நாய்கள் கோவிட்-19ஐக் கண்டுபிடிக்க முடியுமா என்பதைக் கண்டறிவதற்கு ஒரு சிறப்பு ஆய்வாளர்கள் குழுவுக்கு இங்கிலாந்து அரசாங்கம், 5 லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது. அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு நாவல் கொரோனா வைரஸ் உள்ள மனிதர்களை அடையாளம் காண நாய்களுக்கு பயிற்சியளிக்க முடியுமா என்பதைப் பார்ப்பதே இந்த ஆய்வின் நோக்கம்.
இது எதிர்காலத்தில் கொரோனா வைரஸைக் கண்டறிய ஒரு புதிய ஆக்கிரமிப்பு அல்லாத, ஆரம்பகட்ட எச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தப்படுமா என்பதை இது நிறுவும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
"உயிரி கண்டறியும் நாய்கள் ஏற்கனவே குறிப்பிட்ட புற்றுநோய்களைக் கண்டறிந்துள்ளன. மேலும், இந்த கண்டுபிடிப்பு எங்கள் பரந்த சோதனை யுத்தியின் ஒரு பகுதியாக விரைவாக முடிவுகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இங்கிலாந்தின் கண்டுபிடிப்புத் துறை அமைச்சர் லார்ட் பெத்தேல் கூறினார்.
நாய்கள் மற்றும் கோவிட்-19 சோதனை
சோதனையின் முதல் கட்டத்தில், மருத்துவ கண்டறிதல் நாய்கள் மற்றும் டர்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் (எல்.எஸ்.எச்.டி.எம்) ஆராய்ச்சியாளர்கள், நாய்கள் மூலம் மனிதர்களிடமிருந்து வரும் நோயை, நோய்த்தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும் அவற்றின் வாசனையிலிருந்து கண்டறிய முடியுமா என்பதை தீர்மானிப்பார்கள்.
லண்டன் மருத்துவமனைகளில் உள்ள என்ஹெச்எஸ் ஊழியர்களால் கொரோனா வைரஸ் நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை வைத்து தொற்றுநோயை அடையாளம் காண லாப்ரடர் மற்றும் காக்கர் ஸ்பானீல் கலப்பின வைகயைச் சேர்ந்த 6 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்த சோதனையில் போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களை விரைவாக திரையிட பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்படும்.
நாய்கள் பயன்படுத்தப்படுவது ஏன்?
விமான நிலையங்கள் போன்ற இடங்களில் வெடிகுண்டுகள், போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டறிய நாய்கள் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றன.
கால்நடை அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட 2015 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, நாய்களின் அதிக உணர்திறன் கொண்ட கோரை ஆல்ஃபாக்டரி சென்சார் சிஸ்டம் சில இலக்கு பொருள்கள் டிரில்லியனில் ஒரு பகுதி அளவுக்கு குறைவாக இருந்தாலும் கண்டறிய முடியும். அதாவது, இது இருக்கக்கூடிய கருவிகளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக உணர்திறன் கொண்டவை. அவை ஒரு மில்லியன் அல்லது பில்லியன் பாகங்களின் செறிவுகளில் உள்ள பொருட்களை நம்பத்தகுந்த முறையில் அடையாளம் காணும்.” என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மருத்துவ கண்டறிதல் நாய்கள் ஆய்வு குறிப்பிட்டுள்ளபடி, நாய்களின் மூக்கின் சிக்கலான அமைப்பு காரணமாக வாசனை உணர்வு உயர்த்தப்படுகிறது. இதில் மனிதர்களில் 5 மில்லியனுகும் அதிமான வாசனை நுகர்ச்சிகளுடன் ஒப்பிடும்போது அவற்றில் 300 மில்லியனுக்கும் அதிகமான வாசனை ஏற்பிகள் உள்ளன. மேலும், நாய்களின் மூளை 30 சதவிகிதம் துர்நாற்றத்தை பகுப்பாய்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், வெவ்வேறு நோய்களுக்கு தனித்துவமான நாற்றங்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, சிறப்பு நாய்களுக்கு மனிதர்களில் அவற்றைக் கண்டறிய பயிற்சி அளிக்க முடியும். மருத்துவ கண்டறியும் நாய்கள் ஆய்விதழில் சேகரிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிகள், நாய்கள் ஒரு மணி நேரத்திற்கு 250 பேரைத் திரையிட முடியும் என்பதையும், நோய் நாற்றங்களைக் கண்டறிய பயிற்சி அளிக்க முடியும் என்பதையும் காட்டுகிறது. இது இரண்டு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை நீர்த்துப்போகச் செய்வதற்கு சமம். ஆகையால், கோவிட்-19 போன்ற மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயைக் கண்டறிய நாய்களைப் பயிற்றுவிப்பதன் மூலம், விரைவாக அதிக நபர்களை திரையிட்டு பரிசோதனை செய்ய முடியும்.
எனவே, இந்த பயோமார்க்கர்ஸ்கள் அவற்றின் அதிவேக உணர்திறன் முறையைப் பயன்படுத்தி நோய்களைக் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். மேற்கூறிய 2015-ம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கையின் படி, சில சந்தர்ப்பங்களில், நாய்கள் வெளியாகும் சுவாசத்திலிருந்து நோய்களைக் கண்டறிய முடிந்தது. இது மிகக் குறைந்த VOC செறிவுகளைக் கொண்டுள்ளது.
நாய்கள் வேறு எந்த நோய்களைக் கண்டறிய முடியும்?
மலேரியா, புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவு நோய், பார்கின்சன் நோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டறிய நாய்களைப் பயன்படுத்தலாம் என்று கடந்தகால ஆராய்ச்சி நிறுவியுள்ளது. குறிப்பிட்ட பாக்டீரியாவின் வாசனையைக் கண்டறிய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்களுடன் மருத்துவக் கண்டறிதல் நாய்கள் செயல்படுகின்றன.
இது தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, பார்கின்சன் நோயைப் பொறுத்தவரையில், இங்கிலாந்தின் ஆராய்ச்சியாளர்கள் நாய்கள் இந்த நோயைக் கண்டறிய முடியுமா என்று தீர்மானிக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.