Advertisment

வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் அடிப்படையில் என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்கு போட முடியா?

இடைப்பட்ட அளவாக (1 கிலோ முதல் 20 கிலோ) வைத்திருப்பவர்களுக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் வரை அபாரதமும் வழங்கப்படும்.

author-image
WebDesk
New Update
Can a person be booked under NDPS Act based on WhatsApp messages

Mohamed Thaver , Srinath Rao

Advertisment

Can a person be booked under NDPS Act based on WhatsApp messages :  ரியா சக்ரோபர்த்தியின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆணையம் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரதா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985 (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS) 1985), பிரிவு 8-ன் படி, கொகோ தாவரங்களை வளர்ப்பது, அதில் ஒரு பகுதியை வைத்திருப்பது, ஓப்பியம் பாப்பி வளர்ப்பது விவசாயம் செய்வது, கஞ்சா செடிகளை வளர்ப்பது, உருவாக்குவது, வைத்திருப்பது, விற்பனை செய்வது, வாங்குவது, இடம் மாற்றுவது, பயன்படுத்துவது, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வது, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது, இந்தியாவிற்கு இப்பொருட்களை இறக்குமதி செய்வது, அல்லது ஏற்றுமதி செய்வது (அறிவியல் மற்றும் மருத்துவ பயன்பாடுகள் தவிர்த்து) சட்டப்படி குற்றமாகும். இதனை மீறும் எந்த நபர்கள் மீதும் நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985-ன் படி வழக்கு பதிவு செய்யலாம்.

நார்கோடிக் மருந்துகள் மற்றும் உளச்சார்புள்ள பொருட்கள் சட்டம், 1985 வழ்க்குகளில், கையில் போதைப்பொருட்கள் வைத்திருப்பது அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தினை வைத்திருப்பது போன்ற காரணங்களுக்காகவும், பயன்பாட்டு நிகழ்வில் வரும் போது, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் மற்றும் சோதனை முடிவுகள் இந்த வழக்குகளில் ஆதாரங்களாக பயன்படுத்தப்படுகிறது.

ரியாவின் இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில், என்.டி.பி.எஸ். சட்டம், பிரிவு 27(ஏ)-வின் படி சட்டத்திற்கு புறம்பாக இந்த நடவடிக்கைகளுக்கு நிதி அளித்தல் குற்றமாகிறது என்று என்.சி.பி. அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இதனால் போதைப் பொருட்கள் பறிமுதல் மற்றும் பண பறிமுதல் தேவையற்றதாகிறது என்றும் கூறினார். ரியா, போதைப் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு தன்னுடைய க்ரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்திய விபரங்கள் என்.சி.பியிடம் உள்ளது. அந்த பணத்தொகை ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்றும் என்.சி.பி. குறிப்பிட்டுள்ளது.

அவருடைய வழக்கறிஞர் சதீஸ் மந்தேஷிண்டே, “போதைப் பொருட்களை வாங்க பயன்படுத்தப்பட்ட இந்த பணம், ரியாவை போதை பொருள் விற்பவராக மாற்றாது. சில காலம் போதைப் பொருள் பயன்படுத்தும் நபர்களுக்கும், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று கூறியுள்ளார். ரியாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த உள்ளூர் நீதிமன்றம், பிரிவு 27 (ஏ)வின் படி, குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்கள் தேவையில்லை என்று கூறியுள்ளது.

To read this article in English: Explained: Can a person be booked under NDPS Act based on WhatsApp messages? 

 

நுகர்வு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வழக்குகளும் வெவ்வேறானவையா?

சட்ட அமலாக்க அதிகாரிகளின் அறிவிப்புப் படி மூன்று வகையான வழக்குகள் கையாளப்படுகிறது. மிகவும் குறைவான அளவு போதைப் பொருட்கள் வைத்திருப்பது, குறிப்பிட்ட அளாவு வைத்திருப்பது மற்றும் வணிக பயன்பாட்டிற்காக வைத்திருப்பது என மூன்றாக மத்திய அரசால் கெஜட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெவ்வேறு போதைப் பொருட்களின் வெவ்வேறு அளவுகள் இந்த மூன்று பிரிவுகளில் வரும். அவற்றிற்கான தண்டனையும் வேறாக இருக்கும். கஞ்சா போன்ற பொருட்களுக்கு, சிறிய அளவு (ஒரு கிலோ வரை), வைத்திருப்பது கடுமையான தண்டனையையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இடைப்பட்ட அளவாக (1 கிலோ முதல் 20 கிலோ) வைத்திருப்பவர்களுக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் வரை அபாரதமும் வழங்கப்படும். அதே போன்று வணிக நோக்கத்திற்காக (20 கிலோவிற்கு மேல்) வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக 20 ஆண்டுகள் வரை தண்டனைகள் வழங்கப்படும். 2 லட்சம் வரை அபராதம் அவர்களுக்கு விதிக்கப்படும். தீர்ப்பில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக நீதிமன்றம் ரூ .2,00,000 க்கு மேல் அபராதம் விதிக்கலாம்.

சிறிய அளவிலான போதைப் பொருட்கள் வைத்திருப்பவர் வழக்குகளில் இருந்து தப்ப முடியுமா?

ஆம், என்.டி.பி.எஸ். சட்டம் 64(ஏ) சிகிச்சைக்கு தயாராக விரும்பும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சிறிய அளவில் போதைப் பொருட்கள் அல்லது சைக்கோட்ராபிக் பொருட்கள் வைத்த குற்றத்திற்காக பிடிக்கப்படும் போதைப் பொருளுக்கு அடிமையானவர், மருத்துவமனை அல்லது, அரசு நிர்வகிக்கும் மையங்கள் அல்லது உள்ளூர் நபர்களின் உதவியுடன் அதில் இருந்து விடுபட முயன்றால் வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களை சிறிய அளவிலான போதை மருந்துகள் அல்லது சைக்கோட்ராபிக் பொருட்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக வேறு எந்த பிரிவின் கீழும் வழக்குத் தொடரப்படாது. ஆனால் டி-அடிக்சன் சிகிச்சையை முழுமையாக பெறாமல் இருக்கும் பட்சத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ஒரு நபர் போதைப்பொருட்களுடன் பிடிப்பட்டால், அவர் போதைக்கு அடிமையாவதில் இருந்து மீள சிகிச்சை பெறுவதன் மூலம் வழக்குகளில் இருந்து விடுபட முடியும்.

ஃபர்தீன் கான் 2001ம் ஆண்டில் குறைந்த அளவு போதைப் பொருட்களை வைத்திருந்ததிற்காகவும் பயன்படுத்தியதற்காகவும் குற்றம் சுமத்தப்பட்டார். ஆனால் கெ.இ.எம் மருத்துவமனையில் மூன்று நீண்ட வாரங்களுக்கு டி-அடிக்சன் சிகிச்சை பெற்றதால் அவ்வழக்கில் இருந்து தப்பித்துக் கொண்டார். ஆனாலும் வழக்குத் தொடுக்கும் நிறுவனத்தால் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டவுடன் மட்டுமே இந்த விலக்கினை பெற முடியும் என்று என்.சி.பி. அதிகாரி ஒருவர் கூறுகிறார். ஆனால் இது விசாரணையில் எவ்வித மாற்றத்தையும் விளைவிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ரியா சக்ரபோர்த்தி மீது தொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு வழக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ரியாவுக்கு எதிரான என்.சி.பியின் முதல் எஃப்.ஐ.ஆர் (15/20) அமலாக்க இயக்குநரகம், என்.சி.பிக்கு வழங்கிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அடிப்படையாகக் கொண்டது. இதில், “ஒரு முறை எம்.டி.எம்.ஏவை முயற்சித்தேன்” மற்றும் “கஞ்சா அடித்தேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. . இந்த வழக்கில், ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் தவிர, மேலும் ஐந்து பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது ரியாவின் சாட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பணம் அல்லது போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை.

தன்னுடைய இருபது ஆண்டு என்.டி.பி.எஸ். வழக்குகள் தொடர்பான வாழ்வில் போதைப் பொருட்கள் பறிமுதல் இல்லாமல் போடப்பட்ட ஒரே வழக்கு ஒன்று தான் இருக்கிறது என்கிறார் வழக்கறிஞர் ஒருவர். அதிலும் கூட போதைப் பொருட்களை வாங்க வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. என்.சி.பி. அதிகாரிகள், ரியா மீது இந்த புகாரில் வழக்கு தொடர்மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு என்.சி.பி. யால் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது எஃப்.ஐ.ஆரின் (16/20), கீழ் இதில் ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் 590 கிராம் ஹாஷிஷ், 0.64 கிராம் எல்.எஸ்.டி தாள்கள், 304 கிராம் கஞ்சா (இறக்குமதி செய்யப்பட்ட கஞ்சா ஜாய்ண்ட் மற்றும் கேப்சூல்கள் உட்பட),ரூ. 1,85,200 பணம் மற்றும் 5000 இந்தோனேசிய ரூபியாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இது வணிக அளவின் கீழ் வருகிறது. "மும்பையில், குறிப்பாக பாலிவுட்டில் போதைப்பொருட்களின் கோட்டையை தகர்க்க வேண்டும்" என்று உள்ளூர் நீதிமன்றத்தில் என்சிபி கூறியது. இந்த வழக்கில் ரியா மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்ட காலத்திலிருந்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசம் பெற்றிருக்கிறது.

வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் / மெசேஜ்கள் போன்ற தகவல்தொடர்புகள், ஒரு நபர் போதைப் பொருட்கள் வாங்குவது, விற்பது, நுகர்வு பற்றி பேசுவதை பதிவு செய்தல் போன்றவையை ஆதாரமாக பயன்படுத்த முடியுமா?

ஆதாரங்களுடன் உரையாடலை உறுதிப்படுத்தினால் அதனை இந்த வழக்கில் பயன்படுத்தலாம். உதாராணத்திற்கு, ஒருவர் போதைப் பொருளை ஆர்டர் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அந்த பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் ஆர்டர் செய்திருக்கலாம். ஆனால் இறுதி நிமிடத்தில் முடிவுகளை மாற்றி இருக்கலாம். அதனால் அவரிடம் போதைப் பொருட்கள் இல்லாமல் போகலாம். ஒருவர் போதைப் பொருள் வைத்திருப்பதை மற்ற நபர்களிடம் பெருமைக்காக தெரிவித்திருக்கலாம். சில நேரங்களில் சில சாதாரண குற்றங்களை செய்திருக்க்கும் நபர்கள் கொலை செய்ததாக பெருமையாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அந்த கொலையில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். சாட்களுடன் ஆதாரங்கள் நிரூபிக்கப்படாவிட்டால், போதைப் பொருட்களின் பயன்பாட்டை நிரூபிக்க இவை போதுமானதாக இருக்காது என்று என்.டி.பி.எஸ். வழக்கறிஞர் தாரக் சையத் அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

வாட்ஸ்ஆப் பேச்சுகள் குறித்து அறிக்கையில் இடம் பெற்று ஆதாரம் கேட்டால் என்ன செய்வது?

காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட அறிக்கைகளுக்கு எதிராக, தொழில்நுட்ப ரீதியாக "காவல்துறை அதிகாரிகள்" என்று கருதப்படாத என்.சி.பி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டவை, எனவே பொதுமக்கள் என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 67 (ஏ) இன் கீழ் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவார்கள். எனவே ரியாவும் மற்றவர்களும் என்.சி.பிக்கு அளித்த அறிக்கைகள் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளத்தக்கவை.

ஆனால் என்.சி.பி. அதிகாரிகளை காவல்துறையினராக கருதாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. மேலும் என்.சி.பி நிறுவனம் முன் அளித்த ஒப்புதல் வாக்குமூல அறிக்கைகளை மட்டுமே நம்பியிருந்தால், அதைப் பாதுகாக்க முடியும். சக்ரவர்த்தி உட்பட பல நபர்கள் ஏற்கனவே என்.சி.பிக்கு அளித்த அறிக்கைகளை "வற்புறுத்தலின் கீழ்" செய்ததாகக் கூறி திரும்பப் பெற்றுள்ளனர்.

தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் வழக்கு என்ன?

என்சிபி இதுவரை கூறியவற்றின் அடிப்படையில், அவர்கள் முக்கியமாக ரியா மற்றும் ஜெயா சஹாவின் தொலைபேசிகளில் காணப்படும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மற்றும் காவல்துறை முன் அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க அவர்கள் அளிக்க இருக்கும் அறிக்கையை பொறுத்து தான் அமையும். என்.சி.பி. எவ்வாறாயினும், ஆதாரங்களின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமானதாகக் கூறப்படுவது பயன்படுத்தியது தான். குற்றப்பத்திரிகையின் போது மறுவாழ்வு பெற தயாராக இருப்பதாக அவர்கள் கூறினால் இந்த வழக்குகளில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rakul Preet Singh Deepika Padukone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment