Can vitamin C prevent or cure novel corona virus infection COVID 19
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்க வைட்டமின் சி உங்களுக்கு உதவ முடியுமா? கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே, சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட பல கோட்பாடுகளில் இதுவும் ஒன்றாகும், ஆனால் பதில் தான் இல்லை.
Advertisment
வைட்டமின் சி ஒரு தொற்றுநோயைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், வைட்டமின் சி உங்களுக்கு நன்மையையே பயக்கிறது, மேலும் வைரஸ் பாதித்தால் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மூலம் அதை எதிர்த்துப் போராட உதவும். ஆனால் மீண்டும், இது ஒரு நோயாளியை குணப்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, அது “ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை” அனுபவிக்கிறது, இது இறுதியில் உயிரணு திசுக்களில் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. வைட்டமின் சி செல்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், நோயெதிர்ப்பு மறுமொழியை அதிகரிக்க சிறப்பு செல்களை உருவாக்குவதன் மூலம் இந்த செல்லுலார் குழப்பத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. "எனவே இங்கே வைட்டமின் 'சி'யின் பங்கு விளையாட்டிற்குப் பிறகு கால்பந்து மைதானத்தை சுத்தம் செய்வது போன்றது" என்று நியூகேஸில் பல்கலைக்கழக ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான பேராசிரியர் கிளேர் காலின்ஸ் 'The Conversation'ல் எழுதினார்.
கொரோனா வைரஸால் ஏற்படும் ஜலதோஷத்திற்கு எதிரான சிகிச்சையாக வைட்டமின் 'சி' ஒருபோதும் செயல்படவில்லை என்பதால், வைட்டமின் 'சி' கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்தவோ தடுக்கவோ சாத்தியமில்லை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
மீண்டும், வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது என்றாலும், அதில் அதிகமானவை தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான வைட்டமின் சி வயிறு மற்றும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குழந்தை தொற்று நோய் நிபுணர் டாக்டர் பிராங்க் எஸ்பரை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது. கொரோனா வைரஸைத் தடுக்க துத்தநாகம், கிரீன் டீ மற்றும் எக்கினேசியா போன்றவை கூடுதல் நன்மை பயக்கும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று மற்றொரு தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் மார்க் ஜே முல்லிகன் தி NYT-யிடம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil