அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 33% குறைந்துள்ளது என்று அமெரிக்காவின் புற்று நோய் ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே, ஆராய்ந்து கண்டறிவதாலும், புகைபிடிப்பதை குறைத்து கொள்வதாலும் இந்த சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் புற்றுநோய்க்கு வழங்கப்படும் மருத்துவம் வளர்ச்சியடைந்ததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த தன்மை இந்தியாவிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக புற்றுநோய் பற்றி ஆய்வுகளை வெளியிடும் நாளிதழில், முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் 2012 முதல் 2019- வரை பெண்களுக்கு ஏற்படும் சர்விக்கல் கேன்சர் 65 சதவுகிதம் குறைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சர்விக்கல் புற்றுநோய் மற்றும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய்யின் சதவுகிதம் குறைந்துள்ளது .
ஆனால் நுரையீரல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது.
2022-ல் 14.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே 2021ல் 14.2 லட்சமாகவும், 2020-ல் 13.9 லட்சமாகவும் இருந்தது குறிப்பிடதக்கது. இந்த தகவலானது ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) சார்பாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கபட்டது.
இதுபோல புற்றுநோயால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை 2022-ல் 8.08 லட்சமாக இருந்தது. 2021-ல் 7.9 லட்சமாகவும், 2020-ல் 7.7 லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் 2025-ல் 15.7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தரவுகள் கூறுகிறது.
ஒன்பது நபர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதுபோல 68 ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படவும், 29 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆண்களைவிட பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆண்களுக்கு, வாய், நுரையீரல், போஸ்ட்ரேட், வயிறு தொடர்பான புற்றுநோய் ஏற்படுகிறது.
பெண்களுக்கு மார்பகம், சர்விக்கல், கர்ப்பப்பை, நுரையீரல் தொடர்பாக புற்று நோய் அதிகமாக ஏற்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் சர்விக்கல் கேன்சர் விகிதம் இந்தியாவில் குறைந்துள்ளது. ஆனால் நகர்புறங்களில் மார்பக புற்று நோய் அதிகரித்துள்ளது.
புற்றுநோய்யால் ஏற்படும் மரணங்களை எப்படி கட்டுபடுத்துவது?
நோய்யின் தன்மை அதிகரிகும் முன்பே கண்டறிவதால், மார்பக புற்று நோய், சர்விக்கல் புற்று நோய், வாய் புற்றுநோய் ஆகியவையை குணப்படுத்த முடியும். அரசின் சுகாதார மையங்கள் இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
இதுபோல் புற்றுநோய் கண்டந்தவுடன் அதற்கான மருத்துவத்தை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 10 லட்சம் பேருக்கு ஒரு ரேடியோ தெரப்பி மெஷின் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவின் மக்களை தொகையை வைத்து கணக்கிட்டால் 1,400 மெஷின் தேவை ஆனால் நம்மிடம் 700 தான் இருக்கிறது என்று புற்றுநோய் மருத்துவர் ராத் கூறுகிறார்.
இந்தியாவில் இதயம் சமந்தமான நோய்கள்தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் தற்போது புற்று நோய்யும் 2 ம் இடத்தில் இருக்கிறது. இதனால் புற்று நோய் தொடர்பாக நாம் கூடுதலாக விழுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.