BSNL and MTNL meger revival plan: மத்திய அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகியவற்றுக்கான இணைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்திற்கு மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இரண்டு நிறுவனங்களும் அதிகரித்துவரும் நஷ்டத்தாலும் இந்த துறையில் அதிகரித்துவரும் போட்டியாலும் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
கடுமையான போட்டி மற்றும் கட்டணங்களைக் குறைப்பதன் காரணமாக தொலைத் தொடர்புத் துறை நிதி அழுத்தத்தை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கான புத்துயிர் தொகுப்பு வருகிறது. மொபைல் பிரிவில் உள்ள போட்டி, அதிக பணியாளர் செலவுகள் மற்றும் தரவு மையப்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு சந்தையில் 4ஜி சேவைகள் இல்லாதது (பி.எஸ்.என்.எல்.-லுக்கு ஒரு சில வட்டங்களைத் தவிர) படிப்படியாக பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றின் போட்டியிடும் வலிமையைக் குறைத்துவிட்டது.
தற்போது இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை என்ன?
பி.எஸ்.என்.எல் 2009 -10 முதல் தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்துவருவதாகப் புகாரளித்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. எம்.டி.என்.எல் 22,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. பி.எஸ்.என்.எல் இன் தற்காலிக இழப்பு 2015-16-இல் ரூ .4,859 கோடியாகவும், 2016-17-இல் ரூ .4,793 கோடியாகவும், 2017-18-இல் ரூ .7,993 கோடியாகவும் இருந்தது. நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, இந்த இழப்பு 2018-19-இல் ரூ .14,202 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நலிவடைந்த இந்த நிறுவனங்களுக்கு அமைச்சரவையின் முன்மொழிவு எவ்வாறு உதவும்?
அமைச்சரவையால் இணைக்கப்பட்டது இரண்டு பக்கமும் தெளிவாகியுள்ளது. இந்த இணைப்புடன் நிறுவனத்திற்கான மறுமலர்ச்சி முன்மொழிவு நான்கு அம்ச உத்திகளை கொண்டுள்ளது. 4 ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் நிர்வாக ஒதுக்கீடு, மத்திய அரசால் நீட்டிக்கப்பட்ட இறையாண்மை உத்தரவாதத்துடன் பத்திரங்களை உயர்த்துவதன் மூலம் கடன் மறுசீரமைப்பு, தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் (வி.ஆர்.எஸ்) மூலம் பணியாளர் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் சொத்துக்களைப் பணமாக்குதல ஆகிய நான்கு உத்திககளைக் கொண்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறைக்கு முன்மொழியப்பட்ட புத்துயிர் திட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு முன்பு ஒப்புதல் அளித்திருந்தது.
தொலைதொடர்புத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் திட்டத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்திய மேலாண்மை நிறுவனம், அகமதாபாத் மற்றும் டெலாய்ட் ஆகியவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களின் உள்ளீடுகள், முறையே பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றிற்கான புத்துயிர் பாதை வரைபடங்களை உருவாக்க தனித்தனியாக ஈடுபட்டன.
இணைக்கப்பட்ட பி.எஸ்.என்.எல் - எம்.டி.என்.எல் அதிகரித்து வரும் தரவு மைய சந்தையில் எவ்வாறு போட்டியிடும்?
பிராட்பேண்ட் மற்றும் பிற தரவு சேவைகளை வழங்குவதற்கு பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களின் 4 ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் நிர்வாக ஒதுக்கீட்டு வழியை அமைச்சரவையின் முன்மொழிவு தெளிவுபடுத்துகிறது.
இந்த ஸ்பெக்ட்ரம் இவ்விரண்டு பொதுத்துறை நிறுவனங்களில் மூலதனத்தை உட்செலுத்துவதற்ன் மூலம் ரூ.20,140 கோடி மதிப்பில் நிதியளிக்கப்படும். இந்த ஸ்பெக்ட்ரம் மதிப்பிற்கு ரூ.3,674 கோடியை ஜிஎஸ்டியுடன் அரசாங்கம் பட்ஜெட் நிதி ஆதாரம் மூலம் ஏற்கும்.
இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை மேம்படுத்துவதன் மூலம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 4 ஜி சேவைகளை வழங்கவும் சந்தையில் போட்டியிடவும் முடியும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறுவனங்களின் பிற வருவாய் அதிகரிப்பு/செலவு குறைப்பு நடவடிக்கைகள்?
பி.எஸ்.என்.எல்-லும் எம்.டி.என்.எல்-லும் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் நீண்ட கால பத்திரங்களை திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்தி அரசால் இறையாண்மை உத்தரவாதம் வழங்கப்படும். இந்த பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு இருக்கிற கடன்களை மறுசீரமைக்கும். அவற்றின் திறன் விரிவாக்கக் கடமைகளையும் ஓரளவு பூர்த்தி செய்யும்.
இதனுடன், இரு நிறுவனங்களும் 50 வயது அதற்கு மேற்பட்ட வயதுள்ள தங்கள் ஊழியர்களுக்கு விருப்ப ஒய்வு (வி.ஆர்.எஸ்) வழங்கும் திட்டத்துக்கு பட்ஜெட் மூலம் மத்திய அரசால் நிதியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வி.ஆர்.எஸ்-ஸின் தார்மீக நிதி அளிப்புக்கு கூடுதலாக ரூ .17,169 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் விவரங்கள் இரு நிறுவனங்களால் விரைவில் இறுதி செய்யப்படும். இந்த நிறுவனங்களின் ஊழியர்களில் பாதி பேர் 50 வயது அளவில் உள்ளனர்.
முன்மொழியப்பட்ட சொத்து பணமாக்குதல் திட்டம் கூடுதல் வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2018 நிலவரப்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ .70,000 கோடி மதிப்புள்ள நிலமும், ரூ .3,760 கோடி மதிப்புள்ள கட்டிடங்களும் உள்ளன.