tragedies in the mountains : உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில், நான்கு வெவ்வேறு இடங்களில் மலையேறுதல் மற்றும் மலையேற்றப் பயணங்களில் ஈடுபட்ட மலையேற்ற வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர். இது இந்த சாகச விளையாட்டின் ஆபத்தான தன்மை மற்றும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்புகள் குறித்து மீண்டும் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. சிறந்த பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றினால், இந்த விபத்துகளைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்த மலையேற்றங்களில் என்ன தவறு நடந்தது மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்க என்ன செய்திருக்க முடியும் என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு.
2030-ல் க்ளீன் எனெர்ஜி; 2070-ல் நெட் ஜீரோ கிளாஸ்கோ மாநாட்டில் மோடி பேசியது என்ன?
லம்காகா பாஸ் மலையேற்றத்தின் போது நிகழ்ந்தது என்ன?
உத்தரகாண்டின் ஹார்ஷில் பகுதியில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சிட்குல் பகுதிக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த 11 இளைஞர்கள் மலையேற்றம் சென்ற போது 7 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பேரை காணவில்லை.
உத்தரகாசியின் எஸ்.பி. மணிகாந்த் மிஸ்ரா, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டத்தில் உள்ள பிழைகள் என்ன கண்டறிந்தோம் என்று கூறினார். மலையேற்றக் குழுவுடன் சென்ற கெய்டுகள் மற்றும் போர்ட்டர்கள் முறையான பயிற்சி பெறவில்லை. அதிக உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு போன்ற பாதகமான காலநிலையை எப்படி சமாளிப்பது என்று அவர்களுக்கு தெரியவில்லை என்று கண்டறிந்தோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் போனில் பேசினார் எஸ்.பி. . மாநிலத்தில் மலையேற்றப் பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்கும் பணியில் உள்ளதாக அவர் கூறினார். அனுபவம் வாய்ந்த மலையேற்றம் செய்பவர்கள் இந்த கடினமான மலையேற்றத்தை முடிப்பதற்கான தங்கள் திறனை மிகைப்படுத்திக் காட்டியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இறந்து போன ஏழு நபர்களின் உடல்களும் வெவ்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டதால் குழு சிதறி இருக்கலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறினார். இதற்கு காரணம் அவர்கள் சரியாக வழிநடத்தப்படாதது அல்லது அவர்கள் அச்சம் அடைந்திருக்கலாம் என்றும் கூறினார். மலையில் குழுவினர் ஒன்றாக பயணிக்க வேண்டும். கயிறைப் பிடித்துக் கொண்டு ஒன்றாக நகர்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேம்படுத்தப்பட்ட வானிலை முன்னறிவிப்பின் மூலமாக இந்த துயரங்களை தவிர்க்க முடியுமா?
மலைகள் எப்போதும் கணிக்க முடியாதவை. குழு உறுப்பினர்களின் அனுபவம் முதல் அவர்கள் மலையேற்றத்திற்கு தயாராகும் முறை, வழிகாட்டுதல் தரம் போன்ற காரணங்களைப் பொறுத்தே அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. வானிலை மட்டுமே இதற்கு காரணம் இல்லை.
இந்திய மலையேறுதல் அறக்கட்டளையின் (IMF) தலைவர் பிரிக் அசோக் அபே கூறுகையில், துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் இருந்தபோதிலும், சில நேரங்களில் எச்சரிக்கைகள் கடைசி நிமிடத்தில் வரும். அந்த நேரங்களில் வீரர்கள் மலையேற்றத்தை துவங்கி இருப்பார்கள். மலையேற்றம் செய்பவர்களுக்கு பதிலளிப்பதற்கு குறைவான நேரத்தை வழங்குகிறது.
திரிசூல மலையில் ஏற்பட்ட விபத்தில் நன்கு பயிற்சி பெற்ற இந்திய கடற்படை வீரர் ஒருவர் பனிச்சரிவில் சிக்கினார். முற்றிலும் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில், எவரெஸ்ட் சிகரத்தை விட திரிசூல் மலை மிகவும் கடினமானது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, ஒரு மலையேறுபவர் கயிறுகளை கட்டுவதற்கும், ஏணிகளை சரிசெய்வதற்கும் நிலையான இடங்களைக் கண்டுபிடிப்பார், ஆனால் திரிசூல் மலை போன்ற சிகரங்களில் பயணம் செய்யும் போது, அத்தகைய வசதிகள் இல்லை, ஏனெனில் மிகச் சிலரே அத்தகைய சிகரங்களை ஏறுகிறார்கள் என்று அபே கூறுகிறார்.
லம்காகா கணவாயில் ஏற்பட்ட விபத்திற்கு வானிலையே ஒரு காரணம் என்று கூறப்பட்டாலும் இன்னும் உறுதியான அறிக்கைகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கைகளுக்கான அனுமதிகள் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை வழங்குவதில்லை. லம்காகா பாஸ் மலையேற்றம் மலையேறும் வகையைச் சேர்ந்தது அல்ல, ஆனால் இது ஒரு கடினமான மற்றும் சவாலான மலையேற்றமாகும். அதற்கு நிறையவே முன் தயாரிப்புகள் தேவை.
இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை?
இதுபோன்ற துயரங்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, மலையேறுபவர்கள் அல்லது மலையேற்றம் செய்பவர்கள் மற்றும் அவர்களின் அடிப்படை முகாம்களுக்கு இடையிலான தொடர்பு முறிவு, மற்றும் மலையேற்ற குழுவினரால் சரியான இடத்தை கண்டறிவதில் ஏற்படும் சிக்கல் போன்றவை ஆகும்.
உத்தரகாசியில் உள்ள நேரு மலையேறுதல் நிறுவனத்தின் (என்ஐஎம்) துணை முதல்வர் யோகேஷ் துமால், செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் ஜிபிஎஸ் கருவி டேக்குகள் தேடுதல் பணிக்கான நேரத்தைக் குறைக்கலாம் மற்றும் பயணங்களின் போது வரவிருக்கும் இடையூறுகள் குறித்து மீட்புக் குழுக்களை எச்சரிக்கை உதவும். சாட்லைட் போன்கள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும், அவற்றை இயக்குவது என்பது பாதுகாப்புச் சிக்கல்களை உள்ளடக்கிய சிக்கலான செயலாக இருந்தாலும், ஜிபிஎஸ்-இயக்கப்பட்ட பாடி சிப்கள் (body chips) மலையேறும் பயணிகளின் சரியான இருப்பிடத்தை வெளிப்படுத்தி அவர்களை மீட்பதில் முக்கியப் பங்காற்ற முடியும். உத்தரகாண்ட் அரசு ஏற்கனவே இந்த திசையில் செயல்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
சமீபத்தில் உத்தரகாண்டில் உள்ள பிளாக் சிகரத்தில் ஏறி திரும்பிய சண்டிகரை சேர்ந்த மலையேறுபவர் விஷால் தாக்கூர், மீட்பு நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும்போது, மக்கள் மலையேற்றம் நிகழ்வுகளை சாதாரணமாக நான்கு நாட்களுக்கு மேல் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்.
மலையேற்ற பயணங்களை நடத்தும் டூர் நிறுவனங்களின் நிலைப்பாடு என்ன?
The Adventure Tour Operators Association of India (ATOAI) -அமைப்பின் தலைவர் விஷ்வாஸ் மகிஜா, இந்த சம்பவங்கள் ஆபத்தானவை என்றும் மேலும் கட்டுப்பாடு தேவை என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் பயிற்சி பெறாத வழிகாட்டிகள் மற்றும் போர்ட்டர்களுடன் இணைந்து செயல்படுவதால் பலரது உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதாக அவர் கூறுகிறார். உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் மாநில அரசுகளை கடுமையான கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார். ஆனால் இந்த கொள்கைகள் மலையேற்றக்காரர்களை புக்கிங் செய்வதில் இருந்து விட்டு வைக்காது. பணத்தை சேமிப்பதற்காக மக்கள் உபகரணங்கள், பாதுகாப்பு விவகாரங்களில் சமரசம் செய்து கொள்வதையும், அவர்களின் க்ரெடென்சியல்களை கவனிக்காமல் அவர்களுக்கு சான்று வழங்கும் நிறுவனங்களையும் நாங்கள் பார்த்துள்ளோம். ஏ.டி.ஓ.ஏ.ஐ. நிறுவனத்தின் மற்றொரு அதிகாரியான வைபவ் குமார் இந்த சம்பவங்கள் குறித்து குறைவான அறிக்கைகளும் உள்ளன என்று கூறினார். மேலும் இது போன்ற விவகாரங்கள் தொடர்பாக 5% மட்டுமே அறிக்கைகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இத்தகைய அவலங்களில் மலையேறும் நிறுவனங்களின் பங்கு என்ன?
டெல்லியில் உள்ள இந்தியன் மௌண்டனீரிங் ஃபவுண்டேஷன் , உத்தரகாசியில் இருக்கும் நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா போன்ற கல்வி நிறுவனங்கள் இது போன்ற நிகழ்வுகள் குறித்து ஆய்வுகள் நடத்துகின்றன. இந்த ஆய்வுகள் பாடங்களைக் கற்றுக்கொள்வதையும், பயிற்சியாளர்களுக்கு கல்வி கற்பதையும் மற்றும் இந்த சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. எதிர்கால உத்திகளை வடிவமைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பிரிக் அபே விளக்குகிறார். NIM என்பது ஒரு முதன்மையான அமைப்பாகும், இது மலையேறும் ஆர்வமுள்ளவர்களை அடிப்படை மற்றும் மேம்பட்ட படிப்புகள் மூலம் பயிற்சி அளித்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil