புதிய இரட்டை மாறுபட்ட கொரோனா வைரஸ் பல இந்திய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவின் "இரண்டாவது அலை" முதல் அலையை விட ஆபத்தானது என்ற அச்சத்தைத் தூண்டுகிறது.
கூடுதலாக, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் குறைந்தது 18 மாநிலங்களில், வேறு பல வகைகளையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய SARS-CoV-2 கன்சோர்டியம் ஆன் ஜெனோமிக்ஸ் (The Indian SARS-CoV-2 Consortium on Genomics -INSACOG) இரட்டை கொரோனா மாறுபாட்டின் சமீபத்திய மாதிரிகளில் மரபணு வரிசை முறைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை, இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாட்டின் மொத்தம் 736 பேர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 34 பேர் மற்றும் பிரேசிலிலிருந்து வந்த ஒரு மாறுபாடு ஆகியவை நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தின் (என்சிடிசி) இயக்குநர் சுஜீத் குமார் சிங் கடந்த வாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இரட்டை மாறுபாடு என்றால் என்ன?
மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வு கடந்த டிசம்பர் முதல், E484Q மற்றும் L452R பிறழ்வுகளின் அதிகரிப்பைக் காட்டுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
“ஒரு வைரஸின் இரண்டு பிறழ்ந்த வகைகள் ஒன்றிணைந்து மூன்றாவது மாறுபாட்டை உருவாக்கும்போது இரட்டை பிறழ்வு நிகழ்கிறது. இந்தியாவில் உருவாகியிருக்கும் இரட்டை மாறுபாடு, E484Q மற்றும் L452R வகைகளின் கலவை”என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் எம்.சி. மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.
சுகாதார வல்லுநர்கள் கூறுகையில், L452R மாறுபாடு முதன்முதலில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் E484Q மாறுபாடு சுதேசமானது.
"இந்த இரட்டை மாறுபாடு கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எழுச்சியின் பின்னணியில் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால், சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும்" என்று மிஸ்ரா மேலும் கூறினார்.
சாத்தியமான மறுசீரமைப்புகள் பற்றிய கவலைகள்
இந்தியாவில் கோவிட் வகைகள் தோன்றுவது எதிர்பாராதது அல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
"பாதிக்கப்பட்ட எண்ணிக்கைகளின் உயர்வு மாறுபாடுகளுடன் தொடர்புடையதா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், அது ஒரு சாத்தியமாக இருக்கலாம். அதனை மேலும் ஆராய வேண்டும்" என்று மருத்துவ நிபுணர் ஷாஹித் ஜமீல் கூறுகிறார்.
இரட்டை பிறழ்வு வைரஸ், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து தப்பிக்க அனுமதிக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கவலைப்படுகிறார்கள். இது ஆன்டிபாடிகளுக்கு தன்னை எதிர்த்துக்கொள்ளும். ஏற்கெனவே, கோவிட் -19-ல் இருந்து மீண்ட நோயாளிகளை, இது மீண்டும் தாக்கும் வாய்ப்பும் உள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். சில சந்தர்ப்பங்களில், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு எதிராக வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ளவும் கூடும்.
"நாங்கள் பார்ப்பது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஸ்பைக். இது வைரஸ் மாறுபாடுகள் அதிகரித்த பரவலுக்குப் பங்களிப்பு செய்கின்றன என்பதைக் காட்டுகிறது" என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் துறையின் முன்னாள் தலைவர் லலித் கான்ட் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்தியாவில் கோவிட் -19 நோய்த்தொற்றுகளில் எழுச்சி
இந்தியா கடந்த திங்களன்று, 68,020 புதிய கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. இது மொத்த எண்ணிக்கையை 12.39 மில்லியனாகக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்காசிய நாட்டிலும் கடந்த 24 மணி நேரத்தில் (ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள் வரை) 291 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை 161,843-ஆகக் கொண்டு வந்துள்ளது.
மேற்கு மாநிலமான மகாராஷ்டிரா, பெரும்பாலான செய்தி நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்தது. மாநில அதிகாரிகள் கடுமையான லாக் டவுனை எதிர்கொண்டனர். டெல்லியில் சுமார் 1,900 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது 2020 டிசம்பர் 15 முதல் தலைநகரின் அதிக எண்ணிக்கையிலான பதிவு.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நோய்த்தொற்றுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர், ஒரு வாரத்திற்கு மேலாக 40,000-க்கும் மேற்பட்ட புதிய தினசரி எண்ணிக்கையை நாடு பதிவு செய்து வருகிறது.
கோவிட் நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்
"46 மாவட்டங்களில் குறைந்தது 14 நாட்களுக்குப் பயனுள்ள கட்டுப்பாடு மற்றும் தொடர்பு தடமறிதல் உள்ளிட்ட நிலைமையைச் சமாளிக்க ஐந்து-படி நிலை ஸ்ட்ராடஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்று சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதிகாரிகளுடன் கடந்த வாரம் உயர்மட்டக் கூட்டத்திற்குப் பின்னர் கூறினார்.
இந்த புதிய நிலைமை இந்தியாவின் கடந்த ஆண்டு ஆதாயங்களை செயல் தவிர்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்த மாநில சுகாதார அதிகாரிகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியா தனது வெகுஜன கோவிட் தடுப்பூசி இயக்கத்தை ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதுவரை நாட்டில் 60 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 1-ம் தேதி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம், மூன்றாம் கட்டத்திற்குள் நுழைகிறது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெறலாம். ஆகஸ்ட் மாதத்திற்குள் 300 மில்லியன் மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என இந்தியா நம்புகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.