கொரோனா தொற்று ஏற்பட்டு சில வாரங்களில் பெரும்பாலோர் குணமடைந்துவிடுகின்றனர். ஆனால், சிலருக்கு நான்கு முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்குப் பிறகும்கூட நோயின் அறிகுறிகள் நீடிக்கும். அவற்றை ‘லாங் கோவிட்’ என அழைக்கின்றனர்.
இந்நிலையில், லேசான அறிகுறிகளை கொண்ட ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால கொரோனா பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்த நிபுணர்கள், ஒமிக்ரானால் லாங் கோவிட் ஏற்படுமா என்பதை முடிவு செய்வது இது மிக விரைவாகும். ஆனால், ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்துவது சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் மரியா வான் கெர்கோவ் கூற்றுப்படி, லாங் கோவிட் கொரோனா தொற்று உறுதியாகி பல நாள்களுக்கு பிறகே கண்டறியப்படுகிறது. பெரும்பாலும் ஆரம்ப அறிகுறிகள் சரியான பிறகு, குறைந்தப்பட்சம் 90 நாள்கள் வரை லாங் கோவிட் பாதிப்பை காணமுடியும் என்றார்.
ஆய்வின்படி, பெரும்பாலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் லாங் கோவிட்-ஆல் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, சோர்வு,மூளைத்திறன் பாதிப்பு,சுவாசக் கோளாறு,பதட்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
நோய் தொற்று தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு, லாங் கோவிட் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், லேசான அறிகுறிகளை கொண்டவர்களுக்கு லாங் கோவிட் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒமிக்ரான் கடந்தாண்டு இறுதியில் உலக முழுவதும் பரவ தொடங்கியது. இந்த திரிபு, டெல்டாவை காட்டிலும் லேசான பாதிப்பை தான் ஏற்படுத்தியது. இருப்பினும், அதிவேக பரவலால் மருத்துவமனைகள் நிரம்பின.
வான் கெர்கோவ் கூறுகையில், ஒமிக்ரான் தாக்கியவர்களுக்கு லாங் கோவிட் ஏற்படாது என கூறுவதற்கு எந்த ஆய்வு முடிவுகளும் கிடையாது என்றார்.
நீண்ட கோவிட் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற பல கிளினிக்குகளில் ஒன்றின் இணை இயக்குனரான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் லிண்டா கெங், உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், அடுத்த அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே, மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையில், லாங் கோவிட் பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்பதை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறாக இருக்கலாம் என கருதுகின்றனர். சிறிய மைக்ரோக்ளோட்டுகள் முடக்கும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம் அல்லது உடலில் மறைந்திருக்கும் வைரஸ்களை மீண்டும் இயக்கலாம் என கருதப்படுகிறது.
லாங் கோவிட் பாதிப்பை தடுப்பூசி குறைக்குமா என்கிற ஆய்வை யேல் பல்கலைக்கழகக் குழு நடத்தி வருகிறது. இதுதவிர இரண்டு ஆய்வக முடிவுகளில், கொரோனா பாதிப்புக்கு முன்பு தடுப்பூசி செலுத்தியிருந்தால், லாங் கோவிட் ஏற்படுவதற்கான சாத்தியக்குறுகளை குறைக்கிறது. குறைந்தப்பட்சம் நோய் தீவிராகாமல் கட்டுப்படுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil