ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்களைக் கொண்டு கைகளைக் கழுவுவது என்பது ஒன்று. ஆல்கஹால் குடிப்பது என்பது வேறு. கோவிட்-19 வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து, மது குடிப்பது நாவல் கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது என்ற கருத்துகளும் ஆலோசனைகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த ஆபத்தான வதந்தியை நம்பி ஈரானில் மெத்தனால் கலந்த எரி சாராயத்தைக் குடித்து 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மது அருந்துவது கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து உங்களை நிச்சயமாக பாதுகாக்காது என்று உலக சுகாதார அமைப்பு தெளிவாக கூறியுள்ளது. மேலும், “ஆல்கஹாலை எப்போதும் மிதமாக உட்கொள்ள வேண்டும். மேலும், மது அருந்தாதவர்கள் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில் குடிக்கத் தொடங்கக்கூடாது.” என்றும் கூறியுள்ளது.
ஆல்கஹால் பதட்டத்தைக் குறைக்கும் ரசாயனங்களை வெளியிடுகிறது. அதனால், மன அழுத்தத்தையும் சோர்வையும் போக்க ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஹவுன்ஸ் மிதமாக குடிப்பது தீங்கு விளைவிக்காது. இருப்பினும், அதிகப்படியான குடிப்பழக்கம் ஒரு கொரோனா வைரஸுக்கு எதிரான உடலை பலவீனப்படுத்தலாம். அல்லது, அல்லது ஈரானில் நடந்ததைப் போல, குடிப்பவர் உயிரிழக்க நேரிடும்.
நாவல் கொரோனா வைரஸ் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வரும் வேளையில், பிற வைரஸ் பரவல்கள் குறித்த ஆராய்ச்சியில் அதிகப்படியான ஆல்கஹால் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதிகப்படியான குடிகாரர்கள், குறிப்பாக, சுவாச நோய் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்படுவதாகக் காணப்படுகிறது. அதனால், தொற்றுநோயிலிருந்து மீள அதிக காலம் ஆகிறது. உண்மையில், அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவது நுரையீரலையும் சேதப்படுத்தும். நாவல் கொரோனா வைரஸ் நுரையிரலைப் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 பாதித்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக காய்ச்சல் அல்லது சளி பிடித்தவர்களும் கூட அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மனச்சோர்வுகு எதிராகப் போராட அதிகமாக குடிப்பதற்கு எதிராகக்கூட ஒரு வாதம் உள்ளது. மத்திய நரம்பு மண்டலத்தில் ஆல்கஹால் ஏற்படுத்தும் விளைவு பதட்டத்தைக் குறைக்க வழிவகுக்கும் எனக் கண்டறியப்பட்டாலும், ஆல்கஹால் இரத்தத்தில் நீடிக்கும் வரை மட்டுமே அது நீடிக்கும். பின்னர், இரத்தத்தில் ஆல்கஹால் அளவு பூஜ்ஜியத்திற்கு திரும்பும்போது, நரம்பு மண்டலம் இரத்தத்தில் உள்ள ரசாயனங்களை முந்தைய செறிவுகளுக்கு மீட்டெடுக்க முயற்சிக்கும். அது எப்போதும் குடிப்பவரை கவலையடையச் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.