புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தம் சட்டம் மூன்று அண்டை நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையைப் பெறுவதை எளிதாக்குகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினரின் குடியுரிமை மற்றும் உரிமைகளுக்கான பற்றிய விவாதங்களும் தற்போது எழுந்துள்ளன ?
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
இந்த கட்டுரையில் பாகிஸ்தானைப் பாப்போம் :
பாக்கிஸ்தானின் அரசியலமைப்பு முன்னுரை இந்திய அரசியலமைப்பு முன்னுரையுடன் எவ்வாறு ஒப்பிடுகிறது?
அரசியலமைப்பு முன்னுரையில் இந்தியா ஒரு "இறையாண்மை, சமூகவுடைமை , மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு" என்று அறிவிக்கிறது, "சமூகவுடைமை " மற்றும் "மதச்சார்பற்ற" என்ற சொற்கள் 42 வது திருத்தம், 1976 இல் சேர்க்கப்பட்டுள்ளன.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
மறுபுறம், பல உலகில் உள்ள 60 அரசியலமைப்புகள் ஜெர்மனி, பிரேசில், கிரீஸ், அயர்லாந்து போன்ற உலகில் உள்ள 60 அரசியலமைப்புகளில் ஏதோவது ஒரு இடத்திலாவது 'கடவுள்' என்று எழுதப்படிருக்கிறது.
பாகிஸ்தானின் அரசியலமைப்பும்“அல்லாஹ்வின் பெயரால்,மிகவும் நன்மை பயக்கும் - இரக்கமுள்ளவர்” என்று தொடங்குகிறது. இந்த பிரபஞ்சம் கடவுளின் இறையாண்மையை ஒப்புக்கொள்கிறது, என்பது பாகிஸ்தான் அரசியலமைப்பின் முதல் வாசகம் .
பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டசபையில் மார்ச் 12, 1949ம் ஆண்டு லியாகத் அலிகான் பாகிஸ்தான் அரசியலமைப்பின் முன்னுரை தீர்மானத்தை நகர்த்தியபோது, இஸ்லாம் அல்லாத உறுப்பினர்கள் எதிர்த்தனர். ஸ்ரீஸ் சந்திர சட்டோபாத்யா, “அரசு நிர்வாகத்தில் மதத்திற்கு இடமில்லை… அரசு மதம் ஒரு ஆபத்தான கொள்கை” என்றார்.
மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கிறதா?
ஒரு இஸ்லாமிய நாடு என்றாலும், பாகிஸ்தானில் குடியுரிமைக்கான எந்த மத நிர்பந்தமும் இல்லை. அதன் குடியுரிமைச் சட்டம், 1951 இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தைப் போன்றது. சில விஷயங்களில் மிகவும் தாராளமாகக் கருதப்படலாம்.
ஜனவரி 1, 1952 க்கு முன்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த எந்தவொரு நபரும் ஒரு குடிமகன் என்று பிரிவு 6 குறிப்பிடுகிறது.
பிரிவு 3, மார்ச் 31, 1973 அன்று பாகிஸ்தானில் சேர்க்கப்பட்ட பிரதேசங்களில் பிறந்த எவருக்கும் (அல்லது அவருடைய பெற்றோர் (அல்லது) அவருடைய தாத்தா பாட்டி - பாகிஸ்தான் பிரதேசங்களில் பிறந்திருந்தால்) இந்தச் சட்டம் (ஏப்ரல் 13, 1951) குடியுரிமை அளிக்கிறது.
ஏப்ரல் 13, 1951 க்கு முன்னர், ஆசிய துணைக்கண்டத்தில் இருந்து எந்தவொரு பிரதேசத்தில் இருந்தும் நிரந்தரமாய் பாகிஸ்தானிற்குள் வாழ வேண்டும் என்று குடியேறிய எந்தவொரு நபருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கிறது (இந்தியாவில் இந்த கட்-ஆப் தேதி ஜூலை 19, 1948, அசாமிற்கு மட்டும் - மார்ச் 25,1971 ஆகும்)
பாகிஸ்தானில் குடியுரிமை சட்டம் பிரிவு 7-ல், மார்ச் 1, 1947 க்குப் பிறகு இந்தியாவுக்கு குடிபெயர்ந்த ஒருவர் பாக்கிஸ்தானில் மீண்டும் குடிமகனாக இருக்க மாட்டார் (இந்தியாவின் சட்டத்தைப் போலவே). பாகிஸ்தான் குடியுரிமை சட்ட பிரிவு 4, இச்சட்டம் நடைமுறைபடுத்திய பிறகு பாகிஸ்தானில் பிறந்த ஒவ்வொரு நபரும் பிறப்பால் குடிமகன் என்று குறிப்பிடுகிறது.
இந்தியாவில் 1986ம் ஆண்டில் சட்ட திருத்தங்களுக்குப பிறகு, இந்தியாவில் பிறப்பால் குடிமகனாக கருதப்படவேண்டும் என்றால் ஒரு பெற்றோர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 2003ம ஆண்டு சட்ட திருத்தத்திற்குப பிறகு பெற்றோர் இருவரும் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் (அல்லது) ஒருவர் குடிமகனாக இருக்க வேண்டும், மற்றவர் சட்டவிரோதமாக குடியேறியவராக இருக்கக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் சட்டத்தின் 5 வது பிரிவு,வம்சாவளி குடியுரிமை பற்றி பேசுகிறது.
பாக்கிஸ்தானுடனான காஷ்மீர் உறவு இறுதியாக தீர்மானிக்கப்படும் வரை பாகிஸ்தான் நாட்டிற்குள் குடியேறிய ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் குடிமக்களாக கருதப்படுகிறார்கள்.
பாகிஸ்தானும் இந்தியாவும் மத சுதந்திரத்தை வரையறுக்கும் விதத்தில் வேறுபாடுகள் உள்ளனவா ?
இந்திய அரசியலமைப்பின் முன்னுரையைப் போலல்லாமல், பாக்கிஸ்தானின் அரசியலமைப்பு முன்னுரையில் "சிறுபான்மையினர் சுதந்திரமாகப் பேசுவதற்கும், மத சுதந்திரத்தை கடைப்பிடிப்பதற்கும், அவர்களின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும்,சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வர்க்கங்களின் நியாயமான நலன்களைப் பாதுகாக்க போதுமான எற்பாடுகள் செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நியாமான நலன்கள் என்ற வார்த்தையில் அதிக குழப்பங்கள் உள்ளது என்பதும் நிதர்சனமான உண்மை.
பாகிஸ்தானில் மதசுதந்திரம் அந்நாட்டு குடிமக்களுக்கு மட்டும். இந்தியாவில் மதசுதந்திரம் இந்திய குடிமக்களைத தாண்டி, இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் வளங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தியாவில் வெளிநாட்டு மிஷனரிகளுக்கு கிறிஸ்தவத்தை பரப்ப உரிமை உண்டு.
இந்தியாவில் போலல்லாமல், பாகிஸ்தான் அரசியலமைப்பில் பத்திரிகை சுதந்திரம் பேச்சு சுதந்திரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சுதந்திரம் “இஸ்லாத்தின் மகிமைக்கு” உட்பட்டது. இந்த கட்டுப்பாட்டின் காரணமாக, பாகிஸ்தானின் பிற்போக்குத்தனமான நிந்தனை சட்டம் கட்டாய மரண தண்டனை மரண தண்டனை அளிக்கின்றது. உண்மையில் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு கூட இந்த நிந்தனை சட்டம் முரணானது. இந்த சட்டத்தின் பரவலான துஷ்பிரயோகம், பேச்சு சுதந்திரத்தில் பாகிஸ்தானின் உறுதிப்பாட்டைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
சிறுபான்மையினரின் ‘நியாயமான நலன்களை’ பாதுகாக்க பாகிஸ்தான் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
பாகிஸ்தான் அரசியலமிப்பு பிரிவு 36ன் கீழ் , சிறுபான்மையினரின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை அரசு காத்திடும் வகையில், மத்திய மற்றும் மாகாண அரசு சேவைகளில் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தவேண்டும் . மத சிறுபான்மையினர் அரசியலில் பாகுபாட்டை எதிர்கொள்வதால், பாகிஸ்தான் அரசியலமைப்பு அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கிறது. தேசிய சட்டமன்றத்தில், அவர்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பலுசிஸ்தானில் - மத சிறுபான்மையினர் மக்கள் தொகை 1.25% மட்டுமே என்றாலும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு 4.62%; பஞ்சாபில் - அவர்களின் எண்ணிக்கை 2.79%, இடஒதுக்கீடு 2.16%; சிந்த் மாகாணத்தில் - சிறுபான்மையினர் மக்கள் தொகை 8.69%, அவைகளுக்கான இட ஒதுக்கீடு 5.36%, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் - அவர்களின் எண்ணிக்கை 2.46% , இட ஒதுக்கீடு 0.56% மட்டுமே.
1951 ஆம் ஆண்டில் மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தான்) இந்துக்கள், பகிர்வுக்கு பிந்தைய சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பின்னர், வெறும் 3.44 சதவீதத்தினர். 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இன்றைய பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத மக்கள் தொகை 2.83 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது 1972 ல் 3.25 சதவீதமாகவும், 1981 ல் 3.30 சதவீதமாகவும், 1998 ல் 3.70 சதவீதமாகவும் உயர்ந்தது.
பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு தனிப்பட்ட சட்டங்கள் உள்ளதா?
அரச மதத்திற்கு முரணாக இருக்கும் எந்த சட்டங்களும் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று விதிகள் இருந்தாலும், பிரிவு 227 (3)ன் கீழ், சிறுபான்மையினரின் தனிப்பட்ட சட்டத்தை இந்த விதியிலிருந்து விலக்குகிறது.
இந்தியாவில், அரசியலமைப்பிற்கு முரணாக போகும் எந்த தனி சட்டமும் வெற்றிடமாக அறிவிக்கப்படும். இவ்வாறாகத் தான் முத்தலாக் 2017 இல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
2016 ம் ஆண்டில், பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான இந்துக்களைக் கொண்ட சிந்து மாகாணம், கட்டாய மதமாற்றங்களை தடைசெய்து சட்டத்தை நிறைவேற்றியது.
பஞ்சாப் சட்டமன்றம் சீக்கிய ஆனந்த் திருமணச் சட்டத்தை 2018ல் இயற்றியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.