துபாயின் புர்ஜ் கலீஃபா வியாழக்கிழமை (ஜனவரி 5) 14 வயதை எட்டியது. உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான Emaar Properties ஆல் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒரு சொகுசு ஹோட்டல், சொகுசு குடியிருப்புகள், உணவகங்கள் மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன.
உலகின் மிக உயரமான விளம்பரப் பலகையும் இதுதான்.
ஒரு புதிய தயாரிப்பு அல்லது திரைப்படத்தை வெளியிடுவதற்கோ அல்லது முக்கியமான செய்தியைப் பகிர்வதற்கோ, இந்த வானளாவிய கட்டிடத்தின் வெளிப்புறங்கள் ஒரு மாபெரும் விளம்பர தளமாக செயல்பட்டு துபாய் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.
புர்ஜ் கலீஃபா எப்படி உலகின் மிக உயரமான விளம்பரத் தளமாக மாறியது, மேலும் அதில் இடம்பெறுவதற்கு ஒருவர் செலுத்த வேண்டிய தொகை பற்றிய தகவல்கள் இங்கே உள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட மிக உயரமான கட்டடம்
829.8 மீ உயரத்தில் – ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட 11.5 குதுப் மினார்களுக்குச் சமமான புர்ஜ் கலிஃபா- இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட மிக உயரமான கட்டிடமாகும்.
அதன் 160+ மாடிகள், 57 லிஃப்ட் வசதிகளுடன் வானளாவிய கட்டிடம் தைபே 101 (508.2 மீ உயரம்) ஐ முந்தி முதலிடத்தை பிடித்தது.
2004 இல் இதன் கட்டுமான பணிகள் தொடங்கியது மற்றும் 2009 இல் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, ஜனவரி 4, 2010 அன்று புர்ஜ் கலீஃபா அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
இது துபாயின் மையத்தில் பாரிய கலப்பு-பயன்பாட்டு வளர்ச்சியின் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடம், எண்ணெய் அடிப்படையிலான பொருளாதாரத்திலிருந்து வணிகம், சுற்றுலா மற்றும் ஆடம்பரத்தை மையமாகக் கொண்ட ஒன்றை பல்வகைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி.
முதலில் புர்ஜ் துபாய் ("துபாய் டவர்") என்று பெயரிடப்பட்ட இது, Emaar எதிர்கொண்ட நிதி சிக்கல்களுக்கு மத்தியில் திட்டத்திற்கு நிதியளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அப்போதைய ஜனாதிபதி ஷேக் கலீஃபாவின் நினைவாக புர்ஜ் கலீஃபா என மறுபெயரிடப்பட்டது.
உலகின் மிக உயரமான விளம்பர பலகை
ஆரம்பத்தில் இருந்தே, புர்ஜ் கலீஃபா ஒரு பிரீமியம் விளம்பர தளமாக கற்பனை செய்யப்பட்டது. உள்ளே லிஃப்ட் மற்றும் பொதுவான பகுதிகளுக்குள் இருந்து, பாரிய கட்டிடத்திற்கு வெளியே நிச்சயமாக, கட்டிடத்தில் ஒருவர் விளம்பரங்களை இயக்கக்கூடிய பல இடங்களை இது வழங்குகிறது.
புர்ஜ் கலீஃபாவின் முகப்பு, உலகின் மிகவும் பிரத்தியேகமான மற்றும் விலையுயர்ந்த விளம்பர இடங்களில் ஒன்று.
அரேபியன் பிசினஸ் படி, முகப்பில் ஒரு விளம்பரம், திரைப்பட டீஸர் அல்லது செய்தியை வைப்பதற்கான செலவு, வார நாட்களில் மூன்று நிமிடங்களுக்கு தோராயமாக 250,000 திர்ஹாம்ஸில் (அல்லது சுமார் 70,000 டாலர்) தொடங்குகிறது. மேலும் வார இறுதி நாட்களில் இது 350,000 திர்ஹாம் (தோராயமாக 100,000 டாலர்) வரை அடையலாம்.
குறிப்பிட்ட தேதி, நேரம், காலம் மற்றும் விளம்பர வகையைப் பொறுத்து இந்த விலைகள் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
சரியான விளம்பர விலைகள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை, மேலும் ஒவ்வொரு விளம்பரத்துக்கும் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பல ஆண்டுகளாக, தி லயன் கிங் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படங்களை விளம்பரப்படுத்த Noon.com, Cartier, Huawei மற்றும் Walt Disney போன்ற நிறுவனங்களுக்கான ஹை புரொஃபைல் பிரச்சாரங்களுக்காக Burj Khalifa பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் எவ்வாறு வேலை செய்கின்றன?
புர்ஜ் கலீஃபா உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் டிஸ்பிளே ஆகும், அதன் தெற்கு முகப்பில் 1.2 மில்லியன் பிக்சல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது 2014 இல் இன்ஸ்டால் செய்யப்பட்டு, 2015 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முதலில் காட்சிபடுத்தப்பட்டது. இந்த எல்.ஈ.டி. ஒன்று சேர்ந்து புர்ஜ் கலீஃபாவை மற்ற எலக்ட்ரானிக் ஸ்கிரீனை போல செயல்பட அனுமதிக்கின்றன.
விஷூவல்ஸ் ஒரு “main brain” சர்வருக்கு அனுப்பப்படுகின்றன, இது ஃபைபர் ஆப்டிக்ஸ் மற்றும் ஸ்மாலர் பிரெயின்ஸ் நெட்வொர்க் மூலம், முகப்பில் உள்ள சிறிய LED விளக்குகளை ஒரு குறிப்பிட்ட நிறத்தைக் காட்டச் சொல்கிறது – தொலைவில் இருந்து பார்க்கும் போது இந்த 1.2 மில்லியன் LED கள் காட்சியின் ஒரு கூட்டுப் படத்தை உருவாக்கி, முகப்பை ஒரு திரையாக மாற்றுகிறது.
அப்படியானால் மின் கட்டணம்?
சொல்லவே தேவையில்லை. விளக்குகள் பொதுவாக வெறும் 40 பர்செண்ட் பிரைட்னெஸில் அமைக்கப்பட்டிருந்தாலும், மொத்த திறனில், டிஸ்ப்ளே ஒரு மணி நேரத்திற்கு 790 கிலோவாட் சக்தியைப் பயன்படுத்துகிறது.
அதாவது 3-ஸ்டார் ஸ்பிலிட் ஏர் கண்டிஷனரின் ஆற்றல் நுகர்வை போல தோராயமாக 720 மடங்கு.
Read in English: How the Burj Khalifa became the world’s tallest billboard
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.