நிதி மசோதா 2020-இல் முன்மொழியப்பட்ட வருமான வரிச் சட்டத் திருத்தம், இந்தியாவுக்கு வெளியே முதன்மையாக வேலைசெய்து தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கும் இந்தியர்களைப் பற்றி குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திருத்தத்தை பிப்ரவரி 1-ம் தேதி புரிந்துகொள்ளப்பட்டபடி, வெளிநாடுகளில் பணிபுரிகிறவர்கள், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் போன்ற நாடுகளில் வருமானவரி செலுத்தாத இந்தியர்களுக்கு இந்தியாவில் வருமானவரி விதிக்கப்படும் என்று கூறியது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது அரசின் வலுவான கருத்து வேறுபாட்டை பதிவுசெய்து கடிதம் எழுதினார். இது உழைப்பவர்களுக்கும் அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருபவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
நிதி அமைச்சகம் பிப்ரவரி 2-ம் தேதி ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியேறிய இந்தியர்களை நியாயமற்ற முறையில் குறிவைக்க மாட்டார் என்று உறுதியளிக்க முயன்றது.
தற்போதுள்ள சட்டம்
ஒரு தனிநபருக்கு இந்தியா வருமான வரி விதிக்கிறதா என்பதை இரண்டு அளவுருக்கள் தீர்மானிக்கின்றன. முதலாவது வசிப்பிடம். குடியுரிமை என்பது அமெரிக்காவில் இருப்பதைப் போலல்லாமல், இந்தியாவில், வசிப்பிடத்தில் ஒரு நபர் ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் உண்மையில் அந்த நாட்டில் வாழ வேண்டும்.
மற்றொரு அளவுரு வருமானத்தின் ஆதாரம் - வருமானம் உருவாக்கப்படும் நாடு ஆகும். இந்தியாவில் வசிக்கிற மற்றும் இந்தியாவில் வசிக்காத இந்திய குடிமகனை நடத்துவதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகனுக்கு, வருமான வரிச் சட்டம் அந்த நபரின் உலகளாவிய வருமானத்திற்கும் பொருந்தும். அதாவது, எந்தவொரு அதிகார வரம்பிலும் சம்பாதிக்கும் வருமானம் வரி விதிக்கப்படக்கூடிய வருமானத்தைக் கணக்கிடப் பயன்படுகிறது. அப்படி நாட்டில் வசிக்கிற இந்தியர் அவர்களுடைய உலகளாவிய எல்லா வருமானத்துக்கும் வரி செலுத்த வேண்டும்.
ஆனால், இந்தியாவில் வசிக்காத ஒரு இந்தியருக்கு இந்த வருமான வரிச் சட்டம் இந்தியாவுக்குள் இருந்து சம்பாதிக்கும் வருமானத்திற்கு மட்டுமே பொருந்தும். இதுபோன்று, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் வாழ்ந்தாலும், லண்டனில் அவர் வைத்திருக்கும் ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானத்தை ஈட்டினால், இந்தியாவுக்குள் அவர் சம்பாதிக்கும் மற்ற வருமானங்களுடனும், இந்த வாடகை வருமானமும் வரியில் வரும்.
இருப்பினும், ஒரு இந்திய குடிமகன் லண்டனில் தங்கி வேலை செய்தால் - அவர் இந்தியாவில் வசிக்காத இந்தியர் ஆவதால், அவர் அங்கிருந்து கூடுதலாக டெல்லியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் ஈட்டினால், இந்திய வருமான வரி சட்டம் அந்த டெல்லி வீட்டிலிருந்து வரும் வாடகை வருமானத்திற்கு மட்டுமே பொருந்தும்.
நாட்டில் வசிப்பவர்கள் அவர்களுடைய உலகளாவிய வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதற்கும், நாட்டில் வசிக்காதவர்கள் அவர்களுடைய இந்திய வருமானத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதற்கும் இடையிலான இந்த வேறுபாடு குழப்பத்தின் மையத்தில் உள்ளது.
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திருத்தம் என்ன?
ஐ.டி சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, ஒரு இந்திய குடிமகன் இந்தியாவில் "குடியிருப்பாளராக" இல்லாமல் தங்கக்கூடிய நாட்களின் எண்ணிக்கையை 182-ல் இருந்து 120 ஆக குறைக்கிறது. பட்ஜெட்டுக்கான மெமோராண்டம் இந்த விதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறியது: “தனிநபர்கள், உண்மையில் கணிசமான பொருளாதார நடவடிக்கைகளை இந்தியாவில் இருந்து, மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தை நிர்வகிக்கவும், இதனால் ஒரு குடியிருப்பாளராக நிரந்தரமாக இருக்கவும், அவர்களின் உலகளாவிய வருமானத்தை இந்தியாவில் அறிவிக்க தேவையில்லை.”
இரண்டாவது “வரி செலுத்துவோரின் சாதாரணமாக வசிக்காதவர்கள் வகையை பாதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இந்தியாவில் குறிப்பிட்ட நாட்களை விட அதிகமாக செலவழிப்பதால், ஒரு குடியிருப்பாளரின் இணக்கத் தேவையை ஒரு குடியிருப்பாளர் திடீரென எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த வகை நபர்கள் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளனர் என்று மெமோராண்டம் தெளிவுபடுத்தியுள்ளது.”
கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவுக்கு வெளியே தங்கியிருக்கும் ஒரு என்.ஆர்.ஐ யை இப்போது கற்பனை செய்து பாருங்கள். பின்னர் எட்டாவது ஆண்டில் 183 நாட்கள் ஒரு நீண்ட விடுமுறையை கழிக்கிறார். சாதாரணமாக வசிப்பவராக அல்லாத அத்தகைய நபருக்கு ஒரு குடியிருப்பாளராக வரி விதிக்கப்படுவதில்லை என்பதை வழக்கமாக வசிப்பவர் அல்லாத நிலை உறுதி செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்காத ஒருவராக ஒரு வழக்கமாக வசிப்பவர் அல்லாதவர் இருப்பார் என்று இந்த திருத்தம் கூறுகிறது. தற்போதுள்ள சட்டத்தின் கீழ், இது கடந்த 10 ஆண்டுகளில் ஒன்பதாவது திருத்தம் ஆகும்.
இதில், மூன்றாவது முன்மொழியப்பட்ட திருத்தம் தான் குழப்பத்தை உருவாக்கியது. இந்த திருத்தம்: “வேறு எந்த நாட்டிலும் அல்லது பிரதேசத்திலும் வரி விதிக்கப்படாத ஒரு இந்திய குடிமகன் இந்தியாவில் வசிப்பவராக கருதப்படுவார்” என்று கூறுகிறது.
இந்த திருத்தத்தில் என்ன பிரச்சினை?
இந்தத் திருத்தம் நாட்டில் வசிக்காதவருக்கு வசிப்பவராக கருதி வரி விதிக்க முயற்சிப்பதாகக் காணப்பட்டது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, நாட்டில் வசிப்பவர்கள் அவர்களுடைய முழு உலகளாவிய வருமானத்திற்கு வருமான வரி வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் அவர்களுடைய இந்திய வருமானத்துக்கு மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது.
இது பலருக்கும் அச்சத்துக்கு வழிவகுத்தது. ஏனெனில், தெளிவுபடுத்தல்கள் இல்லாத நிலையில், வரி இல்லாத அதிகார வரம்புகளில் பணிபுரியும் அனைத்து வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அந்த அதிகார வரம்புகளில் உள்ள அனைத்து வருமானங்களும் இப்போது இந்திய வருமான வரி விகிதத்தை ஈர்க்கும் என்று முடிவு செய்தனர். சாத்தியமான தொந்தரவுகளைத் தவிர, இந்தியாவில் மக்கள் அவர்களுடைய வீடுகளை விட்டு வரி விலக்கு இல்லாத அதிகார வரம்புகளில் பணியாற்றுவதற்கான முழு புள்ளியையும் இது குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.
இதை அரசு ஏன் முன்மொழிந்தது?
அனைத்து வரிகளையும் தவிர்ப்பதற்காக வசிப்பிட விதிமுறைகளில் விளையாடும் வரி ஏய்ப்பவர்களைப் பிடிப்பதை விட, நேர்மையான தொழிலாளர்களை குறிவைப்பதே அதன் நோக்கம் அல்ல என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நிலையற்ற நபர்களின் பிரச்சினை சில காலமாக வரி உலகத்தை தொந்தரவு செய்கிறது. ஒரு நபர் தனது விவகாரங்களை ஒரு பாணியில் எந்த நாட்டிலும் அல்லது அதிகார வரம்பிலும் ஒரு வருடத்தில் வரி விதிக்கக் கூடாது என்று ஏற்பாடு செய்வது முற்றிலும் சாத்தியமாகும்.
இந்த ஏற்பாடு பொதுவாக அதிக நிகர மதிப்புள்ள நபர்களால் (HNWI) பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் மீது எந்தவொரு நாட்டிற்கும் / அதிகார வரம்புக்கும் வரி செலுத்துவதைத் தவிர்க்க, எந்தவொரு நாட்டிலும் ஒரு நபர் வரி விதிக்க முடியாத ஒரு சூழ்நிலையை வரிச் சட்டங்கள் ஊக்குவிக்கக் கூடாது” என்று பட்ஜெட்டுக்கான மெமோராண்டம் கூறியுள்ளது. தெளிவுபடுத்துதலைத் தொடர்ந்து, அரசாங்கம் இப்போது முன்மொழியப்பட்ட திருத்தத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.