Mehr Gill
இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தான் இதய நோய் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதய நோயால் பாதிக்கப்பட்ட ஈரானை நாட்டை சேர்ந்த வயதான நோயாளிகளுக்கு பாலிபில் டேப்ளட்டுடன் ( ஆஸ்பிரின் மற்றும் அடோர்வஸ்டாடின் இணைந்த கலவை) அதற்குரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட அளவில் மருந்து மற்றும் சிகிச்சை தரப்ப்பட்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைவாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த தரவு பெரும்பாலும் குறைந்த மற்றும் நடுத்தர சம்பளம் பெறும் நாடுகளில் அதிகம் கண்டறியப்பட்டது.
இந்திய மாநிலங்களில் இதயநோய் பாதிப்பின் காரணமாக ஏற்படும் பக்கவாதத்தினால் மரணம் அதிகம் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கம் முதலிடத்திலும், அதனைத்தொடர்ந்து ஒடிசா, அசாம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்கள் உள்ளன.
குறைந்த பாதிப்பு காணப்பட்ட மாநிலங்கள் மிசோரம் முதலிடத்திலும் அதனை தொடர்ந்து சிக்கிம், டில்லி , இமாச்சலபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்கள் உள்ளன.
இஸ்கிமிக் இதயநோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் பஞ்சாப் முதலிடத்திலும் அதனை தொடர்ந்து தமிழகம், ஹரியானா, ஆந்திரபிதேசம் மற்றும் கர்நாடகா உள்ளது
இஸ்கிமிக் இதய நோய் பாதிப்பு குறைந்த மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்கள் உள்ளன.
இந்தியாவில் இதயநோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்தியாவில் நிகழும் மரணங்களில், இஸ்கிமிக் இதய நோய் ஏற்பட்டு 61.4 சதவீதம் பேரும், பக்கவாதத்திற்கு 24.9 சதவீதம் பேரும் மரணமடைவதாக 2018ம் ஆண்டில் லான்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.