,000 ரூபாய். அவரும் ஒரு வருடத்தில் ஆறு சூழற்சி செய்கிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: How broiler chicken industry has become India’s most organised and vertically integrated agri-business
ஒருங்கிணைந்த வணிகம்
பிராய்லர் ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் கோழி வளர்ப்பை மாற்றியுள்ளன - பாரம்பரியமாக 10-20 சதுர இடத்தில் இருந்து கொல்லைப்புற கோழி வளர்ப்பதன் அடிப்படையில் விவசாய உபபொருட்கள் மற்றும் சமையலறை கழிவுகள் வைத்து சிறு விவசாயிகளுக்கு கூட ஒரு வணிக நிறுவனமாக இந்த தொழில் மாறிஉள்ளது. IB குழுமத்தின் 30,000 விவசாயிகளில் ஏறக்குறைய 40% பேர் EC வீடுகளை வைத்திருக்கிறார்கள். இவர்கள் 9,000-10,000 முதல் 24,000-25,000 கோழிகளை வளர்க்கிறார்கள்.
IB/ABIS க்கு 10 கோழி வளர்ப்பகங்கள் உள்ளன - இரண்டு ராஜ்நந்த்கானில் உள்ளன. அதோடு ராஜ்புரா (பஞ்சாப்), முசாபர்பூர் (பீகார்), ஜகதீஷ்பூர் (உத்தர பிரதேசம்), ஜல்பைகுரி (மேற்கு வங்காளம்), நாகோன் (அஸ்ஸாம்), ஜாஜ்பூர் (ஒடிசா), அவுரங்காபாத் (மகாராஷ்டிரா) . மற்றும் கோலார் (கர்நாடகா) ஆகிய இடங்களில் மையம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.