சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்வதற்கான 40:30:30 சூத்திரத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. சூத்திரத்தின்படி மதிப்பெண்கள், பன்னிரெண்டாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சூத்திரத்தின்படி, ஒவ்வொரு பாடத்தின் எழுத்து தேர்வு (Theory) மதிப்பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் பள்ளிகளால் நடத்தப்பட்ட பாட வாரியான முந்தைய தேர்வுகள் அல்லது இடைக்கால தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களிலிருந்து 40%, 11 ஆம் வகுப்பு வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களிலிருந்து 30% , மற்றும் அவர்களின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளிலிருந்து 30% ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படும். இந்த மதிப்பெண்கள் மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு உள் மதிப்பீட்டுத் தேர்வுகள் மற்றும் அந்த பாடத்திற்கான செய்முறைத் தேர்வுகளில் அவர்கள் பெற்ற உண்மையான மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும்.
எழுத்து தேர்வு மதிப்பெண்களுக்கான 30-30-40 சதவீதங்கள் எவ்வாறு கணக்கிடப்படும்?
பன்னிரெண்டாம் வகுப்பைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட யூனிட் தேர்வுகள், இடைக்காலத் தேர்வுகள் அல்லது பொதுத் தேர்வுக்கு முந்தைய எழுத்து தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி முதல்வர், பள்ளியின் இரண்டு மூத்த ஆசிரியர்கள் மற்றும் அண்டை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள் அடங்கிய ‘முடிவுக் குழுக்களின்’ விருப்பப்படி மதிப்பெண்கள் வழங்குவது விடப்படும்.
"எடுத்துக்காட்டாக, பொது தேர்வுக்கு முந்தைய தேர்வுகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படலாம் என்று கருதினால், அந்த தேர்வு மதிப்பெண்களுக்கு முழு வெயிட்டேஜ் வழங்க முடியும். ஆனால், மற்றொரு பள்ளியின் மதிப்பெண்கள் வழங்கும் குழு, பொதுத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகள் மற்றும் இடைக்கால தேர்வுகளுக்கு சமமான வெயிட்டேஜ் கொடுக்க முடிவு செய்யலாம், ” இவ்வாறு மதிப்பெண்கள் நடைமுறை இருக்கும் என்று சிபிஎஸ்இயின் அறிவிப்பில் உள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்புக்கு, 2019-2020 ஆம் ஆண்டின் இறுதியில் மாணவர்கள் எழுதிய இறுதி எழுத்துத் தேர்வுகளில் இருந்து அந்தந்த பாடங்களில் உள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
பத்தாம் வகுப்பை பொறுத்தவரை, ஒரு மாணவர் தங்கள் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட மூன்று முக்கிய பாடங்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின் சராசரியைக் கொண்டுக் கணக்கிடப்படும். இந்த சராசரி ஒவ்வொரு பாடத்தின் எழுத்துத் தேர்வு வெயிட்டேஜின் அடிப்படையில் அனைத்து பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.
இந்த கணக்கீடுகளுக்குப் பிறகு இறுதி அட்டவணை எப்படி இருக்கும்?
பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் கொண்டிருக்கும் பாடங்களுக்கு வெவ்வேறு எழுத்து தேர்வு-உள் மதிப்பீடு அல்லது செய்முறைத் தேர்வு மதிப்பீடுகள் உள்ளன. சிலருக்கு எழுத்து தேர்விற்கு 80 மதிப்பெண்களும், செய்முறை தேர்வுகளுக்கு 20 மதிப்பெண்களும், சிலருக்கு எழுத்து தேர்விற்கு 70 மற்றும் செய்முறை தேர்வுகளுக்கு 30 மதிப்பெண்களும் உள்ளன. அனைத்து பாடங்களுக்கும் உள்ளக மதிப்பீட்டு தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் ஏற்கனவே பெரும்பாலான பள்ளிகளில் முடிக்கப்பட்டுள்ளன. தேர்வுகளை முடிக்காத பள்ளிகளுக்கு மீதமுள்ள தேர்வுகளை ஆன்லைனில் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் ஒவ்வொரு பாடத்திலும் கணக்கிடப்பட்ட எழுத்து தேர்வு மதிப்பெண்களில் சேர்க்கப்படும். அட்டவணை இது போல இருக்கும்:
தரப்படுத்தல் செயல்முறை என்ன?
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் வேறுபாடு இருக்கும். இதனை தீர்க்க மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சராசரியாக வருமாறு கணக்கிட வேண்டும். இதற்கு மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தொகுக்கப்படும். அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த வாரிய தேர்வுகளில் எந்த வாரியத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டார்களோ அந்த மதிப்பெண்கள் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
“ஒவ்வொரு பாடத்திற்கும், அந்த பள்ளியின் குறிப்பிட்ட ஆண்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட மதிப்பெண்களின் பரந்த விநியோகத்தை பள்ளி பின்பற்ற வேண்டும்.
2020-2021 ஆம் ஆண்டிற்கான பள்ளியால் மதிப்பிடப்பட்ட பாட வாரியான மதிப்பெண்கள் +/- 5 மதிப்பெண்களுக்குள் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், 2020-2021 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட பள்ளியின் ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண்கள், அனைத்து பாடங்களுக்கும், குறிப்பிட்ட ஆண்டில் பள்ளி பெற்ற ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண்களை 2 மதிப்பெண்களால் தாண்டக்கூடாது ”என்று மிதமான செயல்முறை தொழில்நுட்பத்தின் அட்டவணைக் கொள்கை கூறுகிறது.
இந்த அட்டவணை மூலம் பாஸ் மதிப்பெண்கள் பெறாத மாணவருக்கு என்ன நடக்கும்?
ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ‘கம்பார்ட்மென்ட்’ பிரிவில் வைக்கப்படுவார்கள், மேலும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கம்பார்ட்மென்ட் தேர்வு நடத்தப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கட்டாயம் மறு தேர்வு எழுதக் கூடிய பிரிவில் வைக்கப்படுவார்கள்.
மதிப்பீட்டில் மகிழ்ச்சியாக இல்லாத மாணவர்களுக்கான பிற வாய்ப்புகள் என்ன?
மதிப்பீட்டு முறை அல்லது அவர்கள் பெறும் மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்வுகள், தேர்வுகளை நடத்துவதற்கு சூழல் உகந்ததாக இருக்கும்போது நடக்கும். இந்த விருப்பத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களாகக் கருதப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.