மொபைலில் நீக்கப்பட்ட டேட்டாவை தடயவியல் குளோனிங் மூலம் மீட்டெடுக்க முடியுமா?

பல பயங்கரவாத தொடர்பான வழக்குகளைக் காட்டிலும், மொபைல் ஃபோன் தடயவியல் குளோனிங்கின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்று, பாயல் தத்வி வழக்கு.

By: September 25, 2020, 9:17:48 AM

Mohamed Thaver

இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பாலிவுட் உலகின் பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின. ஒருகட்டத்தில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்தன. அதன் அடிப்படையிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் முக்கிய சாட்சியான நடிகை ரியா சக்ரபர்த்தி தொடர் விசாரணையில் இருந்து வருகிறார். இதையடுத்து பல அதிர்ச்சி தகவல்கள் தினமும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

தற்போது, ரியா போதைப்பொருள்கள் பற்றிப் பகிர்ந்துகொண்ட குறுஞ்செய்திகளை, ரியாவின் இரண்டு தொலைப்பேசிகளிலிருந்தும் Enforcement Directorate (ED) பிரிவு ‘குளோன்’ செய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டதன் அடிப்படையில் ரியா, அவருடைய சகோதரர் ஷோயிக் மற்றும் மேலும் நான்கு பேருக்கு எதிராகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (Narcotics Control Bureau (NCB)) வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

மொபைல் ஃபோன் தடயவியல் குளோனிங் என்றால் என்ன?

ஒட்டுமொத்த மொபைலின் bit-for-bit நகலான இது மொபைல் சாதன தடயவியலின் ஒரு பகுதியை உருவாக்குகிறது. விசாரணை அல்லது நீதிமன்றத்தில் ஒருவருக்கு எதிரான வழக்கை நிரூபிக்க உதவும் வகையில் இருக்கும் என நம்பிக்கையின் அடிப்படையில், சில விசாரணைக் குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வகங்கள் மொபைல் அல்லது இதர டிஜிட்டல் சாதனத்தின் ‘இமேஜிங்’ அல்லது தடயவியல் குளோனிங் மேற்கொள்ளப்படுகின்றன.

மொபைல் சாதனம் அல்லது லேப்டாப்பிலிருந்து முழு தரவையும் காபி/பேஸ்ட் செய்வதிலிருந்து மொபைல் போன் குளோனிங் எவ்வாறு வேறுபடுகிறது?

பாரம்பரிய காபி/பேஸ்ட் முறையில், ஆக்டிவாக இருக்கும் ஃபைல் (files) அல்லது தற்போது சாதனத்தில் இருக்கும் ஃபைல்களை மட்டுமே நகலெடுக்க முடியும். பயனரால் நீக்கப்பட்ட அல்லது மேலெழுதப்பட்ட ஃபைல்கள் இதில் உள்ளடங்காது. இதுபோன்ற குற்ற விசாரணைகளில், முக்கிய டேட்டாக்களை (data) நீக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் இடத்தில், ‘இமேஜிங் (imaging) நுட்பத்தைப் பயன்படுத்துவது பெரிதளவில் உதவுகிறது. இது, physical acquisition என்றும் அழைக்கப்படுகிறது.

மொபைல் போன் டேட்டாவைப் பெறுவது என்பது தனிப்பட்ட physical storage-ல் bit-for-bit மூலம் நகலெடுப்பது. நீக்கப்பட்ட எல்லா தரவும் இதில் அடங்கும். மற்ற முறைகளில், ஃபோல்டர்ஸ் (folders) மட்டுமே நகலெடுக்க முடியும். நீக்கப்பட்ட ஃபைல்களை அல்ல.

இமேஜிங்கைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட தரவு அல்லது குற்றம் சாட்டப்பட்ட குறுந்செய்திகள் போன்றவற்றை நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியுமா?

நிச்சயம் முடியும். முன்பு மகாராஷ்டிரா சைபர் காவல்துறைக்கு தலைமை தாங்கிய சிறப்பு ஐ.ஜி.பிரிஜேஷ் சிங் அறிவிப்பின்படி, ஓர் குறிப்பிட்ட சாதனத்தில் கிடைத்த தகவல், 65 (B) தகவல் தொழில்நுட்ப சட்டம் சான்றிதழோடு இணைக்கப்பட்டிருக்குமானால், அது மின்னணு சாதனங்களை அதன் குறிப்பிட்ட முறையில் கையாளுவதற்கான நிபந்தனையை வழங்குகிறது. அது சேதமடையாதபடி தனிநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படலாம்.

எனவே, இது ஒரு விசாரணைக் கருவியாக மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தில் தெளிவான மதிப்பையும் கொண்டிருக்கிறது.

புலனாய்வாளர்களுக்கு உதவிய மொபைல் தடயவியல் குளோனிங் வழக்கு இங்கே

பல பயங்கரவாத தொடர்பான வழக்குகளைக் காட்டிலும், மொபைல் ஃபோன் தடயவியல் குளோனிங்கின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்று, பாயல் தத்வி வழக்கு. 2019-ம் ஆண்டு மே 22 அன்று தற்கொலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்படும் மும்பை நாயர் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு ரெசிடென்ட் மருத்துவரான இவருடைய வழக்கில் தடயவியல் குளோனிங் பெரும் பங்களித்தது.

மூன்று மருத்துவர்களால் தன் மகள் துன்புறுத்தப்பட்டதாக அந்தப் பெண்ணுடைய பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தடய அறிவியல் ஆய்வகம் (Maharashtra Forensic Science Laboratory (FSL)) அந்தப் பெண் எழுதிய தற்கொலைக் குறிப்பின் புகைப்படத்தை அவருடைய தொலைப்பேசியிலிருந்து தடயவியல் குளோன் மூலம் மீட்டெடுத்தனர்.

தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று மருத்துவர்களும் அந்தப் பெண்ணின் தொலைபேசியிலிருந்து தற்கொலை குறிப்பை நீக்கப்பட்டிருக்கலாம் என ஏற்கெனவே காவல் அதிகாரிகள் கணித்து வைத்திருந்தனர். என்றாலும், உண்மையான தற்கொலை குறிப்பு, சம்பந்தப்பட்ட மூன்று மருத்துவர்களுக்கும் எதிரான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது.

உங்கள் தொலைபேசி அல்லது லேப்டாப்பிலிருந்து நீங்கள் நீக்கும் எல்லா டேட்டாவையும் மீட்டெடுக்க முடியுமா? நீங்கள் விற்கும் அல்லது பழுதுபார்ப்பதற்காக கொடுக்கும் உங்கள் தொலைபேசி / லேப்டாப்களில் உள்ள டேட்டாக்கள் பாதிக்கப்படக்கூடியதா?

சாதனத்தைப் பொறுத்து அது சாத்தியமாகலாம். பொதுவாக, சாதனத்திலிருந்து நீக்கப்பட்ட டேட்டாவை வெவ்வேறு சாஃப்ட்வேர்களை (software) பயன்படுத்தி மீட்டெடுக்க முடியும். ஆனாலும், ஆப்பிள் மற்றும் பிளாக்பெர்ரி தயாரிப்புகளில், டேட்டா மீட்பு செயல்முறை என்பது மிகவும் கடினம். ஃபேக்டரி ரீசெட் (factory reset) செய்தாலே இதுபோன்ற சாதனங்களிலிருந்து டேட்டாவை மீட்பது கடினம்.

இருப்பினும், நீங்கள் விற்கும் சாதனத்தில் இருக்கும் டேட்டாவை மீட்டெடுத்து, அதனைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கக் காத்துக்கொண்டிருக்கும் ஆபத்தானவர்கள் கைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, உங்கள் சாதனத்தில் ஃபைல்களை என்க்ரிப்ட் (encrypt) செய்து, அதை விற்பனை செய்வதற்கு முன்பு ஃபேக்டரி ரீசெட் செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.

தொலைபேசிகளில் டேட்டாவை என்க்ரிப்ட் செய்வதற்கு பெரும்பாலான ஆண்டிராய்டு தொலைபேசி அமைப்புகளிலும் அதற்கான ஆப்ஷன் இருக்கிறது. நீங்கள் அதற்கு ஒரு கடவுச்சொல் (password) அல்லது PIN வைக்கவேண்டும்.

டேட்டாவை சேமிக்க என்க்ரிப்ஷன் போதுமானதா?

ஒவ்வொரு டேட்டாவின் பாதுகாப்பும் அதன் என்க்ரிப்ஷன் எவ்வளவு மேம்பட்டது என்பதைப் பொறுத்துத்தான் உள்ளது. ட்ரையல்/எரர் (trial and error) மூலம் கடவுச்சொல் அல்லது PIN-ஐ தனியாகப் பிரித்தெடுக்கும் ‘brute force acquisition’ என்று ஒரு முறை உள்ளது. பல சட்ட அமலாக்கக் குழுக்கள் இத்தகைய சாஃப்ட்வேர்களை குற்றவியல் விசாரணைகளுக்காகக் குறிப்பாகப் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளுக்காக வாங்குகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Can deleted data from mobile recovered using forensic cloning

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X