Mehr Gill
இந்திய மருந்து விலை ஒழுங்குபடுத்துதல், தேசிய மருந்து விலை ஆணையம் (என்.பி.பி.ஏ) ஆகியவை ரேபிஸ் தடுப்பு தடுப்பூசிகள் உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுடன் கலந்துரையாடி, இந்தியாவின் சில பகுதிகளில் ரேபிஸ் எதிர்ப்பு மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்ட பின்னர், அந்த தடுப்பூசிகளை வழங்குவதை சீராக்க கேட்டுக் கொண்டுள்ளது.
ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி பற்றாக்குறை என்பது இந்தியாவில் புதியதல்ல. ஆகஸ்ட் 13ம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றம், தேசிய தலைநகரில் தடுப்பூசியை போதுமான அளவு சேமித்து வைக்குமாறு மத்திய, மாநில அரசு மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. அரசு மருத்துவமனைகள் தடுப்பூசிகளை போதுமான அளவு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ரேபிஸின் பாதிப்பு
உலகளவில் 99% வழக்குகளில், பாதிக்கப்பட்ட நாய் கடிப்பதால் இந்த தொற்று பரவுகிறது என்று தெரிய வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளி விவரங்களின்படி, ரேபிஸின் உலகளாவிய பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது, ஆசியளவில் இந்த நோயால் இந்தியாவில் 59.9% இறப்புகள் ஏற்படுகிறது, இது உலகளவில் 35 சதவிகிதமாக உள்ளது.
ரேபிஸுடன் தொடர்புடைய இறப்புகளில் தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் நிகழ்கிறது. இவர்களில் 80% கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள். உலக சுகாதார அமைப்பான WHO கூறுகையில், Post-exposure prophylaxis (PEP)ன் விலை ஆசியாவில் மிகவும் உயர்ந்தது என்கிறது. இந்த PEP என்பது ரேபிஸ் ஏற்பட்டவுடன் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தவிர, அடுத்தடுத்த நாட்களில் ரேபிஸ் தாக்கம் அதிகரிப்பதையும் இது தடுக்க உதவுகிறது.
ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் நாயினால் ஏற்படும் ரேபிஸ் ஒழிக்கப்பட்டுவிட்டதாக WHO தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் பல பசிபிக் தீவு நாடுகளும் நாயினால் ஏற்படும் ரேபிஸிலிருந்து விடுபட்டுள்ளன.
இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை
குஜராத்தின் அங்கலேஷ்வரைத் தளமாகக் கொண்ட சிரோன் பெஹ்ரிங் தடுப்பூசிகள் பிரைவேட் லிமிடெட், உலகளவில் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும், இது உலக சுகாதார அமைப்பின் முன் தகுதி வாய்ந்த ஆலையில் ஆண்டுதோறும் 15 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. சிரோன் சமீபத்தில் கிளாக்சோஸ்மித்க்லைன் (ஜி.எஸ்.கே) எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.
100 மில்லியனுக்கும் அதிகமான நாய்கள் கொண்ட இந்தியாவுக்கு, ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி 35 மில்லியன் டோஸ் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் கணிசமான பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்தியா தற்போது சுமார் 15 மில்லியன் டோஸ் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில், 2018 மற்றும் 2019 க்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட நாய் கடித்த வழக்குகளின் எண்ணிக்கை இருமடங்காக இருந்தபோதும், பஞ்ச்குலாவின் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இல்லாமல் போய்விட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில், டெல்லி அரசாங்கத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான லோக் நாயக் மருத்துவமனை ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் இல்லாமல் போனது. மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 250 க்கும் மேற்பட்ட நாய் கடித்த வழக்குகளை பார்க்க முடிகிறது.
டெல்லியின் ஜிடிபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சுனில் குமார் முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய போது, “தடுப்பூசி சந்தையில் எளிதில் கிடைக்காது. விற்பனையாளர்கள் கோரிக்கையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நாங்கள் நோயாளிகளை திருப்பி தான் அனுப்ப வேண்டும். டெல்லி அரசாங்கத்தின் மத்திய கொள்முதல் முகமை (சிபிஏ)யில் நாங்கள் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளோம், ஆனால் அது கூட மருந்து விநியோகத்தைப் பெறவில்லை." என்றார்.
டெல்லியின் மூன்று மாநகராட்சிகளில் 2018 ஆம் ஆண்டில் 17,000 க்கும் மேற்பட்ட நாய் கடித்த வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய டெல்லி அரசின் சுகாதார சேவைகள் (டிஜிஹெச்எஸ்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் அசோக் ராணா, "ஒரே ஒரு உற்பத்தியாளரால் மட்டுமே ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. தற்போது அவை மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே தடுப்பூசிகளை வழங்குகின்றன. அதிகப்படியான தேவை காரணமாக, தடுப்பூசிகளின் விநியோகத்தை பூர்த்தி செய்ய முடியாது." என்றார்.
ஒரு ஆபத்தான நோய்
ரேபிஸுக்கு என்று எந்த சிகிச்சையும் இல்லை, இது ஒரு வைரஸ் நோயாகும், மேலும் இது ஒரு வெறித்தனமான விலங்கின் உமிழ்நீரில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. மருத்துவ ஆரம்பத்தின் போது இது ஆபத்தானது.
காய்ச்சல், வலி, விவரிக்கப்படாத மற்றும் அசாதாரண வலி, காயமடைந்த இடத்தில் எரியும் உணர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் நரம்புகள் வழியாக மத்திய நரம்பு மண்டலத்திற்கு பரவுகிறது, இறுதியில் மூளையின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது, பின்னர் மரணம் ஏற்படுகிறது.
அப்படியிருந்தும், இது உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்போது, இது 100% தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோயாகும்.