Advertisment

நடப்பாண்டில், 'டிஜிட்டல் கரன்சி' அறிமுகம்: மக்களுக்கு எவ்வாறு உதவும்?

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ நாணய ஒப்பந்தம் ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘digital rupee’ that RBI could introduce this year

பிட்காயின் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகளின் அபாயங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பலமுறை கவலை தெரிவித்திருந்தது.

நடப்பு நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சிகள் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிக்கைகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி திங்கள்கிழமை உறுதிப்படுத்தின.

Advertisment

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 வரவு செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) தாக்கலின்போது மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (central bank digital currency) அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
பொதுவாக கடந்த காலங்களில் டிஜிட்டல் கரன்சிகள் என்னும் மெய்நிகர் நாணயங்கள் மீதான ஆபத்து குறித்து ரிசர்வ் வங்கி தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துவந்தது. இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபரில் டிஜிட்டல் கரன்சிகள் குறித்த திட்டத்தை முன்மொழிந்தது.

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்றால் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, “மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ நாணய ஒப்பந்தம் ஆகும்.
இது ஒரு ஃபியட் நாணயத்தைப் போன்றது. மேலும், ஃபியட் நாணயத்துடன் ஒன்றுக்கு ஒன்று மாற்றக்கூடியது. அதன் வடிவம் மட்டுமே வேறுபட்டது. டிஜிட்டல் ஃபியட் கரன்சி அல்லது CBDCஐ பிளாக்செயின் மூலம் ஆதரிக்கப்படும் வாலட்களைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.

மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் கருத்து பிட்காயினால் நேரடியாக ஈர்க்கப்பட்டாலும், இது பரவலாக்கப்பட்ட மெய்நிகர் நாணயங்கள் மற்றும் கிரிப்டோ சொத்துக்களிலிருந்து வேறுபட்டது. அவை அரசால் வழங்கப்படவில்லை மற்றும் 'சட்டப்பூர்வமான நாணயங்கள்' அந்தஸ்து இல்லாதவை
மூன்றாம் தரப்பு அல்லது வங்கி தேவையில்லாத உள்நாட்டு மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் பயனருக்கு உதவுகின்றன.

மத்திய வங்கி நாணயங்கள் எவ்வாறு உதவும்?
நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி கடந்த ஆண்டு மக்களவையில் கூறுகையில், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் அறிமுகமானது, பணத்தின் மீதான சார்பு குறைதல், குறைந்த பரிவர்த்தனை செலவுகள் காரணமாக அதிக பணமதிப்பிழப்பு, குறைக்கப்பட்ட தீர்வு ஆபத்து போன்ற குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் சாத்தியம் உள்ளது.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் அறிமுகம் மிகவும் வலுவான, திறமையான, நம்பகமான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் சட்டப்பூர்வ டெண்டர் அடிப்படையிலான கட்டண விருப்பத்திற்கு வழிவகுக்கும். எவ்வாறாயினும், " அபாயங்களும் உள்ளன" என்று அவர் கூறினார்.
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இல் திருத்தங்களை ஆர்பிஐ முன்மொழிந்துள்ளதாக சவுத்ரி அறிவித்தார், இது மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் தொடங்க உதவும். "சில விதிவிலக்குகளுடன்" "இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும்" தடை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் அந்த நேரத்தில் திட்டமிட்டிருந்தது.

மேலும், “டிஜிட்டல் வடிவில் நாணயத்தைச் சேர்க்க, ‘வங்கி நோட்டு’ வரையறையின் நோக்கத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934இல் திருத்தம் செய்வதற்கு அக்டோபர் 2021 இல், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசாங்கம் ஒரு முன்மொழிவைப் பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி பயன்பாட்டு வழக்குகளை ஆய்வு செய்து, மத்திய வங்கி டிஜிட்டல் நாணய்ங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு கட்ட செயலாக்க உத்தியை உருவாக்கி வருகிறது" என்று சௌத்ரி மக்களவையில் தெரிவித்தார்.

முன்னதாக, பிட்காயின் (Bitcoin), ஈதர் (Ether) போன்ற தனியார் கிரிப்டோகரன்ஸிகள் மூலம் பணமோசடி, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல், வரி ஏய்ப்பு போன்றவற்றின் முதலீட்டாளர்கள் ஈடுபடலாம் என ரிசர்வ் வங்கி பலமுறை கவலை தெரிவித்தது.
மேலும், டிஜிட்டல் கரன்சியின் நன்மைகள் மற்றும் அபாயங்களைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கி மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்துவதை ஓர் இலக்காக கொண்டுள்ளது.

டிஜிட்டல் ரூபாயின் அறிமுகம் குடிமக்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

டிஜிட்டல் ரூபாயை எவ்வாறு பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களின் முன்மொழியப்பட்ட பல மாதிரிகள் உள்ளன. மேலும் ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு முறையான அறிவிப்பு விவரங்களை வழங்கும்.
ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், தற்போதைய டிஜிட்டல் கட்டண அனுபவத்திற்கு மாறாக டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை உடனடியாக தீர்வாக இருக்கும். இதனால் மக்கள் அதன்பக்கம் சாய வாய்ப்புகள் அதிகமுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Rbi Cryptocurrency Digital India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment