பட்ஜெட் 2019 : முன்னாள் ராணுவ வீரர்களை கதிகலங்க வைக்கும் ஓய்வூதிய மாற்றம்!

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 

By: Updated: July 4, 2019, 01:15:08 PM

Budget 2019 disability pension tax upsets army veterans : ராணுவ வீரர்களுக்கான மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கப்படுதல் தொடர்பாக நாளை பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய் கிழமை, ராணுவ தலைமை அலுவலகத்தின் விருப்பத்தின் பேரில் இது குறித்த கையொப்பமிடாத அறிக்கை ஒன்றை பொதுமக்கள் பார்வைக்காக வைத்தார் நிர்மலா சீதாராமன்.

நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் ஜூன் 24ம் தேதி இடப்பட்டு, நிதித்துறைக்கு கீழ் இயங்கி வரும் மத்திய நேரடி வரி வாரியம் ( Central Board of Direct Taxes (CBDT)) பின் வருமாறு குறிப்பிட்டிருந்தது.

அந்த அறிக்கையில், ராணுவ சேவையில் இருக்கும் போது, அந்த பணியின் காரணமாக உடல் ஊனமுற்றவர்களுக்கு மட்டுமே வரியற்ற ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், தனிப்பட்ட முறையில் தாக்குதலுக்கு ஆளாகியோ, விபத்துகளினாலோ உடல் உறுப்புகளை இழக்கும் பட்சத்தில், பெறப்படும் ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்யவும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன். அதில், உடல் ஊனமுற்றவர்களுக்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தை மனதில் கொண்டு, தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த ஓய்வூதியத்தை தவறாக பயன்படுத்திக் கொள்ளவும் சிலர் முயல்கிறார்கள் என்று கூறியுள்ளார். ராணுவ தரப்பு கூறுகையில், சேவையில் இல்லாத போது, விபத்தினால் ஊனமுற்று, பணியில் இருந்து வெளியேறியவர்களின் கருத்தினையும் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளது. பல ஆண்டுகளாக, விபத்தில் காயமடைபவர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படியான நிதி உதவியை மனதில் கொண்டு செயல்படுவோரும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது அந்த அறிக்கையில்.

இந்த கட்டுரையை முழுவதும் ஆங்கிலத்தில் படிக்க

இது போன்று செயல்படுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  அளிக்கப்படும் நிதி உதவி மட்டும் அவர்களின் இழப்பிற்கு போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அவர்களின் சேவை காலத்திலும், அதற்கு பின்பும் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் இந்த இடத்தில் ஏமாற்ற நினைப்பவர்களும் இருக்கின்றார்கள் என்று மற்றொருமுறை வலியுறுத்தியுள்ளது அந்த அறிக்கை.

இரு தரப்பிலான உடல் ஊனங்களுக்கு, ராணுவ வீரர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது இந்திய ராணுவம். தாக்குதலின் போது ஏற்படும் இழப்புகள் மற்றும் இதர நேரங்களில் ஏற்படும் இழப்புகள். இதில் புதிதாக, வேலையால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த நிதி அளிக்கப்படுகிறது. மன அழுத்தம் காரணமாக ராணுவ சேவைகளில் இருந்து வெளியேறும் போக்கினை ராணுவ வீரர்களின் ஆரோக்கியத்தோடு ஒப்பிட்டு மதிக்கும் வழக்கம் உலக நடைமுறையில் இருக்கும் ஒன்றாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Budget 2019 disability pension tax upsets army veterans

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X